ரூ.1000 கோடி ஆகாஷ் பாஸ்கரனுக்கு ஏது? ரஜினி என்ன புத்தரின் வாரிசா? அருண்ராஜ் யார் தெரியுமா: பிரபலம்
சென்னை: உலகத்தில் எந்த ரகசியத்தையும் யாருமே மறைக்க முடியாது. ரஜினி என்ன புத்தரின் வாரிசா? கமல் என்ன ரெட்டைமலை சீனிவாசரின் பேரனா? சமூக சிந்தனைக்கான இவர்களின் படங்கள் என்ன? சமூக விஷயத்தை சினிமாவில் பேசுவதாக சொல்கிறார்களே, இதுவரை மதுவை ஒழித்தார்களா? சிகரெட்டை ஒழித்தார்களா? சாதியை ஒழித்தார்களா? சனாதனத்தை ஒழித்தார்களா? காவியை ஒழித்தார்களா? மீடியாவில் யாருமே இதைப்பற்றி பேசுவதேயில்லை" என்று கடுமையாக சாடியிருக்கிறார் பத்திரிகையாளர் பாண்டியன்.
BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், பராசக்தி தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். ஊடகங்கள் எல்லாமே தரகர்களாக இருக்கிறார்கள்.. பெரும்பாலும் கள்ளச்சந்தை முதலாளிகளே ஊடகத்தை நடத்துகின்றனர்.. இதனால் மக்களிடம் எந்த உண்மையும் போய் சேருவதில்லை.

திரைத்துறை கள்ளச்சந்தை
சாராய ஆலை அதிபர்களின் பணம்தான், கள்ளச்சந்தையில் திரைத்துறைக்கு வருவதாக சொல்கிறார்கள்.. ரஜினி, விஜய்யை வைத்து படம் எடுக்கும் லைகா புரடக்ஷன் சுபாஷ்கரன் சர்வதேச குற்றவாளி என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். யாருமே அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
தமிழ்நாட்டில் பெரும்பாலான படங்கள் கள்ளச்சந்தை முதலாளிகளால் எடுக்கப்படுகிறது. ஆகாஷ் பாஸ்கரனுக்கு ஏது 1000 கோடி? இவரது அப்பா, பஸ்கள் நிறுத்தும் ஷெட்டை வாடகைக்கு விட்டு வாழ்ந்து கொண்டிருந்தார்.. முக முத்துவின் பேத்தியை திருமணம் செய்தால் மட்டும் ஆயிரம் கோடி வந்துருமா? முக முத்து அரசகுடும்பத்தை சேர்ந்தவரா?
1000 கோடி ஏது
ஏவிஎம் ஸ்டுடியோ நிறுவனம் மூடியாச்சு, ஜெமினி ஸ்டுடியோ மூடியாச்சு.. சவுத்ரி ஊரை விட்டே போயிட்டாரு.. குஞ்சுமோன் என்ன ஆனாருன்னே தெரியல.. ஆஸ்கார் ரவிச்சந்திரன் அட்ரஸையே காணோம்.. இப்படி தயாரிப்பு நிறுவனங்கள் காணாமல் போய்விட்டதால், இப்போதுள்ள விவரம் தெரியாத இளைஞர்களே தயாரிப்பாளர்களாக 1000 கோடியுடன் வந்துவிட்டார்கள். இவர்கள் 1000 கோடி 50 கோடியில் படம் எடுப்பது பிரச்சனையில்லை.. இவர்களுக்கு அந்த பணம் ஏது? என்பதுதான் பிரச்சனையே,
மக்களுடைய வரிப்பணத்தை, ரத்தத்தை, எலும்பை, சதையை கொண்டுவந்து படமாக எடுக்கிறார்கள்., ரஜினிக்கு எதுக்கு 250 கோடி சம்பளம்? இந்த வயசில் 18 வயது பெண்ணுடன் டூயட்? ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஏதாவது இதுவரை ரஜினி பேசியிருக்கிறாரா?
சனாதனம் ஒழிந்ததா?
உலகத்தில் எந்த ரகசியத்தையும் யாருமே மறைக்க முடியாது. ரஜினி என்ன புத்தரின் வாரிசா? கமல் என்ன ரெட்டைமலை சீனிவாசரின் பேரனா? சமூக சிந்தனைக்கான படங்கள் என்ன? சமூக விஷயத்தை சினிமாவில் பேசுகிறார்கள் என்றால், இதுவரை மதுவை ஒழித்தார்களா? சிகரெட்டை ஒழித்தார்களா? சாதியை ஒழித்தார்களா? சனாதனத்தை ஒழித்தார்களா? காவியை ஒழித்தார்களா? மீடியாவில் யாருமே இதைப்பற்றி பேசுவதேயில்லை.
அரசு எந்திரங்களே ஊழல் மயமாக்கப்பட்டுள்ளது.. மக்களின் வரிப்பணம்தான் இட்லி கடை, பராசக்தி, சிம்புவின் 49 படங்கள்.. கள்ளச்சந்தையில் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவில் முதலீடு செய்கிறார்கள்.. ரஜினி தான் வாங்கும் பணத்துக்கு வரி கட்டுறாரா? விஜய் வரி கட்டுகிறாரா?
அருண்ராஜ் யார்
விஜய்யை பலமுறை விசாரணைக்கு அழைத்து சென்ற அதிகாரிதான் அருண்ராஜ்.. இப்போது இவரே விஜய் கட்சியில் சேர்ந்துட்டாரு. அருண்ராஜ் ஒரு டாக்டர்.. திமுகவில் அன்று சீட் கேட்டார்.. தரவில்லை.. உடனே தேர்வு எழுதி, வருமான வரித்துறைஅதிகாரியாக மாறிவிட்டார். விஜய், டிடிவி தினகரன், சேகர் ரெட்டி உட்பட அனைவரையும் ரெயிடு செய்தவர்.. இப்போது விஜய் கட்சியில் சேர்ந்துவிட்டார். இந்த நபரை செட் பண்ணி விஜய்யிடம் அனுப்பி வைத்ததே பாஜகதான்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications