நூறு கோடி சொத்து அன்னை இல்லம் நூலிழையில் தப்பியது.. சிவாஜி கணேசன் பிரபுவுக்கு எழுதிய உயில்: பிரபலம்
சென்னை: அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் பிரபு ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இதனை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், "அன்னை இல்லம்" வீட்டின் முழு உரிமையாளர் பிரபு என்பதால், ஜப்தி செய்த உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவிட்டார். இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் தன்னுடைய கருத்துக்களை கூறியிருக்கிறார். குறிப்பாக. இந்து கூட்டுக்குடும்ப சொத்தில், பாகப்பிரிவினை செய்யப்பட்டுவிட்டால், ஒருவர் வாங்கும் கடனை, மற்றவர்களுக்கு கட்ட சொல்ல முடியாது.. அந்தவகையில், பிரபு எடுத்த நிலைப்பாடு சரியானதே என்று தெரிவித்துள்ளார்.
கலாட்டா வாய்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தமிழ்வேந்தன், "30 சதவீத வட்டிக்கு கடன் வாங்கியிருக்கிறார்கள்.. சினிமா கம்பெனிகளை பொறுத்தவரை, இப்படித்தான் வட்டி போடப்படுகிறது.. ஒருமுறை டைரக்டர் பாலாவிடம், தயாரிப்பாளர் என்பவர் யார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
கடன் வாங்காமல் படம் எடுப்பவர்தான் தயாரிப்பாளர் என்றார் பாலு.. ஏனென்றால் கடன் தொல்லையில் மட்டும் சிக்கக்கூடாது.. எத்தனையோ பேர் இதில சிக்கி கொண்டுள்ளார்.. கடன் வாங்கி எத்தனையோ பேர் தற்கொலையும் செய்து கொள்ளவில்லையா? ஜி.வி. தற்கொலை செய்யவில்லையா? சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லையா?

புது ட்விஸ்ட் - அன்னை இல்லம்
ஆனால், பட விவகாரம் கோர்ட்டுக்கு சென்றதுமே ஓய்வுபெற்ற நீதிபதி ஐயா ரவீந்திரன், இந்த வழக்கில மத்தியஸ்தம் செய்தார்.. அப்போது, படத்தின் உரிமையை கடன் வாங்கியவர்களிடமே தந்துவிடும்படி அறிவுறுத்தப்பட்டது. அப்போதுதான், படமே இன்னும் எடுத்து முடிக்கவில்லை என்ற புது ட்விஸ்ட் வெளியானது.. பாதி படம் தான் எடுத்திருக்கிறார்கள்..
முழுமை பெறாத படத்தை யாரிடமும் விற்பனை செய்ய முடியாது.. அதனால், அவர்களது அன்னை இல்லம் வீட்டை சொத்தை விற்றாவது பணத்தை தர சொல்லுங்கள் என்று கடன் பெற்றவர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.. அப்போதுதான், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டது.
உரிமைப்பத்திரம்
இதற்கு நடுவில் பிரபு நீதிமன்றம் சென்று, அன்னை இல்லம் தன்னுடைய பெயரில் உள்ளதாகவும், தன்னுடைய தந்தை உயிருடன் இருந்தபோது, தன் மீது உயில் எழுதி வைத்திருக்கிறார் என்றும் கூறி அதற்கான உரிமைப்பத்திரத்தை தாக்கல் செய்தார். கடன் வாங்கியதற்கும், பிரபுவுக்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை என்பது அப்போதுதான் கோர்ட்டுக்கு தெரியவந்தது.
இந்து கூட்டுக்குடும்ப சொத்தில், பாகப்பிரிவினை செய்யப்பட்டுவிட்டால், ஒருவர் வாங்கும் கடனை, மற்றவர்களுக்கு கட்ட சொல்ல முடியாது.. அந்தவகையில், பிரபு எடுத்த நிலைப்பாடு சரியானதே. சிவாஜி கணேசனின் இளைய மகன் பிரபுக்கே அன்னை இல்லம் சொந்தம் என்று நேற்று கோர்ட் உறுதி செய்தது.. இதை ஏற்கனவே ராம்குமாரும் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுவிட்டார்.
சிவாஜி கணேசன் எழுதிய உயில்
அதேபோல, சகோதரிகள் ஏற்கனவே சொத்து விவகாரங்களில் பிரபு, ராம்குமார் மீது வழக்குதொடுத்துள்ளனர். எனினும், அதில், இந்த அன்னை இல்லம் கணக்கில் வராது.. எப்போதுமே சட்டப்படி, ஒரு சொத்தை உயிலாக எழுதிவிட்டால், மீண்டும் அது பாகப்பிரிவினையில் சேராது.. உயில் சொத்து எப்போதுமே நிரந்தரமானது..
ஒருமுறை உயில் எழுதிவிட்டால், கடைசிவரை அதுதான் செயல்படும்.. உயில் என்பது நடக்கும் வழக்குகளுக்கு அப்பாற்பட்டது. உயிரோடு இருக்கும்போது எத்தனை முறை வேண்டுமானாலும் உயிலை மாற்றி எழுதலாம். ஆனால், கடைசியாக எழுதப்படும் உயிலே இறுதியானது.
அன்னை இல்லம் வீடு
அந்த அடிப்படையில், சிவாஜி கணேசன் எழுதி வைத்த அன்னை இல்லம் பிரபுவுக்கே சொந்தம்.. எப்போதுமே பிரபு மீது சிவாஜி கணேசனுக்கு தனி பாசம் உண்டு.. தனக்கு பிறகு நடிப்பை தொழிலை தொடர்ந்ததும் பிரபுதான்.. அதுவும் இல்லாமல் பிரபு மீது எப்போதுமே சிவாஜி ஐயாவுக்கு ஒரு தனி அபிப்பிராயம் உண்டு. அதனால்தான் இந்த வீட்டை எழுதி தந்திருப்பார்.
சிவாஜி கணேசன் இருக்கும்போதே, அகல கால் வைத்து, பணத்தை நிறைய இழந்துட்டாரு ராம்குமார். பிரபுவுக்கு வீட்டை எழுதி வைக்காமல் போக, இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்" என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications