Sai Pallavi: ஏஐ போட்டோ இல்ல! இதுதான் உண்மை! நீச்சல் உடை சர்ச்சைக்கு சாய் பல்லவி கொடுத்த பதிலடி
சென்னை: தென்னிந்திய சினிமாவில், அழகுக்கு ஒப்பனையோ, ஆடம்பரமாக உடையோ தேவையில்லை என நிரூபித்தவர் நடிகை சாய் பல்லவி. தனுஷ், சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்திருந்தாலும், எப்போதும் வீட்டுப் பெண் போன்ற தோற்றத்திலேயே நடிப்பவர். கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஹோம்லி லுக்கில் மட்டுமே நடித்து, தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கும் சாய் பல்லவி, இப்போது இணையத்தில் எழுந்த ஒரு பெரிய சர்ச்சைக்கு, அவரே ஒரு வீடியோ மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார்.

சாய் பல்லவியின் திரைப் பயணம்
தமிழில் மாரி 2, என்.ஜி.கே. போன்ற படங்களில் நடித்த சாய் பல்லவி, கடைசியாக அமரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தெலுங்குத் திரையுலகில் அவர் அதிகமான வெற்றிகளைக் குவித்துள்ளார். நானி, நாக சைதன்யா போன்ற இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர், கார்க்கி போன்ற படங்களில் சோலோ நாயகியாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். குறிப்பாக, ஷியாம் சிங்க ராய் படத்தில் தேவதாசி கதாபாத்திரத்தில் அவர் நடித்த விதம், அவருடைய நடிப்புத் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இத்தகைய திறமையான நடிகை, தன் திரைப்படங்களில் எப்போதும் கவர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் இருந்ததே, அவருடைய தனிச் சிறப்பு.
சர்ச்சையான நீச்சல் உடை புகைப்படம்
சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் சாய் பல்லவி, அவ்வப்போது தன் புகைப்படங்களைப் பகிர்வார். அவை பெரும்பாலும் ஹோம்லி லுக்கிலேயே இருக்கும். ஆனால், கடந்த வாரம் இந்த வழக்கத்தைக் கொஞ்சம் மீறிய ஒரு சம்பவம் நடந்தது.
சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதில், சாய் பல்லவியும் அவரும் நீச்சல் உடையில் அமர்ந்திருந்தது போல ஒரு காட்சி இருந்தது. அதுபோல பூஜா வெளியிட்ட சில புகைப்படங்களை போலவே இன்னும் சில புகைப்படங்களும் வெளியானது. அதில் சாய் பல்லவி உடல் பாகங்கள் தெரியும் அளவிற்கு நீச்சல் உடையில் இருப்பது போன்று இருந்தது.
இந்த ஒற்றைப் புகைப்படம், இணையத்தில் பெரிய பரபரப்பைக் கிளப்பியது. "சாய் பல்லவி தனது கொள்கையிலிருந்து மாறி, கவர்ச்சிக்கு வந்துவிட்டாரா?" என்று ஒரு தரப்பினர் விமர்சனம் செய்தனர். இன்னொரு தரப்பினர், "ஆடை அணிவது அவருடைய தனிப்பட்ட சுதந்திரம், இதில் யாரும் தலையிட முடியாது" என்று ஆதரவுக் குரல் கொடுத்தனர். மொத்தத்தில், இந்த நீச்சல் உடை விவகாரம் சாய் பல்லவிக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகள் எழக் காரணமாக அமைந்தது.

அது ஏ.ஐ இல்லை ஒரிஜினல்
சாய் பல்லவியின் தங்கை வெளியிட்ட இந்த புகைப்படங்களை, சில நெட்டிசன்கள் ஏ.ஐ (Artificial Intelligence) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றி வெளியிட்டதாகச் செய்திகள் வந்தன. இந்த வதந்திகள் அதிகமாகப் பரவி வந்த நிலையில், இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாய் பல்லவியே களத்தில் குதித்தார்.
அவர் தன் தங்கையுடன் இருக்கும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோ கிளிப்கள் அடங்கிய தொகுப்பைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெளிவாகக் குறிப்பிட்டது என்ன தெரியுமா? "இது முழுக்க முழுக்க ஒரிஜினல் பதிவு, ஏ.ஐ பதிவுகள் அல்ல" என்று பதிவிட்டிருந்தார்.
இருப்பினும், அவர் புதிதாக வெளியிட்ட அந்த வீடியோவில், முதலில் வெளியான சர்ச்சைக்குரிய நீச்சல் உடை புகைப்படம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தான் வெளியிட்ட இந்த வீடியோ, ஏ.ஐ மூலமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கவில்லை என்று அவர் உறுதிப்படுத்தியதன் மூலம், அந்தப் புகைப்படங்கள் அனைத்தும் உண்மையானவை என்பதை அவர் உணர்த்திவிட்டார். அதுபோல அதற்கு முன்பு வெளியான புகைப்படங்கள் ஏஐ தான் அது ஒரிஜினல் இல்லை என்று இந்த பதிவு மூலமாக சாய் பல்லவி கூறி இருக்கிறார். இந்த அறிவிப்பால், சாய் பல்லவி தொடர்பான இந்தச் சர்ச்சை இப்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications