ராஷ்மிகா என்ன! அவங்க ஓகே சொன்னா பிறக்க போகும் மகள் கூடவும் நடிப்பேன்! சல்மான் கான் பேச்சு
மும்பை: நான் ராஷ்மிகா மந்தனாவின் மகளுடன் கூட நடிப்பேன். இதனால் உங்களுக்கு என்ன போச்சு என பாலிவுட் நடிகர் சல்மான் கான் கேள்வி எழுப்பியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்- ராஷ்மிகா நடிக்கும் சிக்கந்தர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக கொண்டாடப்படுகிறது. அவருக்கு இந்தி மட்டுமில்லை, மற்ற மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளன. இவர் 1988 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார்.

ஷாருக்கான், அமீர்கான், க்ருத்திக் ரோஷன் உள்ளிட்டோர் நடிக்க வந்தாலும் சல்மான் கானுக்கான மவுசு குறையவில்லை. தற்போது 57 வயதாகும் சல்மானுக்கு திருமணம் ஆகவில்லை. அவரும் ஐஸ்வர்யா ராயும் காதலித்து வந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இவர்களது காதல் திடீரென முறிந்து.
நடிகைகள்
இதையடுத்து பல நடிகைகளுடன் சல்மான் கான் கிசுகிசுக்கப்பட்டார். சல்மான் கான் இந்தியில் நடித்த சில படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
சிக்கந்தர்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் சிக்கந்தர் படத்தில் சல்மான் கான் நடிக்கிறார். அது போல் அவருடன் சத்யராஜ், கிஷோர் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
டிரெய்லர் வெளியீட்டு விழா
இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. அப்போது சல்மான்கானிடம், உங்களுக்கு ராஷ்மிகாவுக்கும் இடையே வயது வித்தியாசம் பெரிதாக பேசப்படுகிறதே என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சல்மான், ராஷ்மிகாவுக்கும் எனக்கும் 31 வயது வித்தியாசம் இருக்கிறது என்கிறார்கள்.
வயது வித்தியாசம்
இந்த வயது வித்தியாசத்தில் ஹீரோயினுக்கோ அல்லது அவருடைய அப்பாவுக்கோ எந்த பிரச்சினையும் இல்லை. அப்படியிருக்கும் போது உங்களுக்கு என்ன பிரச்சினை வந்தது. ராஷ்மிகாவுக்கு திருமணமாகதி அவருக்கு மகள் பிறந்தால் , ராஷ்மிகாவின் சம்மதத்தை பெற்று அவரது மகளுடனும் நடிப்பேன் என தெரிவித்தார். அவருடைய இந்த பதில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்
பொதுவாக சல்மான் கான் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். கடந்த 2002 ஆம் ஆண்டு மும்பையில் காரில் சென்ற போது சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது இவருடைய கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் இருந்து 2015 இல் சல்மான் விடுவிக்கப்பட்டார்.
ஐஸ்வர்யா ராயுடன்
ஐஸ்வர்யா ராயுடன் பழகியதாக விவேக் ஓபராயை 2003 ஆம் ஆண்டு ஒரு பிரஸ்மீட்டில் உடைத்து பேசி மிரட்டினார் சல்மான். 2008ஆம் ஆண்டு கத்ரீனா கைஃப் பிறந்த நாள் விழாவில் ஷாரூக்கானுடன் மோதலை கடைப்பிடித்தார். சல்மான் கானுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கொலை மிரட்டல்கள் வண்ணம் உள்ளன.
மான் வேட்டை
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அரிய வகை மானான கலைமானை வேட்டையாடியதாக சல்மான் கான் மீது 1998ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கலைமான் என்பது பாதுகாக்கப்பட்ட ஒரு மான் இனமாகும். இவருடன் சயிப் அலி, சோனாலி பிந்த்ரே, தபு, நீலம் உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபட்டன.
சினிமா பொழுதுபோக்கு அம்சம்
தமிழ் திரையுலகில் கூட அங்கிள் என அழைத்த குழந்தை நட்சத்திரங்கள், பின்னாளில் அவர்களுக்கே ஜோடியாகிவிட்டனர் என்ற பேச்சுகள் உண்டு. என்ன இருந்தாலும் சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சம். இதை அப்படி மட்டுமே பாருங்கள் என்பதுதான் திரைத்துறையினரின் கருத்தாக உள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications