Kalyana Veedu Serial: நீலிக்கண்ணீர் வடித்த ரோஜா.. ஆனால் அந்த பேய்க் கதை சூப்பருங்கோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் சூர்யாவின் தங்கச்சி ரோஜாவை ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் காமிச்சு இருக்காங்க.

வில்லியா, இல்லை ஆசைப்பட்டது கிடைக்கலேன்னு மனோரீதியா இப்படி மாறிட்டாளான்னு ரொம்ப யோசிக்க வைக்குது இந்த கேரக்டர்.

எல்லாமே நாம தெரிஞ்சுக்க வேண்டியதாவும் இருக்கறதுனால, இந்த சீரியலை பார்க்கும் ஆர்வத்தையும் தூண்டி விடுது.

வெளிவந்த ரோஜா.

வெளிவந்த ரோஜா.

ஜாமீனில் வெளிவந்த ரோஜா, தனது அப்பாவை ஆஸ்பத்திரியில் போயி பார்த்துட்டு, ராஜாவுக்கு புத்திமதி சொல்லி எனக்கு கட்டி வைக்கற வழிய பாருங்கன்னு சொல்லி மிரட்டிட்டு, போலீஸ் முன்னால நீலிக்கண்ணீர் வடிச்சுட்டு போறா. வழியில் அக்காவைப் பார்த்து அவளையும் மிரட்டியாச்சு..கோயிலில் அம்மனிடம் வேண்டிக்கறேன்னு, மிக கொடூரமான வேண்டுதலையும் வச்சுட்டா.

ராஜாவின் குரு

ராஜாவின் குரு

இப்போ ராஜாவின் குரு ஒருத்தர் மலையாள மாந்திரீகர் மாதிரி இருப்பார். ராஜாவுக்கு எல்லாமே அவர்தான். அவர் வீட்டுக்கு திடீரென்று என்ட்ரி குடுத்து, அவரை பகீர் அடையச் செய்யறா. அப்போது அவரின் சாப்பாட்டை ரோஜா பிடுங்கி சாப்பிட்டுட்டு உங்களுக்கு நீலி பேய் கதை தெரியுமான்னு பயமுறுத்தறா.

நடுக்கத்தில் குரு

நடுக்கத்தில் குரு

ரோஜாவின் இந்த பேச்சை கேட்டு நடுக்கத்தில் குரு இருக்க.. பயப்படாதீங்க குருவே...கிராமத்துல ஒரு பணக்காரன் இருந்தான்... அவனுக்கு கல்யாணம் ஆகி புள்ளைங்களும் இருந்துச்சு...பொருள் தேட நகரத்துக்கு போனான். அங்க நீலின்னு ஒரு பொண்ணை காதலிச்சு கல்யாணமும் செய்துகிட்டான்.பொருள் தேடல் முடிஞ்சவுடனே ஊருக்கு கிளம்பினான்.நானும் வர்றேன்னு நீலி அடம்பிடிச்சா.

கொன்னுட்டான்

கொன்னுட்டான்

என்னடா இவள் பெரிய இம்சையா இருக்காளேன்னு சொல்லிட்டு, நீலியை ஆத்தங்கரையில கொன்னுட்டான். ஆசை நிறைவேறாத நீலி பேயா மாறிட்டா. இந்த பணக்காரனும் வாழ்நாள் முடிஞ்சு செத்துட்டான். அடுத்த ஜென்மமும் வந்துச்சு. அப்போ அந்த நீலி இவனை அடையாளம் கண்டு, அவனை பழி வாங்கணும்னு நினைச்சா.

பஞ்சாயத்து

பஞ்சாயத்து

நீலி ஒரு அழகான பெண்ணா மாறினா... ஒரு மர துண்டை எடுத்து புள்ளையா மாத்தினா. பஞ்சாயத்து கூட்டினா... இவன் என்னை கல்யாணம் செய்துகிட்டான். ரெண்டு பேருக்கும் இந்த புள்ளை பொறந்துச்சு.. ஆனா, இப்போ என்னை கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு சொல்றான்னு சொல்றா.

யாரும் நம்பலை

யாரும் நம்பலை

இவன் ஒழுக்கமானவன்.. நீ சொல்றதை நம்ப முடியலைன்னு ஊர் பெரியவுங்க சொல்றாங்க. எல்லார்கிட்டயும் நீலி கண்ணீர் விட்டு கதறி அழுதா... ஒரு பொண்ணு இப்படி அழுது பொய் சொல்ல மாட்டான்னு ஊர்க்காரங்க அவனுக்கு நீலியை கல்யாணம் செய்து வச்சாங்க.

ஜென்மம் கடந்து

ஜென்மம் கடந்து

விடிந்து பார்த்தால் அந்த இளைஞன் ரத்தம் கக்கி செத்து கிடக்கான்.. நீலியை காணோம்.. மர துண்டுதானே கிடந்துச்சு.. ஆஹா.. தப்பு செய்யலை தப்பு செய்யலைன்னு இவன் சொன்னான். நீலி கண்ணீரை பார்த்து இப்படி ஏமாந்துட்டோமேன்னு மக்கள் வருத்த பட்டங்களாம் தவறான தீர்ப்பு குடுத்தத்துக்கு தண்டனையா மக்கள் எல்லாரும் தற்கொலை பண்ணிகிட்டாங்களாம்.

சில பல கொலைகள்

சில பல கொலைகள்

குருவே.. உங்களுக்கு பதட்டமாத்தான் இருக்கும்.. ஒரு ஜென்மம் கடந்துகூட ஆசைப்பட்டவன் கிடைக்கலேன்னு பழி வாங்கறாங்க.. நான் இந்த ஜென்மத்துலயே பழி வாங்குவேன்...அந்த ராஜா லூசுகிட்ட சொல்லுங்க.. அவன் வில்லன் மாதிரி பேசறான்.. அவனுக்கு அதெல்லாம் செட்டாகாது. பேசாம என்னை கல்யாணம் செய்துக்க சொல்லுங்க.. அதை விட்டுட்டு ரோஜாவை கல்யாணம் செய்துக்காத..அப்படி இப்படின்னு சொல்லி குடுத்தீங்க.. இங்கயும் சில பல கொலைகள் விழும்.. அதுல நீங்களும் இருப்பீங்கன்னு பயமுறுத்திட்டு போறா....

ஒரு வழியா கல்யாண வீடு சீரியல் மூலமா நீலிக்கண்ணீர்னா என்னன்னு தெரிஞ்சு போச்சுங்க...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+