Run serial: பணக்கார வீட்டு பெண்ணுன்னு பில்டப் குடுத்தாங்க... கார் டியூ கட்டலையாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் ரன் சீரியலில் நிழல்கள், ரவி, கிருஷ்ணா, நியூஸ் ரீடர் சரண்யா போன்ற முக்கியவர்கள் நடித்து இருக்கிறார்கள்.ஆரம்பமே நன்றாக இருக்கிறது.

சரண்யா பாங்காங்கில் ஹாஸ்பிடாலிட்டி இன்டெர்ன் முடித்து இருக்கிறார். அங்குதான் முதல் எபிசோட் காண்பித்தார்கள். பார்க்க நன்றாக இருந்தது.

பெரிய பணக்கார வீட்டுப் பெண் என்று ஆரம்பத்தில் பில்டப் கொடுக்க, நாமும் சரி என்று பார்த்தால், இன்டெர்ன் முடித்துவிட்டு வந்த பெண்ணுக்கு பரிசாக கொடுத்த ஆடி காருக்கே நாலு மாசம் டியூ கட்டலையாம்.

அப்பா எங்கே?

அப்பா எங்கே?

இன்டெர்ன் முடித்துவிட்டு, அம்மா அப்பா கல்யாண நாளுக்காக இந்தியா வருகிறாள் மகள். அப்பாவும் மகளை வரவேற்க ஏர்போர்ட் வருவதாக சொல்லிவிட்டு கடைசியில் வரவில்லை. ஏமாந்து போன மகள், அப்பாவுக்கு ஏதோ பிரச்சனை என்று மனத்துக்குள் அழுகிறாள், தவிக்கிறாள் ஆசை மகள். மற்ற இரண்டு மகள்களும், அம்மாவும் கூட சாதாரணமாக இருக்கிறார்கள்.

அம்மாவுக்கு பரிசு

அம்மாவுக்கு பரிசு

அம்மாவுக்கு அப்பா கல்யாண நாள் பரிசு கொடுப்பது போல தான் வாங்கி வைக்க வேண்டும் என்று, தனக்கு அப்பா பரிசாகக் கொடுத்த ஆடி காரை எடுத்துக் கொண்டு கடைக்கு போகிறாள், அங்கு ஒரு லட்சம் மதிப்புள்ள நெக்லெஸ் வாங்கிகிட்டு காரில் வரும்போது, ஒருத்தன் காரை துரத்திக்கொண்டே வருகிறான். யார் என்று பார்த்தால் அவர்தான் கிருஷ்ணா.

பெட்ரோல் லீக்

பெட்ரோல் லீக்

அவள் காரை நிறுத்த உங்க காரில் பெட்ரோல் லீக் ஆகுதுங்க பாருங்கன்னு சொல்றான். அவள் காரை நிறுத்திவிட்டு எட்டிப் பார்க்க, இறங்கி பாருங்க. அப்போதுதான் தெரியும்னு சொல்றான். அவளும் காரை விட்டு இறங்கி பார்க்க, பெட்ரோலும் லீக் ஆகலை.. ஒண்ணுமில்லை. காரை எடுத்துக்கொண்டு அவன் போயிடறான்.

துரத்தி காரை பிடித்தால்

துரத்தி காரை பிடித்தால்

போலீசுடன் காரை துரத்திப் பிடித்தால், போலீசிடம், காருக்கு நாலு மாசம் டியூ கட்டலைங்க. அதான் காரைத் தூக்கிட்டேன்னு சொல்றான் இவன். போலீசும் விலகி சென்றுவிட ,காரையும் அவன் எடுத்துச் சென்றுவிட நடு ரோட்டில் நிற்கிறாள் இவள்.

கால் டாக்சி புக் செய்து வீடு வந்து சேர்ந்தால், வீட்டில் எல்லாரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அப்பாவைப் பற்றி யாரும் நினைக்கலை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+