ரூ.500 கோடி அன்னை இல்லம்.. சிவாஜி கணேசன் வீட்டில் அந்த அடுப்பு பார்த்தீங்களா? சூப்பர்ல.. பிரபலம் நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடனில் வீட்டை இழக்கும் சூழல், அந்த காலத்தில் சந்திரபாபுக்கு ஏற்பட்டிருக்கிறது, என்எஸ் கிருஷ்ணனுக்கு ஏற்பட்டுள்ளது, நாகேஷூக்கு ஏற்பட்டுள்ளது.. அப்போதெல்லாம் எம்ஜிஆர் என்று ஒருவர் இருந்தார். எம்ஜிஆர்தான் அனைத்தையும் மீட்டு தந்தார். சிவாஜிக்கு இப்படியொரு சிக்கல் ஏற்கனவே வந்தபோது, அவரது குடும்பத்துக்காக சந்திரமுகி என்ற படத்தை கொடுத்தார் ரஜினி என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

Accord Voice என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், அன்னை இல்லம் விவகாரம் குறித்து விரிவாக பேசியிருக்கிறார்..

Television Sivaji Ganesan Annai Illam

"கோர்ட் விளக்கம் கேட்டும் பதில் சொல்லாததால்தான் இவ்வளவு பெரிய பிரச்சனையாகிவிட்டது. சகோதரிகளுக்குள், சகோதரர்களிடம் சொத்து பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது. சாந்தி காம்ப்ளக்ஸ் விற்றுவிட்டார்கள்..

சிவாஜி கார்டன் சிறப்புகள்

ஒருகாலத்தில் ராமாவரத்திலிருக்கும் சிவாஜி கார்டன் ரொம்ப ஃபேமஸ்.. அவுட்டோர் போய் ஷூட்டிங் செல்ல முடியாதவர்கள், கிராமப்புறங்களில் ஷூட்டிங் எடுக்க முடியாதவர்கள், சிவாஜி கார்டனில்தான் எடுப்பார்கள்.. அங்கு வயல்வெளி இருக்கும். மாட்டு வண்டி இருக்கும்.. குளம், ஆறு எல்லாமே இருக்கும். செயற்கையாகவும் இருக்கும், இயற்கையாகவும் இவையெல்லாம் அங்கே இருக்கும்.

அவ்வளவு பெரிய ஏக்கர் நிலத்தை, சந்திரமுகி படத்திற்காக விற்க வேண்டியதாயிற்று. சந்திரமுகி படத்திற்கு பைனான்ஸ் பிரச்சனை ஏற்படவும், அதை அவசரத்துக்கு சொற்ப விலைக்கு விற்கும் சூழல் வந்தது.. அப்படி விற்கப்பட்ட இடம், பின்னாளில் பெரிய ரேட்டுக்கு போனது.. எனினும், தற்போது குடும்பத்துக்குள் சொத்து பிரச்சனை இருக்கிறது. அது என்னவென்று தெரியாமல் நாம் பேசக்கூடாது, அது நாகரீகமும் கிடையாது.

வள்ளலார் அடுப்பு போல அணையாதது

சென்னையின் இதய பகுதியில் 2000 ஏக்கர் என்றால், அன்னை இல்லம் தற்போதைக்கு ரூ.500 கோடி மதிப்புள்ளது என்று என்னுடைய நண்பர்கள் சொல்கிறார்கள்.. நான் முன்பு ஒரு நாளிதழில் வேலை பார்த்து கொண்டிருந்தேன்.. சிவாஜி வீட்டுக்கு பின்பக்கம் ஒரு தீவிபத்து ஏற்பட்டுவிட்டது. அதற்காக நாங்கள் சென்றிருந்தபோது, வழியில் அன்னை இல்லம் வீட்டின் அடுப்பு பார்த்து அலறிவிட்டோம்.

"ப" வடிவத்தில் அவ்வளவு பெரிய அடுப்பு இருந்தது.. சிவாஜி வீட்டிலிருக்கும் அத்தனை வேலைக்காரர்களுக்கும் சமையல் செய்வதற்காகவே, பிரத்யேகமாக அந்த அடுப்பு தயாரிக்கப்பட்டது. வள்ளலார் அடுப்பு போல அணையாத அடுப்பு அது.

எம்ஜிஆர் என்று ஒருவர் அன்று இருந்தார்

இதுபோல கடனில் வீட்டை இழக்கும் சூழல், அந்த காலத்தில் சந்திரபாபுக்கு ஏற்பட்டிருக்கிறது, என்எஸ் கிருஷ்ணனுக்கு ஏற்பட்டுள்ளது, நாகேஷூக்கு ஏற்பட்டுள்ளது.. அப்போதெல்லாம் எம்ஜிஆர் என்று ஒருவர் இருந்தார். எம்ஜிஆர்தான் அனைத்தையும் மீட்டு தந்தார். சிவாஜிக்கு இப்படியொரு சிக்கல் ஏற்கனவே வந்தபோது, அவரது குடும்பத்துக்காக சந்திரமுகி என்ற படத்தை கொடுத்தார் ரஜினி..

உடல்நலம் கருதி, படையப்பா படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லி சிவாஜி தரப்பில் மறுப்பு சொல்லப்பட்டுள்ளது.. ஆனால், ரஜினியோ, என்னுடைய அப்பா மாதிரியே அவரை பார்த்து கொள்கிறேன் என்று சொன்னதையடுத்து, கர்நாடகாவில் அந்த படம் எடுக்கப்பட்டது. அதில் சிவாஜிக்கு பேசிய சம்பளம் 10 லட்சம் ரூபாய்.. ஆனால், 1 கோடி ரூபாய் செக் போட்டு தரப்பட்டது சிவாஜிக்கு..

சிவாஜியின் உச்சபட்ச சம்பளம்

செக்கை பார்த்த சிவாஜி, இந்த செக் என்னுடையதில்லை.. யாருக்கோ போக வேண்டியது, அவர்களிடமே திருப்பி தந்துவிடுங்கள் என்றாராம்.. உங்களுக்காகத்தான் 1 கோடி ரூபாய் ரஜினி தர சொல்லி உள்ளார் என்று கூறியிருக்கிறார்கள்.. இதுதான் தான் நடித்த படங்களிலேயே சிவாஜி வாங்கின உச்சபட்ச சம்பளமாகும்.

ஆனால், இப்போதுள்ள நடிகர்கள் தற்போது உஷாராகவே இருக்கிறார்கள. எவ்வளவு சீக்கிரம் பணத்தை சம்பாதிக்கணுமோ, சம்பாதித்துவிட்டு, பணத்தை சேஃப்டி செய்து கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+