ரூ.400 கோடியை 4 நாளில் அள்ளிய கூலி.. சூப்பர் ஸ்டார் படத்தை குறை இல்லாமல் லோகேஷால் எடுக்க முடியாதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூலி படத்தில் லாஜிக் மிஸ்டேக் என்றால் அதை டைரக்டர்தானே சரி செய்திருக்கணும்? ஒரு தீவிரமான கமல்ஹாசன் ரசிகரால், ரஜினிக்காக எப்படி படம் எடுக்க முடியும்?" சூப்பர் ஸ்டாருக்கு விமர்சனம் இல்லாத படத்தை தர முடியவில்லையா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புவதாக மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். அத்துடன் கூலி பட வெற்றி குறித்தும் தன்னுடைய பேட்டியில் விரிவாக பேசியிருக்கிறார்.

Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, ஒரு பெரிய ஹீரோவின் படம், பெரிய பட்ஜெட்டில் வெளிவரும்போது, அந்த படம் சரியில்லை என்றால், நெகட்டிவ் விமர்சனம் வருவது இயல்புதான்..

Television Coolie Rajinikanth

நெகட்டிவ் விமர்சனங்கள்

ஆனால் ரஜினிகாந்த் படத்துக்கு மட்டும் இப்படியான நெகட்டிவ் விமர்சனங்கள், வன்மம், மிரட்டல் ஏன்? ஒரு படம் சரியில்லை என்றால், அதை மக்களே புறக்கணித்து விடுவிர்கள்.. ஆனால், கூலி அப்படியொன்றும் மோசமான படம் கிடையாது..

லாஜிக் மிஸ்டேக் இருப்பது உண்மைதான் என்றாலும், அந்த படம் தகுதியே கிடையாது, ரஜினிக்கு எதுக்கு 200 கோடி, லோகேஷூக்கு எதுக்கு 50 கோடி? என்று கேட்பதுதான் ஏன் என்று புரியவில்லை. முதல்நாள் படம் ஓடியதிலிருந்தே இப்படியான நெகட்டிவ் கருத்துக்களை சொல்லி வந்தனர்.

4 நாளில் 400 கோடி வசூல்

இப்போது படம் வெளிவந்து 4 நாளாகிவிட்டது.. இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் ஹவுஸ்புல் ஷோ ஓடிக் கொண்டிருக்கிறது.. இதுவரை இந்த 4 நாளில் கூலி படம் நல்ல கலெக்‌ஷன் என்கிறார்கள்.. இந்த 4 நாளில் 400 கோடியை வசூல் அடித்துள்ளது..

A சர்ட்டிபிகேட்

இந்த படம் A சர்ட்டிபிகேட் என்பதால், வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களின் பல தியேட்டர்களில் சின்ன சின்ன பிள்ளைகளை அழைத்துவந்து தகராறே செய்துவிட்டனர்.. குடும்பங்களில் பெரியவர்கள் சினிமாவுக்கு கிளம்பும்போது, சின்ன பிள்ளைகளை, பெரியவர்கள் எங்கே விட்டுவிட்டு வருவார்கள்? அதனால்தான், அவர்களை தியேட்டருக்கு அழைத்து வந்துவிட்டார்கள்.

A சர்ட்டிபிகேட் தரும் அளவுக்கு படத்தில் அப்படியான காட்சிகள் இல்லை.. ஹார்பரை தவறாக காட்டிவிட்டதாகவும் அதனால்தான் A சர்ட்டிபிகேட் தந்துள்ளதாகவும் சிலர் சொல்கிறார்கள்.. மேலும் சிலரோ, பிணங்களை வைத்து சத்யராஜ் எரிப்பதை பார்க்க ஒரு மாதிரியாக உள்ளது. அதனாலும் A சர்ட்டிபிகேட் தந்திருக்கலாம்.

தியேட்டர்களில் வாதம்

இயக்குனர் நினைத்திருந்தால் இதனை வசனத்திலேயே மாற்றியிருக்கலாம்.. ஆனால் எதற்காக A சர்ட்டிபிகேட்டுக்கு இயக்குனர் ஒப்புக் கொண்டார் தெரியவில்லை.. ஆனால், நிறைய தியேட்டர்களில் பிள்ளைகள் தங்களது ID கார்டை கொண்டுவந்து காட்டியிருக்கிறார்கள்.

சிலர் 18 வயது கடந்திருந்தாலும், பார்ப்பதற்கு 18 வயதுபோல தெரியாது.. இதுபோன்றவர்களை தியேட்டரில் விட அனுமதிக்கவில்லை. அதற்கு பிறகுதான், அடையாள அட்டையை காட்டிவிட்டு, டிக்கெட் எடுக்க சென்றுள்ளனர்..

லோகேஷ் கனகராஜ்

இந்த படத்தை பொறுத்தவரை ரஜினியின் தலையீடு எதிலுமே இல்லை என தெரிகிறது.. காரணம், முதல் முறை லோகேஷ் கனகராஜ் சொன்ன கதைக்கும், 2வது முறை சொன்ன கதைக்கும், ரஜினிகாந்த் சரியென்றே சொல்லியிருக்கிறார்.. இதில் 2வது கதை தேர்வாகியிருக்கிறது.. அப்படியானால் லோகேஷ் கனகராஜ் அவர் விருப்பப்படியே கதையை தேர்வு செய்துள்ளார் என்று பலரும் இணையத்தில் விமர்சித்து வருகிறார்கள்.,.

மேலும் சிலர், கூலி படத்தின் கதை கிட்டத்தட்ட விக்ரம் போலவே இருக்கிறது.. இனிமேல் லோகேஷ் கனகராஜ், டைரக்ஷன் மட்டும் செய்யட்டும், கதை திரைக்கதைக்குள் அவர் தேவையில்லை என்றும் விமர்சித்து வருகிறார்கள்.. ஏனென்றால், இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்துக்கு ஒரு விமர்சனம் இல்லாத படத்தை, லோகேஷ் கனகராஜால் தரமுடியவில்லையே?

லாஜிக் மிஸ்டேக் என்றால் அதை டைரக்டர்தானே சரி செய்திருக்கணும்? ஒரு தீவிரமான கமல் ரசிகர், ரஜினிக்காக எப்படி படம் எடுக்க முடியும்?" என்று பொருமுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+