ரூ.100 கோடி சொத்துக்கள்.. அன்னை இல்லம் விடுங்க, இதை செய்தாலே சிவாஜி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பிரபுவுக்கு அன்னை இல்லம் போல, ராம்குமாருக்கு சொத்துக்கள் இருக்குமே... அதை வைத்து கடன் அடைக்கலாமே? அதனால்தான் சிவாஜி குடும்பத்தின் மீது அளவுகடந்த மரியாதை, பாசம் இருந்தாலும், இன்று சினிமா துறையானது. இந்த விஷயத்தை கடந்து செல்கிறது. பணம் கொடுத்தவர்கள்தானே, பணத்தை திரும்ப கேட்கிறார்கள்? பணம் கடன் வாங்கியதும் உண்மைதானே? எனவே, வழக்கு விசாரணை என இழுத்தடிக்காமல், கடன் பிரச்சனை விரைந்து தீர்க்கப்பட வேண்டும். இதனால் சிவாஜி ரசிகர்களுக்கும் திருப்தி கிடைத்துவிடும்" என்று மூத்த பத்திரிகையாளர் வெங்கட் தெரிவித்துள்ளார்.

Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் வெங்கட்.. அப்போது அவர் பேசும்போது, 10 கோடி கடன் என்பது ராம்குமார் குடும்பத்துக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை.. ஏகப்பட்ட சொத்துக்கள் பல கோடிகள் அந்த குடும்பத்திற்கு உள்ளது.

Television Sivaji Ganesan Annai Illam

ஆனால், அன்னை இல்லம் வீடு பிரபு பெயரில் உள்ளது அறிக்கை வெளியிட்டுள்ளார் ராம்குமார்.. இது திட்டமிட்ட செயல் போலவே உள்ளது. இதைக்கேட்டு பணம் கொடுத்தவர்களுக்கும் அதிர்ச்சிதான்.. சினிமா துறையில் உள்ளவர்களுக்கும் அதிர்ச்சிதான்.. உரிமை பத்திரத்தை தந்துவிடுவதால், இந்த விவகாரத்தில் பிரபு மீது எந்தவிதமான குறையையும் சொல்லமுடியாது.

வீட்டு பத்திரம்

ஆனால், ராம்குமார், துஷ்யந்த் மட்டும்தான் இதில் சம்பந்தப்பட்டவர்கள். சிவாஜி சார் குடும்பம் என்பது பாரம்பரியமிக்க குடும்பம்.. கௌரவமிக்க குடும்பம்.. எனவே, நம்பிக்கையின் அடிப்படையில்தான் பணம் தரப்பட்டுள்ளது.. இது டிஜிட்டல் காலமாகிவிட்டது. எனவே, சொத்து இருந்தால்தான் கடன் கிடைக்கும்..

சிவாஜி வீட்டின் பின்னணியை வைத்துதான், நம்பிக்கையின் பெயரில் கடன் அன்று தரப்பட்டுள்ளது. ஆனால், அந்த அந்த நம்பிக்கை இப்போது உடைக்கப்பட்டு வருகிறது. பிரபு பெயரில் வீடு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளதே தவிர, அது கடன் கொடுத்தவர்களுக்கு பணம் தரக்கூடிய செயலாக தெரியவில்லை.. இந்த விவகாரத்தை இழுத்தடிக்கக்கூடிய செயலாகவே தெரிகிறது.

சிவாஜி கார்டன் சொத்துக்கள்

இன்னும் மேல்முறையீடு, விசாரணை என்று மேலும் இழுத்தடிக்கப்படக்கூடாது.. சிவாஜி கணேசனின் கவுரவத்தை உடைக்காமல், அவரது வாரிசுகள் தக்கவைக்க வேண்டும். அன்னை இல்லம் இல்லாவிட்டால் என்ன? மற்ற சொத்துக்கள் இருக்குமே? சிவாஜி கார்டன் அன்று 69 ஏக்கர் நிலத்தை விற்றது பல கோடிகள் வந்திருக்கும்.. வாரிசுகள் அனைவருக்குமே ஷேர் இருக்கிறது.

பிரபுவுக்கு அன்னை இல்லம் போல, ராம்குமாருக்கு சொத்து இருக்குமே... அதை வைத்து கடன் அடைக்கலாமே? அதனால்தான் சிவாஜி குடும்பத்தின் மீது அளவுகடந்த மரியாதை, பாசம் இருந்தாலும், இன்று சினிமா துறையானது. இந்த விஷயத்தை கடந்து செல்கிறது.

ராம்குமார், விக்ரம் பிரபு

ஏற்கனவே, ராம்குமாரின் இன்னொரு மகன் பிக்பாஸில் வந்து கண்கலங்கி அழாத குறையாக பேசிவிட்டு போனார்.. மிகவும் கஷ்டப்பட்டு, அவமானப்பட்டு படித்து வளர்ந்ததாகவும், சிவாஜி குடும்பத்தின் மூலம் எந்த உதவியையும் இதுவரை பெற்றதில்லை என்றும் கூறியிருந்தார்.. நாம் எப்போதுமே யாரையுமே கஷ்டப்படுத்தக்கூடாது. இன்னொரு பையனின் அழுகை, நம்மையும் பாதிக்கவே செய்யும். எனவே, ராம்குமார் தரப்பில் வேறு ஏதாவது சொத்தை அடமானம் வைத்தோ, அல்லது விற்றோ கடனை அடைத்துவிடலாம்.

ஒரு கிரவுண்டு 25 கோடி

பிரபு சாருக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லை.. இதுபோன்ற காரணங்களினால் அவருக்கு மன அழுத்தமும் அதிகமாகிவிட்டது.. விக்ரம் பிரபு அமைதியாக நடித்துவிட்டு, யாருக்கும் எந்த தொந்தரவும் தராமல் உள்ளார்..

இது ஒன்றும் 100 கோடியோ, 200 கோடியோ கடன் இல்லையே.. வெறும் 10 கோடிதான். தி.நகரில் ஒரு கிரண்டு இன்றைக்கு 25 கோடிக்கு போகிறது.. ஒரு கிரவுண்டு விற்றாலும், கடனை எளிதாக அடைத்துவிடலாம்.

பணம் கொடுத்தவர்கள்தானே, பணத்தை திரும்ப கேட்கிறார்கள்? பணம் கடன் வாங்கியதும் உண்மைதானே? எனவே, வழக்கு விசாரணை என இழுத்தடிக்காமல், கடன் பிரச்சனை விரைந்து தீர்க்கப்பட வேண்டும்.. கடனையும் விரைந்து அடைத்துவிட்டால், சிவாஜி கவுரவமும் பேணப்பட்டு, ரசிகர்களுக்கும் திருப்தி கிடைத்துவிடும்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+