கூவாம போயிடுச்சே மாரீசன்.. 100 கோடியை அடிக்கும் தலைவன் தலைவி.. இதுதான் சூப்பர் சீக்ரெட்: பிரபலம் நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் தலைவன் தலைவி. படமானது கணவன் மனைவி உறவை மையமாக கொண்டது.. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்துள்ளனர்.. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம், ரிலீஸான 7 நாட்களில் உலகளவில் ரூ.52 கோடியை வசூல் செய்துள்ளது. ஆனால், பகத் பாசில், வடிவேலு நடித்துள்ள மாரீசன் படம் ரூ 15 கோடி பட்ஜெட்டில் தயாரானது.. மிகப்பெரியஎதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.. ஆனால்,இதுவரை வெறும் ரூ. 6.8 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளதாம். இதற்கான காரணம் என்னவென்று தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியிருக்கிறார்.

Aagayam Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "மாரீசன் படம் நல்ல படம் என்றுதான் சொல்வேன்.. காரணம், கன்டென்ட் வலுவாக இருக்கிறது. ஆனால், மாரீசன் படத்துடன் தலைவன் தலைவியை ஒப்பிட முடியாது..

Television Thalaivan Thalaivii Maareesan

மாரீசன் படம் கன்டெண்ட்

காரணம், தலைவன் தலைவி 100 சதவீதம் வெற்றிப்படம். குடும்பம் குடும்பமாக ரசிக்கிறார்கள்.. இது எதிர்பார்த்த ஒன்றுதான்.. எனவே, மாரீசன் படத்துடன் தலைவன் தலைவியை ஒப்பிட முடியாது.

மாரீசன் படம் வெற்றிப்பெறாததற்கு காரணமே, புரமோஷன் சுத்தமாக இல்லை.. இந்த படம் வெளிவந்து, அதுவே பேசிவிடும் என்று நம்பினார்களா தெரியவில்லை. அழகான கன்டென்ட் இருந்தும்கூட, அழகான எமோஷனல் இருந்தும், தனிமனித பொறுப்புகளை வலியுறுத்தியும்கூட, இந்த படத்தில் வீணாக்கிவிட்டதே? என்று தோன்றுகிறது.

சினிமா இலக்கியத்தனம் நிறைந்துள்ள படம்.. சூப்பரான ரைட்டிங்கும் உள்ள படம்.. எனினும் இந்த படத்தை சரியான முறையில் கொண்டுபோய் சேர்க்கவில்லை. இதனால் மக்களிடம் மாரீசன் படம் முழுமையாக சென்றடையவில்லை..

ரூ.100 கோடி தலைவன் தலைவி

ஒரு திரைப்படம் வெளியாகும்போதே, அதற்குரிய சரியான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.. வடிவேலும், பகத் பாசிலும் இணைந்து நடிக்கும்போது, அந்த காம்பினேஷனை வலுவாக்கி பேசியிருக்க வேண்டும்.. ஒருத்தரும் இப்படம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசவில்லை, ஒருத்தரும் பேட்டிகளை தரவில்லை..

படக்குழுவினரே இதை கண்டுக்காமல் இப்படத்தை போற போக்கில் விட்டுவிட்டதால், ஓடிடியில் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று மக்களும் முடிவு செய்துவிட்டனர்.

ஓவரா கூவினாலும் பிரச்னைதான்

அதுக்காக நிறையவும் கூவிவிடவும் கூடாது.. ஒரு படத்தை பற்றி அதிகமாக கூவினாலும் தப்பு, கூவாவிட்டாவிட்டாலும் தப்பு.. விஜய் சேதுபதியின் ஏஸ் என்ற படம், கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் படமாக அமைந்தது.. பல இடங்களில் ஜாலியாக சிரிக்க முடிந்தது.. ஆனால், அந்த படத்துக்கும் சரியான புரமோஷன் தரவில்லை..

ஆனால், தலைவன் தலைவி அப்படியில்லை.. படத்தின் பாடல்களும், அப்படத்தின் விஷயங்களும் மக்களிடம் சென்று சேர்ந்தன.. அப்படக்குழுவினர் விடாமல் பேட்டிகளை தந்து கொண்டிருந்தனர்..

புரமோஷன் இல்லை

விஜய் சேதுபதி, பாண்டிராஜ் ஜாலியா பேசிட்டு, அதிலும் வரிஞ்சி கட்டிட்டு வந்த நித்யா மேனன் என 3 பேருமே பல சேனல்களில் பேட்டிகளை தந்து கொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடி, படத்துக்கு புரமோஷனையும் செய்து, படத்தையும் சக்சஸ் செய்துவிட்டனர்.. இப்போதும் பேட்டிகளை தந்து கொண்டிருப்பதால், அது குடும்ப படமாக வெற்றி பெற்றுவிட்டது.

எனவே படங்களுக்கு மிதமான புரமோஷன்கள் தேவைப்படுகிறது.. அந்த புரமோஷன்களில் எந்த வார்த்தையையும் விட்டுவிடக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+