Run Serial: குற்றம் நடந்தது என்ன? சேர்ந்து கண்டுபிடிக்க போறாங்க!
சென்னை: சன் டிவியின் ரன் சீரியல் ஆரம்பமே கொஞ்சம் பரபரப்புதான். எடுத்த எடுப்பில் சக்தியின் காதலி கேரோலின் காணாமல் போவதும், அடுத்து திவ்யாவின் அப்பா டாக்டர் காணாமல் போவதும் என்று.
கேரோலின் காணாமல் போன அடுத்த நாள் கடற்கரையில் பிணமாக கிடைக்க, அதற்கு அடுத்த நாளில் டாக்டர் ஆர்.கேவும் கல் குவாரியில் பிணமாக கிடைக்கிறார்.
அப்பாவின் சார்பாக திவ்யாவும், கேரோலின் சார்பாக காதலன் சக்தியும் இருவரின் இழப்பை தாங்கிக்க முடியாமல் அல்லாடினாலும், இருவருக்குமே காரணம் என்ன என்று தெரிய வேண்டும்.

சக்தி திவ்யா
திவ்யா ஹாங்காங்கில் படிச்சுட்டு வந்ததுமே சக்தியுடன் பிரச்சனை துவங்கி விட்டது. அதாவது திவ்யாவின் அப்பா ஆர்.கே. அவளுக்கு பரிசாக கொடுத்த ஆடி காருக்கு டியூ கட்டவில்லை என்று காரை சீஸ் செய்கிறான் சக்தி. இதில் இருவருக்கும் சண்டை ஆரம்பிக்கிறது என்றாலும், அடுத்தடுத்து இருவரின் சொந்த பிரச்சனை காரணமாக அடிக்கடி சந்திக்க நேர்கிறது.

ஒரே பிரச்சனை
சக்தி கண்டுபிடித்து விட்டான்..தனது காதலி கேரோலினை கொன்றது ஆர்.கே தான் என்று.ஆனால்,ஆர்.கே வும் இரண்டு நாளில் இறந்துவிட இப்போது ஆர்.கே.இறந்தது எதனால். இவருக்கும் கேரோலினுக்கும் எந்த வகையில் தொடர்பு என்று சக்தி ஆராய நினைக்கிறான். இதனால், அடிக்கடி திவ்யாவுக்கு தொல்லை கொடுக்க பொறுத்துக்க முடியாத திவ்யா போலீசில் புகார் கொடுக்கிறாள்.

ஆஸ்பத்திரி தப்பிச்சது
ஆஸ்பத்திரி தவிர வீட்டின் மீது கடன். சொத்து பத்திரத்தை வைத்து கடன் என்று, ஆர்.கே.பல வகையிலும் கடன் வாங்கி வைத்திருக்கிறார். இதனால், குடும்பமே திகைத்து நிற்கிறது. ஆஸ்பத்திரியை விற்றால் மட்டுமே பிரச்சனையில் இருந்து மீளமுடியும் என்கிற நிலையிலும், அப்பா கனவில் உருவான ஆஸ்பத்திரியை விற்க கூடாது என்று கூறுகிறாள் திவ்யா.

ஸ்ட்ரைக் ஊழியர்கள்
ஆஸ்பத்திரியில் பல மாதங்களாக சம்பள பாக்கி என்று ஊழியர்கள் பேசியதைக் கேட்ட சக்தி, அவர்களை ஸ்ட்ரைக் செய்ய தூண்டி விடறான். இதுவரை திவ்யாவுக்கு தெரியவில்லை, சக்தி ஏன் நம்ம விஷயத்தில் அடிக்கடி குறுக்கே வருகிறான் என்று. இருவருக்குமே எதிரி திவ்யாவின் சித்தப்பாதான் என்று இருவருக்கும் தெரிந்து இருவரும் சேர்ந்து ஓடும் ஓட்டமாக ரன் சீரியல் இருக்கும் போல!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications