உங்களுக்கு கஷ்டமா இருந்தா உடனே வெளியே போங்க! இயக்குனர் சொன்ன வார்த்தை.. சாய் பல்லவி ரியாக்ஷன்
சென்னை: நடிகர் சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவான தண்டேல் படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் சாய்பல்லவி கலந்து கொண்ட போது அவரிடம் இயக்குனர் உங்களால் இருக்க முடியவில்லை என்றால் வெளியே போங்க என்று பேசி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகை சாய் பல்லவி சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்து இப்போது கொடிகட்டி பறந்து வருகிறார். டிவி நிகழ்ச்சியில் டான்ஸ் ஆட வந்து அவருடைய டான்ஸ் சரியில்லை என்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் இப்போது அவருடைய டான்ஸ் பலருடைய ஃபேவரைட்டாக மாறி இருக்கிறது.

எந்த இடத்தில் புறக்கணிக்கப்பட்டாரோ அதே இடத்தில் அதைவிட இப்போது பெரிதாக வளர்ந்து நிற்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் சாய் பல்லவி நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே ஹிட் அடித்துக் கொண்டிருக்கிறது. தமிழில் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயனோடு நடித்த அமரன் திரைப்படம் வெளியாகி பட்டித்தொட்டி எல்லாம் வெற்றி அடைந்தது.

அதைத் தொடர்ந்து இப்போது நாக சைதன்யாவுடன் சாய் பல்லவி தண்டேல் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு காதல் திரைப்படமாக எடுத்து முடித்திருக்கின்றனர்.
இந்த திரைப்படத்தை இயக்குனர் சந்து முன் பேட்டி இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. அதில் கார்த்திக் சுப்புராஜ், வெங்கட் பிரபு, நடிகர் கார்த்தி என்று பல பிரபலங்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய வெங்கட் பிரபு நாக சைதன்யா கூட கஷ்டடி திரைப்படத்தை இயக்கி இருக்கிறேன். ரெண்டு வருஷம் கழிச்சு அவரை இப்போதுதான் பார்க்கிறேன்.

அவர் கதைகளை தேர்வு செய்யும் விதம் ரொம்பவே பயங்கரமாக இருக்கும். சொல்லப்போனால் அவருக்கு கதை சொல்லி சமாதானப்படுத்துவது ரொம்ப கஷ்டமாக இருக்கும். இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்று நடிகர் கருணா சொன்னாரு. ட்ரைலர் பார்க்கும்போது அந்த படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காங்க என்று தெரிகிறது.
சாய்பல்லவி மேடம்க்கு மிகப்பெரிய ரசிகன் நான். பல டைரக்டர் சாய்பல்லவி மேடமோட ரசிகர்கள் என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு நல்லா நடிக்கிறாங்க என்று பாராட்டி இருந்தார். அதைத் தொடர்ந்து இசைஅமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாந்த் பேசும்போது இந்த படத்தின் போஸ்டர் வெளியான போது நாக சைதன்யாவின் கெட்டப்பை பார்த்து ரொம்பவும் மிரண்டு போயிட்டேன்.
இது நம்ம நாக சைதன்யாவா என்று எனக்கே வியப்பாக இருந்தது. ஏனென்றால் அந்த படத்தில் அந்த அளவிற்கு அவர் ரொம்ப மாறி இருக்கிறார். ஒரு கடல் சார்ந்த படம் என்றாலே அது தமிழ்நாட்டுடன் தொடர்புடையதாகவே காணப்படுகிறது. கண்டிப்பா இந்த படம் எல்லோருக்கும் ஸ்பெஷல் படமாக இருக்கும் என்று பாராட்டி விட்டு சாய் பல்லவி பற்றி தேவி பிரசாந்த் பேசும்போது மணிரத்தினம் சார் சாய்பல்லவிக்கு ரசிகர் என்று சொல்லிவிட்டார்.
இந்த படம் இடம் பெற்ற பாடலில் சாய் பல்லவி நடனம், கோரியோகிராபி என எல்லாமே அட்டகாசமாய் இருக்கிறது. ஒரு பாட்டு ஹிட் ஆகணும்னா அதில் பல்லவி அவசியம் என்று சொல்லிய தேவி பிரசாத் நான் சொன்னது சாய்பல்லவி இல்லை என்று கிண்டல் செய்திருந்தார்.
அதை தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் சாய் பல்லவிக்கு உடல்நிலை சரியில்லை. அவரா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று சொல்லி இருந்தார். ஆனாலும் வலுக்கட்டாயமாக நாங்க தான் அவரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சொன்னோம். இவ்வளவு நேரம் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்தது எங்களுக்கு ரொம்பவும் சந்தோஷம். அதனால் முடியலன்னா தயவு செய்து வெளியே போறீங்களா? என்று மைக்கில் கேட்டதும் ஒரு நிமிடம் திகைத்து போன சாய்பல்லவி, வேண்டாம் நான் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன் என்று சிரித்தப்படியே சொல்லி இருக்கிறார்.
அதற்கும் தயாரிப்பாளர் இல்ல நீங்க போகலாம் என்று சொல்ல அதற்கு சாய் பல்லவி நான் ஹீரோ பேசினதும் போறேன் என்று சொல்லியிருக்கிறார் அதற்கு தயாரிப்பாளர் அவர் ஏற்கனவே சொல்லி வச்சாரு நான் பேசின பிறகு தான் நீங்க போகணும்னு சொல்லி இருக்காரா என்று கேட்டிருக்கிறார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அதிகமான ரசிகர்கள் ஒருத்தங்க உடம்பு சரியில்லன்னா அவங்கள போக சொல்லி மைக்ல தான் சொல்லுவீங்களா? என்று தயாரிப்பாளரை கிண்டல் செய்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications