Sundari Neeyum Sundaran Naanum Serial: புரட்டாசி படையலில் ஐயோ பத்திக்கிச்சா?!
சென்னை: நடிகர் தனுஷ் சாயா சிங் இருவரும் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் திருடா திருடி. இந்த படத்தில் இருவரும் எப்போதும் எலியும் பூனையுமாகவே இருப்பார்கள்.
ஆனால், காலப் போக்கில் மனதுக்குள் இருவருக்குள்ளும் காதல் பொங்கி வழியும்.. சொல்லிக்கொள்ள மாட்டார்கள். இது ஒரு வெற்றி ஃபார்முலாதான்.
இதை கையில் எடுத்து இருக்கிறது விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல். நாயகன் வேலுவை பிடிக்கவே பிடிக்காது நாயகி தமிழ்ச்செல்விக்கு. பார்க்கும் போதெல்லாம் சண்டைதான்.

பாட்டி வேலு
பாட்டிக்கு பார்த்த மாத்திரத்தில் தமிழ்ச் செல்வியைப் பிடித்துப் போகிறது. இவளை மாதிரி என்ன இவளையே வேலுவுக்கு கட்டி வச்சால்தான் அவனுக்கு எப்போதும் அரசியல் என்று சுற்றித் திரியாமல் குடும்பத்தில் நாட்டம் இருக்கும். பொறுப்பு வரும் என்று பாட்டி நினைக்கிறாங்க.

பாட்டி தமிழ்ச்செல்வி
பாட்டி வேலுவை மனதில் வைத்தே வேண்டும் என்றே தமிழ்ச்செல்வி நடத்திவரும் அரசு உதவி பெறும் பள்ளிக்கு டொனேஷன் கொடுக்கிறேன் என்று தமிழ்ச்செல்வி மனசில் இடம் பிடிச்சுடறாங்க. நானும் நீயும் இனிமேல் ஃபிரண்ட்ஸ். அடிக்கடி இனி வீட்டுக்கு வரணும்னு சொல்றாங்க.

வீட்டுக்கு அடிக்கடி
வீட்டுக்கு அடிக்கடி போகிறாள் தமிழ்ச்செல்வி. புரட்டாசி படையல் போட வேண்டும். ஆனால், இந்த வீட்டில் இருக்கறவங்கள் யாரும் இதை முன்னெடுத்து செய்ய மாட்டாங்க.. நீதான் தமிழ்ச்செல்வி படையல் போட வீட்டை சுத்தம் செய்து, தயார் செய்ய வேண்டுமென்று சொல்றாங்க. இது வீட்டில் இருக்கும் சின்ன மருமகளுக்கு பிடிக்கலை.
எல்லா வேலைகளும் முடிந்து ஒரு வழியாக படையலுக்கு சமையல் செய்கிறாள் தமிழ்ச்செல்வி. அப்போது வாசனை அருமையாக இருக்கிறது என்று அடுப்படி பக்கம் வரும் வேலு, சுடச்சுட இனிப்பு சுழியம் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு சூடு தாங்காமல் அலறுகிறான்.

தண்ணீரை எண்ணெயில்
நல்லபடியாக படையல் போட்டுவிடக் கூடாது என்று பாட்டியின் சின்ன மருமகள் எண்ணெய் காய்ந்து கொண்டு இருக்கும்போது அதில் தண்ணீரை ஊற்றி விடுகிறாள். தமிழ்ச்செல்வி கையில் தெறித்து காயமாகி விடுகிறது. வேலு பதறிப் போயி இங்க் பாட்டிலை எடுத்து வந்து ஊத்துகிறான். எனக்கு ஒண்ணும் இல்லை பாட்டி என் கையால் பூஜை செய்யறேன் பாட்டி என்று பிடிவாதமாக தமிழ்ச்செல்வி பூஜை செய்ய, சாம்பிராணி தூபக்கால் தவறி விழப் போகையில் சேர்ந்து கை பிடிக்கிறான் வேலு.
ஒருவர் முகத்தை ஒருவர் நோக்க..கண்கள் சந்தித்துக் கொள்கின்றன.பத்திக்கிச்சு என்பது போன்ற உணர்வு .. இது நிஜமா நிஜமில்லையா? இரவு விஜய் டிவியில் பாருங்கள்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications