திருமணத்திற்கு பிறகு கணவரோடு மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்த ரோஜா சீரியல் நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: சன் டிவியில் ரோஜா சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை பிரியங்கா நல்காரிக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிவடைந்தது.

அப்போது அவர் நடித்து வந்த சீதாராமன் என்ற சீரியலில் இருந்து திடீரென்று அவர் விலகி இருந்தார்.அதைத் தொடர்ந்து சில மாதங்கள் கழித்து இப்போது ஜீ தமிழில் நளதமயந்தி என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
அந்த வகையில் வந்தாரை வாழவைக்கும் தமிழ் மக்கள் சீரியல்களில் கதாநாயகியாக அறிமுகம் ஆகுபவர்களையும் கூட தங்கள் வீட்டு பிள்ளை போல பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் ஒருவர்தான் பிரியங்கா நல்காரி. இவர் முதல் முறையாக ரோஜா சீரியலில் அறிமுகமாகி இவருடைய சொந்தப் பெயரே தெரியாமல் இப்போது வரைக்கும் இவரை ரசிகர்கள் பலரும் ரோஜா என்றுதான் அழைத்து வருகிறார்கள்.
குடும்பத்திற்காக தியாகம்: தன்னுடைய எந்த கஷ்டத்தையுமே வெளியே காட்டாத பிரியங்கா நல்கரி இவருடைய வீட்டில் மூத்த பெண் ஸ்கூல் படிக்கும்போதே பைனான்ஸ் ஆக ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார். ஆனாலும் இவருக்கு டான்ஸ் ரொம்ப பிடிக்கும் என்பதினால் இவரோட அம்மா இவரை டான்ஸ் ஷோவில் கலந்துக்க வைத்திருக்கிறார்.
அதனால் இவருக்கு கிடைத்த பணத்தில் தான் இவருடைய படிப்பு செலவிற்கு செலவழித்து இருக்கிறார். இவருடைய இரு தங்கைகளின் படிப்புக்காக தன்னுடைய படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டார். சின்ன வயதிலேயே நிறைய ஸ்டேஜ் ஷோவில் கலந்து கொண்டிருந்ததால் அதன் மூலமாக நடிப்பிற்கு வந்திருக்கிறார். தற்போது சமீபத்தில் தான் அவருடைய சகோதரியின் திருமணத்தை பிரம்மாண்டமாக பிரியங்கா நடத்தி வைத்திருந்தார்.
ஆரம்பத்தில் உருவ கேலி: காலேஜ் படிக்கும் போது பிரியங்காவின் உயரத்தையும் லுக்கையும் பார்த்து பலர் கலாய்த்து இருக்கிறார்கள். ஆனால் இப்போது அதே உயரத்தையும், ஸ்ட்ரக்சரையும் தான் தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. இதனை நினைத்து எனக்கு இப்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது என்று பிரியங்காவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
புசுபுசுவென உடல் அமைப்பையும் பலருக்கும் பிடித்திருக்கிறது. ஒல்லியாக இருந்தால்தான் அழகு என்று நினைத்து இருந்த ரசிகர்களின் மத்தியில் கொழுக்கு முழுக்கு என்று இருந்தாலும் நம்ம சன் டிவி ரோஜா மாதிரி இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

திடீர் திருமணம்: இந்த நிலையில் ரோஜா சீரியல் முடிவடைந்த பிறகு இவருக்கு ஜீ தமிழில் சீதாராமன் என்ற சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் திருநெல்வேலி, தூத்துக்குடி பாஷை பேசி அந்த ஊரு பெண்ணாகவே இவர் மாதிரி இருந்தார். இந்த நிலையில் அப்போதுதான் இவருக்கு திடீரென்று திருமணம் முடிவடைந்தது. ஏற்கனவே பல வருடங்களாக இவர் காதலித்து வந்திருந்த நிலையில் எளிமையாக தன்னுடைய திருமணத்தை முடித்து அதை ரசிகர்களிடம் பகிர்ந்திருந்தார்.
ரெஸ்டாரண்ட் தொடக்கம்: அதைத்தொடர்ந்து சில மாதங்களிலேயே சீதாராமன் சீரியலில் இருந்து இவர் விலகி விட்டார். அதைத் தொடர்ந்து சில மாதங்களாக எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த நிலையில் இப்போது ஜீ தமிழில் நளதமயந்தி என்று என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று இவரும் அவருடைய கணவரும் சேர்ந்து புதியதாக ரெஸ்டாரண்ட் ஒன்று தொடங்கி இருக்கின்றனர். அந்த புகைப்படங்களை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். அதற்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications