ரூ.150 கோடி சம்பளம்.. சிவகார்த்திகேயனுக்கு தெரியல? விஜய் சேதுபதி சூப்பர்.. ஆக்‌ஷன் ஹீரோன்னா? பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி எதுக்காகவாவது கவலைப்படுறாரா? எந்த கேரக்டர் தந்தாலும் நடிக்கிறார்.. வித்தியாசம் வித்தியாசமாக நடிப்பதால், நல்ல பேர்தான் கிடைக்கும் என்பதால், நடிகர்கள் எந்த கேரக்டரிலும் நடிக்க முன்வரவேண்டும் என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியிருக்கிறார்.

Agayam Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பாலாஜி பிரபு தந்துள்ள பேட்டியில், "பரத், ஸ்ரீகாந்த், ஜெய், ஷாம், ஜீவா போன்றோர் அவரவர் நடிப்பில் என்ன பிளஸ் பாயிண்ட்டோ, அவர்களை ரசிகர்கள் எப்படியெல்லாம் விரும்புகிறார்களோ அப்படியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்திருக்கலாம்.

Television Sivakarthikeyan Vijay Sethupathi

இவர்கள் தங்களை சூப்பர் ஹீரோவாக நினைப்பதால்தான், தோல்வியடைந்து விடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆக்‌ஷன் ஹீரோ என்றால், ஒருவித பவர் இருக்கும், ஒருவித கரிஷ்மா இருக்கும்.. அதெல்லாம் இவர்களிடம் இல்லை.

தங்களுக்கு விருப்பமான நடிகர் மீது, மக்களுக்கு உள்ளுக்குள்ளிருந்து ஒருவித ஃபயர் வரணும்.. அவர்கள் மீது ஒருவித பற்று வரவேண்டும். அதுதான் ரொம்ப முக்கியம்.. எல்லா நடிகர்களிடமும் இப்படியான பற்றை மக்கள் வைக்க மாட்டார்கள். அப்படி மக்களுக்கு தங்கள் மீது பற்று இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட நடிகர்கள், உடனே தங்களுக்கு என்ன நடிக்க வருமோ, தங்களை மக்கள் எப்படி பார்க்க விரும்புகிறார்களோ, அதை புரிந்து கொண்டு நடிக்க வேண்டும்.

ஈகோ வேணாம்: சிலர், தங்கள் சக நடிகர்களுடன் இணைந்து நடிக்கவே ஈகோ பார்க்கிறார்கள்.. ஜெய், ஜீவா, ஷாம், ஸ்ரீகாந்த், பரத், இவர்கள் எல்லாருமே நல்ல கேரக்டர் தந்தால் நன்றாக நடிக்கக்கூடியவர்கள்தான். ஆனால், அவர்களை ஏதோ ஒன்று தடுக்கிறது.. இத்தனை படம் ஹீரோவாக நடித்துவிட்டு, எப்படி கேரக்டர் ரோல் செய்வது தயங்குகிறார்களா? இறங்கி வரணுமா? என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். ஆனால், இறங்கி வந்தால் நல்லா இருக்கும்..

சிவகார்த்திகேயன் படத்தில் ஜெயம் ரவி, அதர்வா போன்றோர் நடிக்கிறார்கள்.. இதுபோலவே மற்றவர்களும் நடிக்க முன்வரவேண்டும். ஹீரோவுடன் இணைந்து நடித்தால், தங்களை மார்க்கெட் இழந்த நடிகர்களாக முடிவுகட்டிவிடுவார்கள் என்று நினைக்கவே தேவையில்லை.

அருண்விஜய்: என்னை அறிந்தால், இட்லி கடை உள்ளிடட படத்தில், அந்தந்த ஹீரோக்களுடன் அருண்விஜய் நடிக்கிறார்.. எனவே, ஹீரோவாகத்தான் நடிக்கணும்னு நினைக்கக்கூடாது.. நடிகவேள் எம்ஆர் ராதா எல்லா கேரக்டரையுமே நடிப்பார்.. வில்லனாகவே எம்ஆர் ராதா நடித்தாலும், அவரும் ஒரு ஹீரோவாகவே படங்களில் தெரிவார்.

இதற்கு இன்றைய உதாரணமாகத்தான் விஜய் சேதுபதி இருக்கிறார். எதுக்காகவாவது அவர் கவலைப்படறாரா? எந்த கேரக்டர் தந்தாலும் நடிக்கிறார்.. வித்தியாசம் வித்தியாசமாக நடிப்பதால், நல்ல பேர்தான் கிடைக்கும்.

சீனியர்கள் அனைவருமே 100 கோடி, 150 கோடி சம்பளம் வாங்குகிறார்கள் என்றால், அது அவர்களின் உழைப்பு,. ரஜினி, கமல் என்றால் 50 வருட உழைப்பு இருக்கு.. அஜித், விஜய் என்றால் 30 வருட உழைப்பு இருக்கிறது. சிம்பு, தனுஷ் என்றாலும் 20 வருட உழைப்பு இருக்கிறது. தங்களது உழைப்பு தந்த இவர்களை, அந்த உயர்ந்த இடத்தில் மக்களே கொண்டுபோய் உட்கார வைக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன்: ஆக்‌ஷன் ஹீரோ என்று சிவகார்த்திகேயனை சொல்ல முடியாது.. அடுத்த விஜய் என்ற இலக்குடன் சிவகார்த்தியேன் போய்ட்டு இருக்கார்.. அவரை சிலர், "வாங்க வாங்க" என்று மேலே கூட்டிக்கொண்டு போயிட்டே இருக்காங்க.. ஆனால், அது ஆபத்து என்பது சிவகார்த்திகேயனுக்கு புரியல.

ஏனென்றால், கமலுக்கு 60 வருஷம், ரஜினிக்கு 50 வருஷம், விஜய்க்கு 35 வருஷம் என ஒரு பேஸ்மென்ட் சினிமாவில் இருந்தது. ஆனால், சிவகார்த்திகேயனுக்கு அப்படியொரு பேஸ்மென்ட் இல்லை.. சிவகார்த்திகேயனை குறைத்து மதிப்பிடவில்லை.. அவரை நல்ல நடிகர் இல்லை என்றும் சொல்லவில்லை. ஆனால், இவ்வளவு சீக்கிரத்திலேயே இவ்வளவு தூரத்துக்கு போவதுதான் யோசிக்க வேண்டும்.. அதுமட்டுமல்லாமல், ஆக்‌ஷன் படங்களில் சிவகார்த்திகேயன் நடித்ததில்லை. அமரன் மட்டும்தான், அவரது ஒரே ஆக்‌ஷன் படமாக இதுவரை வெளிவந்துள்ளது..

எதிர்காலம்: சிவகார்த்திகேயன் இப்போதுதான் முதல்படியில் இருக்கிறார்.. அவரது எதிர்காலம் எப்படி இருக்க போகிறது இனிதான் பார்க்க வேண்டும். ஆக்‌ஷன் ஹீரோவாக தொடர்ந்து அவரை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? இல்லையா? என்பதும் இனிமேல்தான் தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+