Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பத்து விரல்களையும் பக்குவமாக விரித்து பயம் காட்டிய கண்ணம்மா.. பயந்து போன ரசிகர்கள்..

Subscribe to Oneindia Tamil

சென்னை : அழகை காட்டி மிரட்டுகிறார்கள் என்று கேள்வி பட்டிருப்போம் ஆனால் தற்போது அதை நிரூபித்து விட்டார் நம்ம ரோஷ்னி ஹரிப்ரியன்.

விஜய் டிவியின் கண்ணம்மாவாக பார்த்து வந்த ரசிகர்கள் இப்போ ரோஹினியின் அழகைப் பார்த்து அசந்து தான் போய் விட்டார்களாம்.

அதிகமான மேக்கப் எதுவும் இல்லாமல் மரம் செடிகளுக்கு இடையில் இருந்து இவர் பார்க்கும் பார்வையை பார்த்ததும் ரசிகர்கள் தங்களுடைய அன்பை கொட்டுகிறார்கள்.

கொண்டாடும் ரசிகர்கள்

கொண்டாடும் ரசிகர்கள்

சீரியலில் முழுக்க முழுக்க இவரை புடவையில் பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது குர்தாவில் இவருடைய குதூகலிக்கும் அழகை பார்த்து குளிர்ந்து போய் விட்டார்களாம். ஏற்கனவே ஒரு சில இடங்களில் மழை பொழிந்து கொண்டிருக்கும் போது இவருடைய இந்த போட்டோவை பார்த்ததும் ரசிகர்களின் மனதிற்குள் சில்லென்று நிலவரம் அப்படியே மாறிப் போய் விட்டதாம். சீரியலில் இவர் சிடுசிடுவென்று கெத்தாக இருந்தாலும் இவருடைய குழந்தை மனதை கண்டுகொண்டோம், இதுதான் இவருடைய ஒரிஜினல் என்று அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரோஷ்னி ஹரிப்ரியனுக்கு சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ரசிகர்கள் அதிகம் தான் அதுவும் இன்ஸ்டாகிராமில் சொல்லவே வேண்டாம்.

அறிமுகமே அமர்க்களம் ஆகிடுச்சு

அறிமுகமே அமர்க்களம் ஆகிடுச்சு

இவர் தன்னுடைய திரை பயணத்தை ஆரம்பித்தது இதே இன்ஸ்டாகிராமில் தான் அப்பவே இருந்து இவருக்கு ரசிகர்கள் அதிகம் தான். தற்போது கண்ணமாவாக மாறியதும், பட்டாளம் கொஞ்சம் விரிவடைந்து விட்டது. நாளுக்குநாள் ரசிகர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கிறது. அதனால் ரசிகர்களின் கமெண்ட்களுக்கு இவரால் முன்பு இருந்த மாதிரி ரிப்ளை செய்ய முடியவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனாலும் இவர் ஒரு ரிப்ளை பண்ண மாட்டேங்குறாரே என்று பல ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகின்றனர். இவருடைய லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து பல ரசிகர்கள் இவருக்கு ஷாட்டின்களை பறக்க விட்டு வந்தாலும் பலர் வாழ்த்தி கமெண்ட்களையும் கொட்டுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தீப்பொறி பறக்கும் இமேஜ்களும் குளிராமல் அனல் வீசிக்கொண்டே இருக்கிறது.

இதுதான் உண்மை பாஸ்

இதுதான் உண்மை பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ஆரம்பத்தில் ரசிகர்கள் அந்த அளவிற்கு கண்டுகொள்ளாமல் இருந்தாலும், போகப்போக ரசிகர்களின் மனதை கவர்ந்து விடுகிறது. அந்த வகையில் பாரதிகண்ணம்மா சீரியலும் ஒன்றுதான். இந்த சீரியல் ஆரம்பத்திலிருந்து நிலைக்கும் நாட்கள் போகப்போக டிஆர்பி யில் முன்னேறி நம்பர் 1 இடத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்கு அதிகமான மீம்ஸ் கிரியேட்டர்களில் சப்போர்ட் இருந்தாலும், சீரியலின் கதையும் விறுவிறுப்பு குறையாமல் அடிக்கடி திருப்பங்கள் வந்து ரசிகர்களை ரசிக்க தான் வைத்துக்கொண்டிருக்கிறது. பல ரசிகர்கள் இந்த சீரியலுக்காக காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர். இதற்கான ப்ரோமோ வந்ததுமே தங்களுடைய கமெண்டுகளை கொடுக்கவும் தயங்குவதில்லை. ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்த சீரியலை அதிகமாக நெட்டிசன்களும் கலாய்த்துக் கொண்டு இருக்கின்றனர். பாரதி எப்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பார் என்பது தான் பலருடைய கேள்வியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கண்ணம்மா சமையல் அம்மாவாக நடித்துக் கொண்டிருப்பதை பார்த்தும் பலர் கலாய்த்து வருகின்றனர்.

அந்த அழகு மாறலையே

அந்த அழகு மாறலையே

கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷ்னி ஹரிப்ரியன் முதல் முதலாக அறிமுகம் ஆனது இந்த சீரியலில் தான். இதுவரைக்கும் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் எதிலுமே அனுபவம் இல்லாமல் முதல்முறையாக இந்தத் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவர் ஆரம்பத்தில் கொஞ்சம் பயப்பட தான் செய்திருக்கிறார். நாட்கள் செல்ல செல்ல தன்னுடைய நடிப்பை மிளிர செய்திருக்கிறார். ரோஷ்னி ஹரிப்ரியன் சீரியலில் எவ்வளவுதான் பிஸியாக இருந்தாலும் அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து தன்னுடைய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதில் ஆர்வம் அதிகமானவர் தான். அந்த மாதிரி தற்போது இவர் செடிகளுக்கு பக்கத்தில் நின்றுகொண்டு சிம்பலாக எடுத்த போட்டோக்களை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் கவிதைகளை பொழிகிறார்கள். அதுவும் இவருடைய அந்த கண்ணு தான் பலருடைய தூக்கத்தையே தொலைக்க வைத்து வருகிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+