தேவா கையெழுத்தால் என் தலையெழுத்தே மாறும்னு நினைத்தேன்.. சரிகமப அபினேஷ் உருக்கம்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி போட்டியாளரான அபினேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் சரிகமப நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் மற்றும் பாராட்டுக்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அப்போது இசையமைப்பாளர் தேவா கையெழுத்து போட்டுக் கொடுத்த கீ போர்டு குறித்து அபினேஷ் எமோஷனலாக பேசி இருக்கிறார்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பலர் அவர்களே நினைத்து பார்க்காத அளவிற்கு பிரபலமாகி விடுகிறார்கள். சிலருக்கு திறமைகளை இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள்தான் அடையாளப்படுத்துகிறது. அது போல சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற பல முன்னணி சேனல்களிலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் புதியது புதியதாக தொடங்கப்பட்டு வருகிறது.

சரிகமப நிகழ்ச்சி
அந்த வரிசையில் ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் சீனியர் மற்றும் ஜூனியர்களுக்காக இரண்டு பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஜூனியர்களுக்கான லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சரிகமப பைனல் போட்டியாளர்கள்
அதேபோல பைனலுக்கு ஆறு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அதில் திவினேஷ், ஹேமித்ரா, யோகஸ்ரீ, அபினேஷ், ஸ்ரீமதி உட்பட ஆறு பேர் இருந்தனர். இதில் அபினேஷ் சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்டு பேசி இருந்தார். அதில் அபினேஷ் பேசும் போது நான் சரிகமப நிகழ்ச்சி செட்டை இப்போ ரொம்பவே மிஸ் பண்றேன். பைனல் முடிஞ்சதும் அடுத்த நாள் எந்த பாடலை தேர்ந்தெடுக்கலாம் என்கிற நினைவு தான் எனக்கு வந்தது.
மறக்க முடியாத நினைவுகள்
ஏற்கனவே ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்த வாரத்திற்கு என்ன பாட்டு பாடலாம் என்று யோசனை இருப்பது போல இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது. அடுத்த நாளில் எனக்கு அதே சிந்தனை தான் வந்தது. வீட்டில் சும்மா ஹம் பண்ணுவேன் அப்போ என்னுடைய குரல் நல்லா இருக்குன்னு என்னுடைய அம்மா என்னை பாட்டு கிளாசில் சேர்த்து விட்டாங்க. ஆனால் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கு பாடலும் என்கிற ஆசை என் பாட்டிகிட்ட இருந்து தான் வந்தது.
நடுவர்களின் பாராட்டு
அதுபோல சரிகமப நிகழ்ச்சியில் ஜட்ஜஸ் எப்பவுமே ஊக்கப்படுத்துவாங்க. ஒரு வாரம் சரியா பாடலைன்னாலும் அடுத்த வாரம் சரியா பாடணும் என்று ஊக்கப்படுத்திட்டே இருப்பாங்க. எஸ்பிபி சரண் என்னுடைய குரலுக்கு செட் ஆகுற மாதிரியான பாடல்களை ரெகமெண்ட் பண்ணுவாரு. அதுபோல எஸ்பிபி சார் ஒரு பிரண்டு மாதிரி ஜாலியா இருப்பாரு. அதுபோல சரிகமப நிகழ்ச்சியில் ஸ்வேதா மேனன் மேம் கூட பாடின மொமென்ட் ஜாலியா இருந்தது என்று கூறியிருந்தார்.
தேவா கொடுத்த கிப்ட்
மேலும் தேவா மற்றும் ரகுமான் பற்றிய அபினாஷ் பேசுகையில், நான் பைனலுக்கு போவதற்கு முன்பு தேவா சார் என்னை பாராட்டி இருந்தார். அவர் கையெழுத்து போட்டுக் கொடுத்த கீபோர்ட்டை நான் பொக்கிஷமா வீட்டில் வைத்திருக்கிறேன். அந்த கீபோர்டு வச்சு நான் பெரிய மியூசிக் டைரக்டர் ஆகணும்னு வாழ்த்துனாரு. அவருடைய கையெழுத்து என்னுடைய தலையெழுத்தை மாத்தும்னு நம்புறேன் என்று நெகிழ்ச்சியாக அபினேஷ் பேசியிருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications