750 கோடி வசூல் தூக்கும் குட் பேட் அக்லி? அல்டிமேட் அஜித்குமார்! தியேட்டரில் தொண்டை கிழியுது: பிரபலம்
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. அஜித்தின் "குட் பேட் அக்லி" படம் நேற்று வெளியாகியிருக்கும் நிலையில், அது தொடர்பான விமர்சனங்களை நெட்டிசன்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில், பத்திரிகையாளர் வெங்கடேஷ் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
AramNaadu என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ், "குட் அண்ட் பேட் அக்லி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது.. அஜித்தின் மாஸ் என்டர்டெயின்மென்ட் படமாக உள்ளது.. தான் இத்தனை காலமும் தீவிரமாக பார்த்து பார்த்து ரசித்த அஜித்தை, கமர்ஷியல் ஹீரோவாக, மாஸ் ஹீரோவாக, வேற லெவலில் காட்டியிருக்கிறார் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன்.

விறுவிறுப்பான படம்
சீன் பை சீன் தன்னுடைய பெர்ஃபாரமன்ஸ் அஜித் ஸ்டைலாக செய்திருக்கிறார்.. பெரும்பாலும் அஜித் படங்களில் ஸ்டைல் செய்திருக்க மாட்டார். இந்த படத்தில் அவரது ஸ்டைல் பக்காவாக உள்ளது. நிஜ ஸ்டைலுக்கு சொந்தக்காரரான ரஜினிகாந்தே, அஜித்துக்கு படம் வெற்றி பெற வாழ்த்து சொல்லி உள்ளார்.. இந்த குட் பேட் அக்லி எதிர்பார்ப்பு கடந்த ஒரு மாதமாகவே இருந்த நிலையில், அந்த எதிர்பார்ப்பு படம் ரிலீஸாகியும் எகிறி வருகிறது.
எங்கே படம் ஆரம்பித்து, எங்கே முடிகிறது என்று தெரியாத அளவுக்கு படம் விறுவிறுப்பாக போகிறது.. 2 மணி நேரம் 20 நிமிடம் போனதே தெரியவில்லை.. ரசிகர்களை இப்படிதான் திருப்தி செய்து அனுப்ப வேண்டும். அந்த அளவுக்கு டைரக்டர் இப்படத்தை செதுக்கி வைத்திருக்கிறார்..
ரிப்பீடட் ரசிகர்கள் அதிகமாக வருவார்கள்.. வார இறுதி விடுமுறையில் கலெக்ஷன் அதிகரிக்கும். இந்த படத்தில் அப்பா சென்ட்டிமென்ட், மனைவியின் சென்டிமென்ட் சொல்லப்பட்டுள்ளது.
தீனா, பில்லா, அமர்க்களம்
அதேபோல, தான் செய்த கேங்ஸ்டர் படங்களிலிருந்தே ரெஃப்பரன்ஸ் எடுத்திருக்கிறார் அஜித்.. தீனா, பில்லா, அமர்க்களம், படங்களிலிருந்து எடுத்து தந்துள்ளார்கள்.. பொதுவாக, கேங்ஸ்டர் படம் என்றாலே மும்பை அளவில்தான் எடுப்பார்கள்.. ஆனால் இந்த படம் இன்டர்நேஷனலில் அளவில் கேங்ஸ்டர் படமாக எடுத்துள்ளார்கள்..
இந்த படத்தில் குறைகள் சொல்வதற்கு எதுவுமே இல்லை.. லாஜிக் பற்றி சிலர் கேட்கலாம்.. ஆனால் சில சீன்களுக்கு லாஜிக்கே தேவையில்லை.. ஹீரோவென்றால் அனைவரையும் அடித்துதான் தீருவார்.. படம் முடிந்தும்கூட, ரசிகர்கள் தியேட்டரை விட்டு வெளியே வரவேயில்லை.. அப்படியே நின்றுகொண்டே விசில் அடித்து கொண்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
கலெக்ஷன் அள்ளும்
முன்னதாக, King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "விஜய், ரஜினி இருவருமே கலெக்ஷன் மாஸ்டர்கள்.. விஜய்யின் லியோ படத்தை போல, ரஜினியின் ஜெயிலர் படத்தை போல, அஜித்தின் இந்த படமும் கலெக்ஷன் எதிர்பார்க்கப்படுகிறது.. புக்கிங்கே 15 கோடிக்கு இப்போது நடந்துள்ளது.. வெளிநாடுகளில் 20 கோடிக்கு நடந்துள்ளது.. சனி, ஞாயிறு விடுமுறை என மொத்தம் 4 நாளில் 120 கோடியை தாண்டும்.. எப்படியும், 500 கோடி முதல் 750 கோடி வரை இந்த படத்தின் கலெக்ஷனை எதிர்பார்க்கிறார்கள்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications