600 கோடி தூக்கிய தக் லைஃப்.. உச்சிக்கு போன சிம்பு.. திடீர்னு கமலிடம் வந்த சர்ப்ரைஸ் மாற்றம்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 37 வருஷத்துக்கு பிறகு கமல்-மணிரத்னம், இந்த படத்தில் இணைந்துள்ளதால், நாயகன் படம் போல இதுவும் இருக்குமா? என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், நாயகனை விட பெரிய படமாக தக்லைஃப் இருக்கும்.. நாயகன் படத்தில் இருந்து எடுக்கப்பட்ட கதைமுடிச்சு என்பதால், நாயகனைவிட இந்த படம் பெரிய படமாக அமையும்.. நாயகனின் அடுத்தக்கட்டமாக இந்த படம் இருக்கும் என்று பத்திரிகையாளர் விகே சுந்தர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்

Aagayam யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த சினிமா பத்திரிகையாளர், வி.கே. சுந்தர், தன்னுடைய படம் எப்படி இருக்க போகிறது? கதை என்ன என்பதை வெளியே சொல்லாமல் வியாபாரம் செய்யக்கூடிய ஒரே டைரக்டர் மணிரத்னம் மட்டும்தான். அந்தவகையில் தக்லைஃப் படத்தில் பெரிய காம்பினேஷன் உள்ளது..

Television Thug Life Simbu Kamal Haasan

கமல், திரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் என பெரிய பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.. வழக்கத்தைவிட இந்த மணிரத்னம் படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

ரூ.600 கோடிக்கான பிசினஸ்

இந்த தக்லைஃப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் ரிலீஸ் செய்கிறார்கள்.. தியேட்டர் ரிலீஸுக்கு 350 கோடி ரூபாய்க்கு போயிருக்கிறது.. ஓடிடி உரிமம், ஜியோ ஹாட் ஸ்டார் 152 கோடிக்கு வாங்கிவிட்டார்கள்.. ஓவர்சீஸ் ரிலீஸ், சாட்டிலைட் போன்ற விஷயங்கள்.. அந்தவகையில், இப்போதே கிட்டத்தட்ட 600 கோடிக்கான பிசினஸ் நடந்துவிட்டதாக தெரிகிறது

30 வருடங்களுக்கு மேலாக படங்களை எடுத்துவரும் இயக்குனர், என்றாலும், தற்போதைய டிரெண்டிங்குக்கு ஏற்றபடி அப்டேட்டில் உள்ளார் மணிரத்னம் என்பது டிரைலரிலேயே தெரிகிறது. படத்தில் கமலுக்கு மகன் அசோக் செல்வன்.. சிம்பு வளர்ப்பு மகன் என்பதுபோல தக்லைஃப் கதை அமைந்துள்ளது.. அதற்குள் சஸ்பென்ஸ் என்னவிருக்கிறது என்பதை 1 வாரத்தில் தெரிந்து கொள்ளலாம்.

திரிஷா அபிராமி

திரிஷா, அபிராமி இருவருமே இதில் நடித்திருப்பதால், அபிராமி கமலுக்கும், திரிஷா சிம்புவுக்கும் ஜோடி என்றும் பலரும் நினைக்கிறார்கள்.. ஆனால், திரிஷாதான் கமலுக்கு ஜோடி.. ஆனால், நெகட்டிவ் ரோல்.. அங்கேயும் ஒரு சஸ்பென்ஸ் உள்ளது..

திரிஷாவுடன் நடிக்க வந்த எத்தனையோ பேர் வீட்டுக்கு போயிட்டாங்க.. ஆனால் திரிஷா இன்னமும் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.. அதிலும் பெரிய சம்பளம் வாங்கும் நடிகையாகவே உள்ளார்.. ஒவ்வொரு காலகட்டத்திலும் திரிஷா தன்னுடைய படத்தின் கதைகளை தேர்ந்தெடுக்கும் விதம்தான், இந்த உயரத்துக்கு அவரை கொண்டுவந்துள்ளது.. அதுபோல இது மணிரத்னம் படம் என்பதால், கதைக்கான முக்கியத்துவம் தெரிந்துதான் நடித்திருப்பார்.. இதெல்லாம் ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸிங்காக இருக்கும்..

நாயகன் மணிரத்னம்

37 வருஷத்துக்கு பிறகு கமல் - மணிரத்னம், இந்த படத்தில் இணைந்துள்ளதால், நாயகன் படம் போல இதுவும் இருக்குமா? என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், நாயகனை விட பெரிய படமாக தக்லைஃப் இருக்கும்.. நாயகன் படத்தில் இருந்து எடுக்கப்பட்ட கதைமுடிச்சு என்பதால், நாயகனைவிட இந்த படம் பெரிய படமாக அமையும்.. நாயகனின் அடுத்தக்கட்டமாக இந்த படம் இருக்கும்.

எத்தனையோ நடிகர்கள், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒருகட்டத்துக்கு மேல் வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கி சென்றுவிட்டார்கள். ஆனால் கமல், சிம்பு இருவர் மட்டும்தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பெரிய ஹீரோக்களாக உயர்ந்து நிற்கிறார்கள். இதற்கு காரணம், இந்த இரண்டு பேரும், சினிமாவிலுள்ள அத்தனை தளத்திலும் எல்லாவிதமான பணிகளையும் செய்யக்கூடியவர்கள்.. நடிப்பு, இயக்குனர், மியூசிக், டான்ஸ், என இருவருமே அதில் முழு தகுதி பெற்றவர்கள்..

விக்ரம் பட மாற்றம்

கமலுக்கு இணையான கேரக்டர் இதில் சிம்புவுக்கு தரப்பட்டுள்ளது.. விக்ரம் பட வெற்றிக்கு பிறகு கமலிடம் இப்படியொரு மாறுதல் தென்பட்டுள்ளது.. தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு, கமல் நடிப்பதற்கான ஸ்பேஸ் நிறைய தந்து வருகிறார். ராஜஸ்தானில் ஜெய்சால்மரில் 68 நாள் ஷூட்டிங் எடுத்ததில், 50 நாட்கள் சிம்பு போர்ஷன் மட்டுமே எடுக்கப்பட்டதாம். அந்தவகையில், மணிரத்னம், கமல், சிம்பு, ஏஆர் ரஹ்மான் என கூட்டணி சேரும்போது, தக்லைஃப் படம் ஹிட்டாகும்" என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+