ரூ.300 கோடி சம்பளம் கேட்கும் ஹீரோ? ரொம்ப மோசம்.. அஜித் போல உதவ பெரிய நடிகர்கள் முன்வரணும்: பிரபலம்
சென்னை: படம் எடுத்து தோல்வியடையும் தயாரிப்பாளர்களுக்கு, நடிகர்களும் கைகொடுத்து உதவ வேண்டும் என்றும், தயாரிப்பாளர்களுக்கு லாபம் இல்லாவிட்டாலும் நஷ்டத்திலும் ஓரளவாவது பெரிய நடிகர்கள் பங்கெடுத்து கொள்ள வேண்டும் என்றும் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கேட்டுக் கொண்டுள்ளார்.
கேம்சேஞ்சர் படத்துக்கு 187 கோடி ரூபாய் வசூலானதாக புரடக்ஷன் கம்பெனியே அறிவித்தார்கள்.. இதுபோல இன்னும் நிறைய புரடக்ஷன் கம்பெனிகளும் அறிவிக்கிறார்கள். ஆனால், இதிலெல்லாம் எந்த அளவுக்கு உண்மைத்தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை.

கலெக்ஷன்: பெரும்பாலும் ஒரு படம் எவ்வளவு கலெக்ஷன் ஆகியிருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது.. அந்த படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை இது.. அந்த படத்தில் நடிக்கும் ஹீரோவுக்குகூட கலெக்ஷன் பற்றி முழுமையாக தெரியாது. ஆனால், இப்போதுள்ள நடிகர்கள் முதல்நாள் வசூல் எவ்வளவு? 2வது நாள் எவ்வளவு? என்று கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். காரணம், அடுத்த படத்தில் தங்களது சம்பளத்தை டபுளாக உயர்த்தி கேட்பதற்காகத்தான்.
தங்கள் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதற்காக, தனியாக சம்பளம் கேட்கிறார்கள் என்றாலும், 200 கோடி ஊதியம் வாங்குபவர்கள், அடுத்த படத்தில் 300 கோடி கேட்டால் எப்படி?
ஒத்துழைப்பு: படம் ஓடிவிட்டால் சரி, அந்த படம் ஓடாமல் போனாலும், 100 கோடிக்கு சம்பளத்தை உயர்த்துகிறார்கள்.. தங்களது படம் ஓடாவிட்டால், அடுத்த படத்துக்கு ஊதியத்தை குறைத்துக் கொள்ளணும்தானே? இப்படி மனநிலைமை யாருக்குமே வருவதில்லை. இப்படியிருந்தால் எப்படி சினிமா சரியாக வரும்? எப்படி தயாரிப்பாளர்கள் பிழைப்பார்கள்? 2 தரப்பிலும் ஒத்துழைப்பு இருக்கணும்..
நாங்கள் தயாரித்த விஷ்ணு படத்துக்கு விஜய் சாருக்கு 3 லட்சம் சம்பளம் பேசினோம். அவர் இப்போது நடிக்க வந்து இன்னும் 30 வருஷம்கூடமுடியல.. இப்போ 275 கோடி வாங்குகிறார்.. அதுக்காக விஜய்யை மட்டுமே உதாரணமாக வைத்து பேச முடியாது.. விஜய்க்கு எல்லா படங்களும் ஓடவே செய்யும். எனவே, விஜய் இதில் விதிவிலக்கு.
இந்தியன் 2: ஆனால், மற்ற ஹீரோக்கள் ஏன் குறைத்து கொள்வதில்லை? கமல்ஹாசன் இந்தியன் 2படம் என்னாச்சு? மிகபெரிய ஆளுமை கமல்ஹாசன்.. அப்படியிருந்தும் அந்த படம் என்னாச்சு? அப்படின்னா லைகாவுக்கு இழந்த பணத்தை திருப்பி தருவாங்களா?
இது ஒரு உதாரணம்தான்.. மற்றபடி யார் மீதும் காழ்ப்புணர்ச்சி எனக்கு கிடையாது..
வாங்கிய பணத்தை திருப்பி தர வேண்டாம். ஆனால், தங்கள் படத்தினால் நஷ்டம் எவ்வளவோ, அதை ஓரளவு ஹீரோக்கள் தரலாமே? அல்லது உங்களை நம்பி படம் எடுத்து, உங்களால் நஷ்டமடைந்த அதே தயாரிப்பாளருக்குஅடுத்த படத்துக்கு குறைந்த ஊதியம் பெறலாமே?
அஜித் விசுவாசம்: அஜித் இப்படி தயாரிப்பாளர்களுக்கு கை தூக்கி விட்டுள்ளார்.. விவேகம் படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததுமே, "வாங்க, அடுத்த படம் எடுக்கலாம்" என்று சொல்லி, அதே டீமுடன் சேர்ந்து "விசுவாசம்" படம் எடுத்து, அது மிகப்பெரிய சக்சஸ் ஆனது. அத்துடன் தன்னுடைய பெரிய சம்பளத்தையும் அந்த படத்தில் அஜித் குறைத்து கொண்டார்.. இந்த தன்மை எல்லா ஹீரோக்களுக்கும் வரணும்" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications