ரூ.100 கோடியை தொட்ட குபேரா.. தனுஷூக்கு தேசிய விருது கன்பார்ம்டு? வரிசையாக வந்த பிரபலங்கள்: பிரபலம்
சென்னை: தெலுங்கில் குபேரா படத்தின் வெற்றி விழாவில் நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டபோது, தனுஷின் நடிப்பிற்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறியிருந்தார். இதே கருத்தை இசையமைப்பாளர் டிஎஸ்பி-யும் கூறியிருக்கிறார். இந்நிலையில், இதுகுறித்து சினிமா விமர்சகர் அந்தணன் பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
டைரக்டர் சேகர் கம்முலா இயக்கியுள்ள குபேரா படத்தில் தனுஷ் நடித்து, கடந்த ஜூன் 20ம் தேதி வெளியாகியிருந்தது..

இந்த படத்தில் தனுஷூடன், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
தெலுங்கு பட வரவேற்பு
தெலுங்கில் வரவேற்பை பெற்ற படம் தமிழில் அவ்வளவாக எடுபடவில்லை. கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.. அப்படியிருந்தும்கூட, குபேரா படத்தின் 8 நாள் வசூல் உலக அளவில் 118 கோடி வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தெலுங்கில் இப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டபோது, தனுஷின் நடிப்பிற்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறியிருந்தார். இதே கருத்தை இசையமைப்பாளர் டிஎஸ்பி-யும் கூறியிருக்கிறார்.
விசித்திரமான ரசனை
இந்நிலையில், Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன், "குபேரா படம் தெலுங்கில் சக்கை போடு போடுகிறது.. தெலுங்கில் சங்கராபரணமும் ஓடும், இன்னொரு மசாலா படமும் ஓடும்.. இது தெலுங்கு ரசிகர்களின் விசித்திரமான ரசனை.
குபேரா படத்தை பொறுத்தவரை, அதன் கதையின் சாராம்சம் சிறப்பாகவே இருந்தது, ஆனால், 3 மணி நேர திரைக்கதைத்தான் நம்முடைய பொறுமையை அளவுக்கு அதிகமாகவே சோதித்துவிட்டது. ஆனால் நமக்கு எதெல்லாம மைனஸாக இருக்கிறதோ, அதெல்லாம் தெலுங்கில் பிளஸ் பாயிண்ட்டாக பார்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாகார்ஜூனாவின் கேரக்டரை வியந்து பார்க்கிறார்கள்.. அதனால்தான், அங்கு சக்கை போடு போடுகிறது.
சிரஞ்சீவி - தனுஷ்
இப்போது அனைத்தையும் கடந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, தனுஷ் போன்ற நடிகரை இந்தியாவில் பார்க்க முடியாது என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.. இந்த பாராட்டை நாம் ஏற்றே ஆக வேண்டும்.. ஒரு நடிகராக தனுஷை, சிறிதும் குறைத்து மதிப்பிட முடியாது. தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் சிறந்த நடிப்பை தனுஷ் வெளிப்படுத்துவதை, சிரஞ்சீவி போன்ற சீனியர்களே கவனித்துள்ளனர்.
இத்தனைக்கும் சக நடிகர் நாகார்ஜூனா அந்த படத்தில் நடித்தும்கூட, தனுஷை பாராட்டியதை, வெறும் மேடை புகழ்ச்சியாக சாதாரணமாக நம்மால் எடுத்து கொள்ள முடியாது.. இப்படி தனுஷை பாராட்டுவதால் சிரஞ்சீவிக்கு எதுவும் கிடைத்துவிட போவதுமில்லை.. அந்தவகையில், இது உண்மையான பாராட்டுதான்.
தேசிய விருது கிடைக்குமா
இதற்கு நடுவில் இசையமைப்பாளர் டிஎஸ்பி, "புஷ்பா படம் பார்த்துவிட்டு, அல்லு அர்ஜூனாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று நான்தான் முதன்முதலில் சொல்லியிருந்தேன். அதுபோலவே விருது கிடைத்தது. இப்போது குபேரா படத்துக்கு தனுஷூக்கு தேசிய விருது கிடைக்கும்" என்று சொல்லி உள்ளார்..
டிஎஸ்பி எப்போது, இப்படி ஆரூடம் பார்ப்பவராக மாறினார் என்று தெரியவில்லை. தனுஷ் நன்றாக நடித்திருக்கிறார், என்றாலும், தேசிய விருது கிடைக்குமா என்பதை நம்மால் கணிக்க முடியாது..
ஆனால், ரிலீசுக்கு முன்பேயே, குபேரா படத்தை பார்த்த நாகார்ஜூனா, தனுஷூக்கு போனை போட்டு, இந்த படத்தில் நிச்சயம் உங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று பாராட்டியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.. அப்படியானால், தேசிய விருது வாங்கக்கூடிய அளவுக்கு நடிப்பு இதுதான் என்று, தெலுங்கு பட உலகிற்கு தெரிந்திருக்கலாம்.












Click it and Unblock the Notifications