அங்க சுத்தி இங்க சுத்தி .. கடைசியில் அம்மன்கிட்ட நியாயம் கேட்ட ரோஜா...!
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. சுந்தர்ராஜன் இந்த சீரியலில் ரெண்டு பொண்ணுங்களுக்கு அப்பாவா நடிச்சுருக்கார்.
இவரோட ரெண்டாவது பொண்ணு, முதல் பொண்ணு சூர்யாவை பார்க்க வந்த ராஜா கூட வேலை செய்துகிட்டு இருந்துச்சு. அப்போ ராஜா மேல லவ் வந்துருச்சு, ஆனா ராஜாவுக்கு ரோஜாவை பிடிக்கலை. பொண்ணு பார்க்க வந்த இடத்துல ரோஜாவோட அக்கான்னு தெரியாம சூர்யாவை ராஜாவுக்கு புடிச்சு போகுது.
என்னென்னவோ மாயாஜாலம் செய்து கல்யாணத்தை நிறுத்திவிட்டு, தன் ஆட்டத்தைத் துவங்கிய ரோஜா அதிலும் தோற்று போய் போலீஸ்ல மாட்டினதுதான் மிச்சம்.

மிரட்டல்
லாக்கப்பில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ரோஜா, அப்பாவை ஆஸ்பத்திரியில் பார்த்துட்டு அவரையும் மிரட்டிவிட்டு வெளியே வர்றா. அப்போதான் கோயிலில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வந்த சூர்யாவைப் பார்த்து அவளையும் மிரட்டிட்டு போறா.அப்பா சொன்னாங்க ஆட்டுக்குட்டி சொன்னுச்சுன்னு ராஜாவை கல்யாணம் செய்துகிட்டே ரெண்டு பேரும் உயிரோட இருக்க மாட்டீங்கன்னு சொல்லிட்டு போறா

அம்மனிடம்
இரவு தனியாக கோயிலுக்கு போன ரோஜா அம்மனிடம் பேசறா. அம்மா நான் எத்தனையோ முறை உன்னை பார்த்து கும்பிட்டு இருக்கேன். இப்போ இந்த நேரத்துல தனியா வந்து உன்கிட்ட பேச வேண்டிய நிலைமை. நான் சொல்றதை நல்லா கேளு.

ஒருத்தி
ஒருவனுக்கு ஒருத்தின்னு வாழறதுதான் நம்ம பண்பாடு. நான் ராஜாவை முதலில் பார்த்தப்பவே எனக்கு பிடிச்சு போச்சு.. அவன் படிப்பு, வேலை வாங்குற விதம், அதிகாரம் பண்ற தோரணைன்னு ரொம்பவே புடிச்சு லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழணும்னு ஆசைப்பட்டேன்.

வித வேண்டுதல்
ஒவ்வொருத்தரும் உன்கிட்ட ஒவ்வொரு வித வேண்டுதல் வச்சு, வேண்டுதலை நிறைவேத்த ஒவ்வொருவரும் வேற வேற விதமா எதாவது செய்வாங்க. பாலாபிஷேகம், அர்ச்சனை, பொங்கல் வைக்கறது, கிடா வெட்டறதுன்னு. நான் கிடா வெட்டி வேண்டுதல் வைக்கற மாதிரி கொஞ்சம் கடுமையா நடந்துக்கிட்டேன் ராஜாவை கல்யாணம் செய்துக்க

நான் மாறலை
இவ்வளவு நடந்தும் நம்ம பண்பாட்டை மீறாம, ராஜாவைத்தான் கல்யாணம் செய்துக்கணும்னு இருக்கேன். என் கூட பிறந்திருக்காளே ஒருத்தி.. அவ முதலில் கோபியை காதலிச்சா.. அப்புறம் அப்பா சொன்னாருன்னு ராஜாவை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சா..அப்புறம் கோபியை கல்யாணம் செய்துக்கறேன்னு சொன்னா..அடுத்து இப்போ ராஜாவை கல்யாணம் செய்துக்க அப்பா சத்தியம் வாங்கிட்டாராம். இவ என்ன பொண்ணா.. நீயே சொல்லு..

மிரட்டல்
இதோ பாரு அம்மா.. எனக்கு ராஜாவை கல்யாணம் செய்துகிட்டு சந்தோஷமா வாழணும். அதுக்கு என்னவழி பண்ணணுமோ அதை பண்ணு...இல்லே.. மறுபடியும் நான் என் வழியில என்ன செய்யணுமோ அதை செய்துக்கறேன்.. இதை உன்கிட்ட சொல்லிட்டு போகத்தான் வந்தேன்னு சொல்லிட்டு போறா...
கல்யாண வீடு சீரியலில் ரோஜா கேரக்டர் கொஞ்சம் வித்தியாசமான கேரக்டராத்தாங்க இருக்கு.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications