ஜிவி பிரகாஷூக்கு ரூ.7 கோடி.. இளையராஜா கேட்ட 5 கோடி ரூபாய்! ராயல்டி ரூல்ஸே அவருக்கு கிடையாது: பிரபலம்
சென்னை: "ஏழு கோடி ரூபாய் கொடுத்து ஒரு இசையமைப்பாளரை நியமிக்கிறீர்கள். அவரது பாட்டு ஹிட் ஆகவில்லை. எங்கள் பாட்டை எடுத்துப் போடுகிறீர்கள். அதற்கு ரசிகர்கள் கைதட்டுகிறார்கள்; விசிலடிக்கிறார்கள்; ஆட்டமாடுகின்றனர். அதற்கு எங்களுக்கு கூலி வர வேண்டாமா" என்று கங்கை அமரன் பேசியிருப்பது விவாதத்தை உண்டுபண்ணி வருகிறது. இந்நிலையில், இளையராஜா ராயல்டி கேட்ட விவகாரம் குறித்து டாக்டர் காந்தராஜ் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
"சினிமா என்பதே மிகைப்படுத்தப்பட்ட விஷயம்தான்.. சினிமாவில் 2 படங்கள் நடித்தாலே உலக கோடீஸ்வரர்களாகி விடுகிறார்கள்.. சினிமா, அரசியல் இரண்டிலுமே எதற்காக பலர் வெற்றியடைந்தார்கள் என்பதற்கு காரணமே சொல்ல முடியாது. சில அரசியல் கட்சிகள் தேர்தலில் எப்படி வெற்றி பெற்றன? என்றும் சொல்ல முடியாது.

அறிஞர் அண்ணா
எதை சொன்னாலும், மக்களை கவர்கிற விதத்தில் சொன்னால் போதும்.. உதாரணத்துக்கு அறிஞர் அண்ணாவை எடுத்துக் கொண்டால், உருவத்தை பற்றி கவலைப்பட்டது கிடையாது.. குள்ளமான உருவம், அவர் வேட்டி கட்டுவதே வித்தியாசமாக இருக்கும்.. ஒருபக்கம் சற்று தூக்கி வேட்டியை கட்டியிருப்பார்.. துண்டு போட்டிருப்பார். முகத்தில் ஷேவ் செய்ய மாட்டார்.. அப்படியே மேடைக்கு ஏறிவருவார் மேடைக்கு.. என்றுமே தன்னுடைய உருவத்தை பற்றி கவலைப்பட்டதில்லை..
இரவு 8 மணிக்கு கூட்டம் என்றால், அவர் வருவதற்கே 10.30 மணி ஆகிவிடும்.. அதுவரைக்கும் அவரது பேச்சுக்காகவே காத்து கிடப்பார்கள் மக்கள்.. அவர் பேசி முடிக்க இரவு 2 மணி ஆகும்.. இதற்கு நேர் எதிரானவர் எம்ஜிஆர்.. மேக்கப் இல்லாமல் அவர் வெளியே வந்ததே கிடையாது.. பேச்சை மட்டுமே நம்பி பிரபலமானவர் அண்ணா.. தங்களது தோற்றத்தை வைத்தே சக்சஸ் ஆனவர்கள் காந்தியும், எம்ஜிஆர் போன்றவர்கள்..
சாந்தி தியேட்டர், உதயம் தியேட்டர்
எனவே மக்களை கவர்கிற வகையில் யார் தங்களை முன்னிலைப்படுத்தி கொள்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள். இப்போது தியேட்டர்களில் படம் வசூலை குவிக்கிறது என்கிறார்கள்.. மால்களில்தான் தியேட்டர்களே இன்று உள்ளது.. ஒன்றிரண்டு தியேட்டர்கள் உள்ளபோது, அப்பறம் எப்படி படங்கள் வெற்றிகரமாக ஓடும்? எந்த தியேட்டரில் கோடிக்கணக்கான வசூல் வருகிறது?
தியேட்டர் இருந்தால்தானே மக்கள் போய் படம் பார்க்க? சாந்தி தியேட்டர், உதயம் தியேட்டர் போல இடித்து கொண்டிருந்தால் எப்படி?
படம் வந்து 2வது நாளே ஓடிடியில் வெளிவந்துவிடுகிறது.. தியேட்டருக்கு எப்படி கூட்டம் வரும்? குட் பேட் அக்லி பட விவகாரத்தில் ரீமிக்ஸ் பாடல்களைதான் அதிகம் கேட்கிறார்கள்.. தொட்டு தொட்டு பேசும் சுல்தானா, ஒத்த ரூபா என்று பழைய பாடல்களையே மீண்டும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த காலத்திலிருந்தே, இப்படி பழைய பாடல்களை புதிய படங்களில் திணிப்பது, பழக்கமான ஒன்றுதான்.. ஜிவி பிரகாஷூக்கு 7 கோடி ரூபாய் சம்பளம் தந்ததாக சொல்கிறார்கள்.
காப்பிரைட் விஷயம்
ஆனால், மெயின் பாட்டுக்கு, ரீமிக்ஸ் பாடல்களை உபயோகிக்க மாட்டார்கள். மந்திரி குமாரி படத்தில் வந்த வாராய் நீ வாராய் பாடலை நான் 1000 முறை கேட்டிருப்பேன். இப்போது அதே பாட்டை என்னால் கேட்க முடியாது. அதனால், ரசிகர்களின் வித்தியாசம் கருதி இப்படி பழைய பாடல்களை திணித்திருக்கலாம்.. அது சாதாரண விஷயம்தான்.
அதேபோல, பாடல்களில் காப்பி ரைட் விஷயமும் அந்த காலத்திலிருந்தே இருக்கிறது.. தமிழ் பாடல்கள் மீது ஹாலிவுட்டில் அப்போதே கேஸ் போட்டிருக்கிறார்கள்.. இளையராஜாவை பொறுத்தவரை, ராயல்டியை அவர் எப்போதுமே கேட்க கூடாது. அவர்தான் தன்னுடைய பாடல்களை விற்றுவிட்டாரே? அப்படியானால் தயாரிப்பாளருக்குதானே உரிமை உள்ளது?
இட்லி சாப்பிட்டாச்சு
நான் உங்களுக்கு இசையமைத்தேன், நீங்கள் எனக்கு காசு தந்தாகிவிட்டது. அப்பறம் அந்த பாடல்மீது எப்படி அவர் உரிமை கொண்டாட முடியும்? காசு கொடுத்து இட்லி வாங்கி சாப்பிட்டாச்சு.. பிறகு இட்லியை வந்து கேட்டால்? அதுபோல தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளதே தவிர, இசையமைப்பாளர்களுக்கு கிடையாது..
வயலினில் டியூன் போட்டதுக்கு ராயல்டி என்றால், வயலினை கண்டுபிடித்தவர்கள் ராயல்டி கேட்க மாட்டார்களா? வீணையை கண்டுபிடித்தவர்கள் காசு கேட்க மாட்டார்களா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications