மொட்டைமாடியில் துப்பட்டாவை அப்படி இப்படி.. ஆட்டிக் காட்டிய ரோஷ்னி.. ஒரே ரவுசுதான்!
சென்னை: புடவையிலேயே பார்த்த ரசிகர்களுக்காக தற்போது சுடிதாரில் வீடியோவை வெளியிட்டுள்ளார் கண்ணம்மா ..பார்த்ததும் ஸ்வீட் ஷாக்காகியுள்ளனர் ரசிகர்கள்
நீங்க நினைக்கிற மாதிரி ஒரு வீடியோவை ஈசியாக எடுத்துவிட முடியாது .அதற்குள் எத்தனை பிளாப் வரும் தெரியுமா என்றும் இந்த வீடியோவிலேயே சொல்லியுள்ளார் ரோஷ்னி.
இந்த சிரிப்பு ...இதுதான் உங்களுக்கு அழகு நீங்க எத்தனை சேட்டை பண்ணுனாலும் நாங்க இதைத்தான் ரசிக்கிறோம் என ரசிகர்கள் உருகி வழிகிறார்கள்.

நல்ல முன்னேற்றம்
அறிமுகமான முதல் சீரியலிலேயே பெரிய நடிகைகளின் சீரியல்களையும் அடித்து தூக்கிவிட்டு முன்னேறிக் கொண்டிருப்பவர் பாரதிகண்ணம்மா . இந்த சீரியலில் கண்ணம்மா என்ற பெயரைக் கேட்டதுமே சும்மா அதிருதில்ல என்னும் வசனத்திற்கு ஏற்ப இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகமாகி வருகின்றனர். இவருடைய வளர்ச்சி வெறித்தனமாக இருந்தாலும் இவர் ரொம்ப சிம்பிளாக தான் இருந்து வருகிறார்.

பேரழகி
கருப்பு பேரழகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரோஷ்னி ஹரிப்ரியனை பார்த்து பல பெண்களும் தங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து வருகின்றனர் .பெண்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கும் கேரக்டராக கண்ணம்மா கேரக்டர் இருப்பதால் ரசிகர்களின் மனதில் இவருக்கு நல்ல இடம் கிடைத்திருக்கிறது. நிஜ வாழ்க்கையில் பல பெண்கள் கணவனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் .

சமூகத்தில் மரியாதை
இந்த சீரியலில் இவரது நடிப்பு ரியலாக இருப்பதால் இந்த மாதிரி கணவனால் கஷ்டப்படும் பெண்களுக்கும் சமூகத்தில் நல்ல மரியாதையும் கிடைக்கிறது. இவருக்கும் இந்த கண்ணம்மா கேரக்டருக்கும் நிறைய பொருத்தங்கள் இருக்கிறதாம். சீரியலுக்கு வருவதற்கு முன்பு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருக்கிறார் .அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரிசைன் லெட்டர் கொடுத்துவிட்டு வந்து விட்டாராம்.

போய்ட்டே இருப்போம்
தனக்கு பிடித்த ஒன்றாக இருந்தாலும் நமக்கு அது செட்டாகாது என்று தெரிந்தால் உடனே கிளம்பி வந்து விடவேண்டும் என்று இவர் வந்துவிட்டார் .அதே கேரக்டரில் இந்த சீரியலில் கேரக்டரும் இருப்பதால் இவரால் நன்றாகவே செட் ஆகி விட முடிந்தது. தற்போது இந்த சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தாலும் ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் ஜாலியாக ஒரு வீடியோவை எடுத்து இருக்கிறார் .

ஜாலி வீடியோ
அதில் மொட்டை மாடியில் ரொமான்ஸ் வீடியோ எடுக்கலாம் என்று இவர் நினைத்து அது பிளாப் ஆனதையும்
வெளியிட்டிருக்கிறார். அதில் இவருடைய க்யூட்டான சிரிப்பையும் துருதுரு சேட்டையும் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் களில் இவரை கொஞ்சி வருகின்றனர். டைம் பாஸ் வீடியோ என இவர் ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் கலக்கி இருக்கிறார் .இவரை முழுக்க முழுக்க புடவையில் பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது இந்த உடையில் பார்த்ததும் நீங்களா அது என்று ஷாக்காகி இருக்கின்றனர் .தன்னுடைய சுருட்டை முடியை ஃப்ரீயாக விட்டு துப்பட்டாவை கையில் சுற்றியப்படி ரசிகர்களை சுற்ற விட்டிருக்கிறார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications