குத்திக் குடையும் மாமியார்களுக்கு மத்தியில்.. வாரிக் குவிக்கும் ரூபஸ்ரீ!
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலில் இது வரைக்கும் பாசமான மாமியாராக பார்த்துக்கொண்டிருந்த ரூபஸ்ரீ இந்த சீரியலில் சௌந்தர்யா கேரக்டரில் நடித்திருக்கிறார் .
இவர் இந்த சீரியல் ஆரம்பித்த காலகட்டத்தில் பலபேர் திட்டி தீர்த்த மாமியாராக இருந்தாலும் தற்போது மாமியார் என்றால் இந்த மாதிரி ஒரு மாமியார் தான் இருக்கவேண்டும் என்று பலபேர் ஆசைப்படுகிற அளவிற்கு அனைவரின் மனதிலும் நல்ல ஒரு இடத்தை பிடித்து விட்டார்.
இவர் இதற்காகத்தான் இவ்வளவு நாட்கள் காத்திருந்தாராம் அந்த இடத்தை பிடித்ததும் ரொம்பவே சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் இவர் தற்போது ஒரு குழந்தை போல இவரும் மாரி குழந்தையுடன் ஆடிய ஆட்டம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மலையாளத்து ரூபஸ்ரீ
ரூபஸ்ரீ முதன்முதலில் மலையாள படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் அவர் தமிழில் அறிமுகமானது எங்க வீட்டு வேலன் என்னும் திரைப்படத்தின் மூலமாகத்தான் .அந்த படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமாகியிருக்கிறார். ஆனாலும் அதனை பிறகு யாவரும் நலம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

சீரியலில் கலக்கல்
ஆனால் இவருக்கு திரைப்படங்களில் தான் நினைத்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை அதனால் திருமணத்திற்கு பிறகு இவர் சீரியலில் நடிப்பதற்கு களம் இறங்கி இருக்கிறார். பல நடிகைகளுக்கு தான் எதிர்பார்த்த அளவிற்கு முதல் இன்னிங்சில் கோல் வில என்றாலும் இரண்டாவது இன்னிங்சில் வெற்றி அடைந்து விடுகிறார்கள்.

மாமியாராக அசத்தல்
அந்த மாதிரிதான் இவர் கதாநாயகியாக கலக்க முடியாவிட்டாலும் சீரியல்களில் தற்போது அம்மா கேரக்டரிலும் மாமியார் கேரக்டரிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் .முதல் முதலில் சன் சன் டிவியில் சீரியலில் இவர் அறிமுகமாகி இருந்தாலும் அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலமாக குடும்ப பெண்களின் வரவேற்பைப் பெற்றார்.

கண்ணம்மாவின் மாமியார்
தற்போது இவர் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் மாமியாராக அனைத்து பெண்களின் மனதிலும் வாழ்ந்து வருகிறார். சௌந்தர்யா என்னும் கேரக்டருக்கு பொருத்தமாக இவர் தான் இருப்பதாக பல்வேறு ரசிகர்களும் கூறி வருகிறார்கள் .அந்த அளவிற்கு இவர் தற்போது ரசிகர்களிடம் மனதில் நல்ல இடத்தைப் பெற்றுவிட்டார்.

பாராட்டித் தள்ளும் வாய்கள்
இதற்கு முன்பு இவரை கழுவி கழுவி ஊற்றிய ரசிகர்கள் கூட தற்போது புகழ்கிறார்கள் இந்த சீரியல் திடீரென்று இந்த அளவிற்கு பாப்புலர் ஆவதற்கு காரணம் ரூபஸ்ரீயும் ஒருவர். அதனாலே இவர் பல பெண் ரசிகர்களின் செல்ல மாமியாராக மாறிவிட்டார். அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் சேட்டைகளை வீடியோ காக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் இவர் தற்போது வீடியோவில் கலக்கியுள்ளார்.

குத்து
எல்லோரும் ஆட்டம் போடும் போட்டான புட்ட பொம்மா பாடலுக்கு அந்த சீரியலின் குழந்தையோடு இவரும் குழந்தையாக மாறி ஆட்டம் போட்ட வீடியோக்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்ததும் ரசிகர்கள் நீங்கதான் இந்த சீரியலில் மாமியார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் . கதாநாயகி மாதிரி இருக்கீங்க என்று இவருக்கு ஐஸ் வைத்து வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications