என்ன ஒரு குலுக்கு?என்ன ஒரு தழுக்கு?நம்ம ரோஷ்னியா இது!
சென்னை : பட்டு சேலை சரசரக்க குலுங்கி குலுங்கி ஆட்டம் போட்ட ரோஷ்னி ஹரிப்ரியனை பார்த்து அசந்துபோன ரசிகர்கள் இது நம்ம கண்ணம்மா வா என்று ஆச்சரியத்தை கொட்டுகிறார்கள்.
ட்ரெண்டிங் பாட்டுக்கு ஹோம்லியாக குத்தாட்டம் போட்ட ரோஷ்னிக்கு வாழ்த்துக்கள் குவிகின்றது. அதுவும் கடைசியாக சுற்றிவந்து சிரிக்கும் சிரிப்பை பார்த்து பலர் சொக்கி போய் விட்டார்களாம்.
அட இத்தனை நாள் புடவையில் பார்த்து இருந்தாலும் இப்போ இந்த சிரித்த முகத்தை பார்க்கும் போது மனசுக்குள்ள பல மத்தாப்பு பூப்பூக்குதாமே.

ரசிகர்களின் மனதையும் ஆட்டி விட்டாரே
'வேட்டி எடுத்துக் கட்டிக்கோ' என்னும் பாட்டுக்கு, பட்டுப் புடவையில் பாரதிகண்ணம்மா சீரியலின் கண்ணம்மா போட்ட ஆட்டம் தான் இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வருகிறது. இதுவரைக்கும் சீரியலில் இவரை புடவையில் பார்த்திருந்தாலும் தற்போது வேற லெவலில் கலக்கியிருக்கிறார். புடவை ஒன்னும் இவருக்கு புதிதல்ல, ஆனால் புடவையோடு வந்திருக்கும் கண்ணம்மா புதுசுதான். அவருடைய ரசிகர்களுக்கு தினமும் புதுசு புதுசாக தான் தெரியுறாராம். அவருடைய ஆட்டத்தை பார்த்து அசந்துபோன ரசிகர்கள் கண்ணம்மா இது என்னம்மா என்று ரைமிங்கில் கமென்ட்களை போட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஒரு சிலர் இந்த மாதிரி சந்தோசமான முகத்தை பார்க்கும் போதுதான் மனதிற்கு அழகாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. அதனால் இப்படியே இருங்கள் என்று இவருக்கு ஆசீர்வாதங்களையும் அள்ளித் தெளிக்கின்றனர். சீரியல் வேறு நிஜம் வேறு என்பதை மறந்து போன ரசிகர்கள் கமெண்ட் களிலும் எப்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பீர்கள் என்று கேட்டு வருகின்றனர்.

மீம்ஸ்களால் உலக நாடுகளையும் சுற்றியாச்சு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடித்து வரும் ரோஷ்னி ஹரிப்ரியன் அனைவருக்கும் தெரிந்த பரிச்சயமான முகமாக மாறிவிட்டார். இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் வட்டம் பெருகிக் கொண்டே வருகிறது. அதுவும் தற்போது பல வீடுகளில் இவருடைய பெயர்தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. என்ன....இவருடைய உண்மையான பெயரை மறந்து இவரை கண்ணம்மா என்று வீட்டுப் பெண்களும், சமையல் அம்மா என்று குழந்தைகளும் செல்லமாக அழைத்து வருகின்றனர். ரசிகர்களின் ஆதரவு இவருக்கு ஒருபுறம் பெருகிக் கொண்டிருக்கிறது என்றாலும் மற்றொருபுறம் நெட்டிசன்கள் இவருக்கு வஞ்சனை இல்லாமல் மீம்ஸ்களை போட்டு வருகின்றனர். ஏற்கனவே பல மீம்ஸ்களை போட்டுத்தான் பாரதிகண்ணம்மா சீரியலை இந்த அளவிற்கு பிரபலம் ஆக்கி விட்டனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் மீம்ஸ்கள் பறக்க ஆரம்பித்து விட்டது.

டிஎன்ஏ எப்பதான் எடுப்பீங்க?
கடந்த ஒரு சில வாரங்கள் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களின் எதிர்பார்த்தபடி சந்தோஷமாகவே ஒலிபரப்பப்பட்டு வந்தது. கண்ணம்மாவின் வீட்டில் பாரதி தங்கியிருந்தது, கண்ணம்மாவின் கஷ்டங்களை புரிந்து கொண்டதும் அவர்களுக்குள் ஒரு சில சில காதல் பார்வைகள் பரிமாறியதும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்து ரசித்து கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் இந்த சீரியலில் மீண்டும் பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பித்துவிட்டது. அதுவும் தற்போது லேட்டஸ்ட் ப்ரோமோ வில் வெண்பாவும் பாரதியும் பேசிக் கொண்டிருப்பது பார்த்து பல ரசிகர்கள் மீண்டும் ஆரம்பித்து விட்டார்களா? இவர்களின் கச்சேரியை....என்று புலம்பி வருகின்றனர். அதுவுமில்லாமல் கண்ணம்மா தான் பாவம் என்று இவர் மீது கரிசனை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. சீரியலில் இவர் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அதைத் தாண்டி சமூக வலைத்தளத்திலும் பிசியாக இருக்கிறார்.

எதிர்மறைகளை எடுத்தெரிந்தவர்
ரோஷ்னி ஹரிப்ரியன் சீரியலுக்கு வருவதற்கு முன்னரே காலேஜ் முடித்ததும் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு வேலை செய்யும் போது வேலை இவருக்கு பிடிக்காததால் திடீரென்று ரிசைன் லெட்டர் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்து விட்டார். ஆனால் வீட்டிற்கு வந்த பிறகுதான் இனி என்ன செய்யப் போகிறோம் என்று இவருக்கே பெரிய கேள்வி எழுப்பியிருக்கிறது. ஏதோ ஒரு கோபத்தில் செய்துவிட்டோம். அதற்குப் பிறகு பொறுத்திருந்து பார்ப்போம் என்று வீட்டில் ஒரு சில நாட்கள் இருந்திருக்கிறார். அப்படி இருக்கும்போது தான் இவரே தன்னைத்தானே போட்டோஸ் களை எடுத்திருக்கிறார் மாடலிங்கில் இவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக இவர் எடுக்கும் போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் எடிட் செய்து போஸ்ட் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது இவருக்கு ரசிகர்கள் அதிகமாக தொடங்கிவிட்டனர். கறுப்பாக இருந்தாலும் களையான அழகோடும் வசீகரிக்கும் பேரழகியாக இவர் ரசிகர்களின் மனதை கவர்ந்து வந்தார். இந்த நிலையில்தான் பாரதிகண்ணம்மா சீரியல் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதலில் நம்பாமல் இருந்த இவர் பின்பு ஆடிஷனில் கலந்து கொண்ட பிறகுதான் இவர் நம்பியிருக்கிறார்.ஆனால் முதலில் இவர் தான் இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கிறார் என்று தெரிந்ததும் கூட நடித்த சில நடிகர்களும், சூட்டிங் பார்ப்பதற்காக வந்த மக்களும் கூட இவரா கதாநாயகி என்ற ஆச்சரியத்துடன் கேட்டிருக்கின்றனர்.

குலுங்கி குலுங்கி ஆட்டம் தான்
ஆரம்பத்தில் இவரை பற்றி பலர் நெகட்டிவ் கமெண்டுகளை பேசிக் கொண்டிருந்தவர்கள் தற்போது ரோஷ்னியின் வளர்ச்சியை பார்த்து ஒதுங்கி தான் இருக்கிறார்கள். ஆனாலும் தன்னுடைய பாதையில் சிரித்த முகமாக சென்று கொண்டிருப்பது தான் இவருடைய பிளஸ் பாயிண்டாக இருந்து வருகிறதாம். அதனால் தான் இவரை பற்றி எவ்வளவு மீம்ஸ்கள் வந்தாலும் அதையெல்லாம் பாசிட்டிவாக மட்டுமே இவர் எடுத்துக் கொண்டாராம். ஆரம்பத்தில் இவரைப் பற்றி அதிகமாக மீம்ஸ்கள் பரவி வந்த நிலையில் பலர் நெகட்டிவ் கமெண்ட் களையும் போட்டு வந்தனர். தற்போது இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி விட்டனர். அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் இவருடைய கதைக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகி விட்டது. இதுவும் இவருக்கு பெரிய பிளஸ் பாய்ன்ட் தான். இவர் சீரியலில் கதாநாயகியாக மாறினாலும் தான் வந்த இன்ஸ்டாகிராமில் மறந்துவிடவில்லை. அதனால்தான் அடிக்கடி இவர் எடுக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்த மாதிரி தான் தற்போது பட்டுபுடவையில் இவர் ஆடிய ஆட்டத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். ஆனால் இவர் பதிவிட்டு ஒரு சில மணி நேரங்களுக்குள் லைக்களும் கமெண்டுகளும் குவிந்து வருகிறது.சீரியலில் இதுவரைக்கும் உம்முனு இருந்த கண்ணம்மாவை பார்த்து வந்த ரசிகர்கள் இப்போ கும்முன்னு துள்ளிக்குதிக்கும் ரோஷ்னியை பார்த்ததும் ரசிகர்களின் மனதை துள்ள தானே செய்யும்..
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications