ரோஜா சீரியலில் திடீர் மாற்றம்...இனி கதையே மாறப்போகிறது
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலின் திடீர் மாற்றம் ரசிகர்களுக்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளது.
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ப்ளாஷ் பேக் வந்து கதைக்கு சுவாரசியத்தை கூட்டியுள்ளது.

உண்மையை நிரூபிப்பாரா அர்ஜுன்??
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டது. இப்ப வரைக்கும் இந்த சீரியலில் கதைக்களம் ரசிகர்களை கவர்ந்த வகையில் இருப்பதால் டிஆர்பியை முன்னணியில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் ரோஜா கேரக்டரில் பிரியங்கா நன்கரியும் அவருடைய இருக்கு ஜோடியாக அர்ஜுன் கேரக்டரில் சிபு சூரியன் நடித்து வருகின்றனர். இதில் பல திரை பிரபலங்கள் நடித்து வந்தாலும் தற்போது கதைகளம் விறுவிறுப்பை கூட்டி உள்ளது. ரோஜா அர்ஜுனின் அத்தை மகள் தான் என்று நிரூபிப்பதற்காக அர்ஜுன் மற்றும் ரோஜா இருவரும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

வரப்போகும் பிளாஷ்பேக்
ரோஜாவின் அம்மா செண்பகம் தன்னுடைய மகளை ஏற்றுக் கொள்ளும் தருணத்தில் தற்போதும் பிளாஷ்பேக் வந்துள்ளது. இதில் குழந்தைப்பருவத்தில் ரோஜா மற்றும் அணு இருவரும் வளர்ந்த விதம், அவர்கள் பிரிந்து ரோஜா அனாதை இல்லத்தில் வளர்ந்தது, அதற்குப்பிறகு அர்ஜுனை சந்தித்தது என பல முக்கியமான திருப்புமுனைகள் வரப்போகிறது. வரும் வாரத்தில் ரசிகர்களின் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் டிஆர்பி கிடைக்க வழிவகுக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அது யாராக இருக்கும்?
தற்போது பிளாஷ்பேக் சூட்டிங் போட்டோஸ்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் இரு குழந்தைகள் கையை பிடித்துக்கொண்டு புதுமுகம் நடிகர் ஒருவர் அறிமுகமாகிறார். இவர் என்ன கேரக்டரில் இந்த சீரியலில் என்ட்ரி கொடுக்கப் போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அது அணுவின் அம்மாவாக தான் இருக்கும். அவர் தான் ரோஜா மற்றும் அனுவை வளர்த்து வந்துள்ளார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

புதுமுகங்களின் அதிரடி என்ட்ரி
ரோஜா தான் செண்பகத்தின் உண்மையான மகள் என்பதை புரிய வைப்பதற்காக இந்த பிளாஷ்பேக் இருக்குமா??என்று கேள்விகள் எழுந்து வருகிறது. இதை குடும்பத்தினர் அனைவரும் ஏற்றுக் கொள்வார்களா??என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த வாரத்தில் மூன்று புதுமுகங்களும் இந்த சீரியலில் அறிமுகமாகின்றனர். அவர்களின் வருகையால் ரோஜா சீரியலில் ஏற்படும் மாற்றம் ரசிகர்களுக்கு பிடித்ததாக இருக்குமா என்று பொறுத்திருந்து பார்த்தால் தெரியும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications