ஷகிலாவை தொடர்ந்து பிரபல நடிகைக்கு பதிலடி கொடுத்த சம்யுக்தா.. பப்ளிசிட்டிக்காகவா இப்படி?
சென்னை: சின்னத்திரை நடிகையான சம்யுக்தா தன்னுடைய குடும்பப் பிரச்சனையில் தலையிட்ட சீரியல் நடிகை ரிஹானா பற்றி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவருக்கும் உள்ள பிரச்சனையில் விஷ்ணுகாந்த்க்கு ஆதரவாக ரிஹானா சில நாட்களுக்கு முன்பு போஸ்ட் வெளியிட்டு இருந்தார்.
அதைப் பற்றி சம்யுக்தாவிடம் விசாரித்த ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த சம்யுக்தா அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார்.

ஒரு சில நாட்களாக சின்னத்திரை நடிகர்களின் குடும்ப பிரச்சனை சமூக வலைதளத்தில் வரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு சீரியல் நடிகர்களான திவ்யா மற்றும் அர்ணவ் பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதைத் தொடர்ந்து இப்போது விஜய் டிவி முத்தழகு சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் அவருடைய கணவர் விஷ்ணுகாந்த் குடும்ப பிரச்சனையும் இப்போது பேசும் பொருளாக இருக்கிறது.
நான்கு சுவற்றுக்குள் நடப்பது எல்லாம் பொதுவெளிக்கு வந்தால் என்ன மாதிரி எல்லாம் பின் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக தான் இப்போ காதலித்து திருமணம் செய்த சீரியல் நடிகர்கள் தங்களுடைய குடும்ப பிரச்சனைகளை பொதுவெளியில் கொண்டு வந்து பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறார்கள்.
அந்த வகையில் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்தது தான். இருவரும் தங்களுடைய அந்தரங்க விஷயங்கள் மட்டுமல்லாமல் முடிந்து போன காதல் கதைகளை எல்லாம் போட்டு ஆதாரங்களை சமூக வலைத்தளத்தில் காட்டி பலருக்கும் வியப்பை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவகையில் இது பலருக்கும் பாடமாக தான் இருக்கிறது.
கணவன் மனைவி இருவருக்கும் கருத்து ஒத்துப்போகாமல் பிரச்சனை ஏற்பட்டால் அதை தங்களுடைய வீட்டுக்குள்ளேயே பேசி முடித்துக் கொண்டால் அவர்கள் மட்டுமல்ல அவர்களுடைய குடும்பத்துக்கும் நல்லது. ஆனால் தன் மீது தப்பில்லை என்பதை பொதுவெளியில் நிரூபிக்க வேண்டும் என்று இருவரும் மாறி மாறி தங்களுடைய தனிப்பட்ட ரகசியங்களை பேசும்போது பலர் மூக்கை நுழைத்து சின்ன பிரச்சனையையும் பெரிது பண்ணி விடுகிறார்கள்.
அந்த மாதிரி தான் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் குடும்ப பிரச்சனையில் கருத்து தெரிவித்து சிக்கலில் மாட்டியிருக்கிறார் ரிஹானா. சீரியல் நடிகை ரிஹானா ஏற்கனவே திவ்யா மற்றும் அர்ணவ் குடும்பப் பிரச்சனையிலும் திவ்யாவிற்க்கு ஆதரவாக அர்ணவ் பற்றி பல ஆடியோக்களை தைரியமாக வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அதேபோல விஷ்ணுகாந்த்க்கு ஆதரவாக, அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப அமைதியாக இருப்பார். ஆனால் சம்யுக்தா ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட ரவியோடு பேசிக் கொண்டிருப்பார் என்றெல்லாம் பதிவு வெளியிட்டிருந்தார். அது போதாது என்று மேலும் பிரபல செய்தி சேனல் ஒன்றிலும் பேட்டியளிக்கையில் சம்யுக்தா பற்றி, கணவன் மனைவிக்குள் இருக்கும் அந்தரங்க விஷயங்களை எல்லாம் அம்மா அப்பா முன்னாடி வெட்ட வெளியில் பேசுவது சரியா என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் சிப்பிக்குள் முத்து சீரியல் நடிகை ரிஹானா பேசியதை நீங்க பாத்தீங்களா? என சம்யுக்தாவிடம் ஒரு ரசிகர் கேட்க அதற்கு சம்யுக்தா ஆமா நானும் அதை பார்த்தேன். சிப்பிக்குள் முத்து சீரியலில் நிறைய பேரு நடிச்சாங்க. ஆனா அவங்க எல்லோருக்கும் தெரியும் யார் எப்படின்னு. அவங்க யாருமே ரிஹானா மாதிரி பப்ளிசிட்டிக்காக சீப்பா இண்டர்வியூ கொடுத்துவிட்டு இருக்க மாட்டாங்க.

ரிஹானா என்னமோ விஷ்ணுகாந்த் கூட வாழ்ந்த மாதிரிலா அவருக்கு சப்போர்ட் பண்றாங்க. எனக்கு இது என்னன்னு புரியல. என்ன பத்தி பேசுறாங்களே ஆனா அவங்களோட பாஸ்ட தோண்ட ஆரம்பிச்சா பொழப்பு சிரிப்பா சிரிச்சிடும். ஆனா இவங்க ஒரு கதையை பேசுறதுக்கு வந்துட்டாங்க.
ரிஹானா என் பிரச்சனையில் மட்டுமல்ல எந்த பிரச்சனை வந்தாலும் முதல்ல இன்டர்வியூ கொடுத்துடுவாங்க. ஏன்னா அந்த டாபிக்கோட சேர்ந்து அவங்களும் ஃபேமஸ் ஆகிடலாம்ல்லா..! அதுக்காகத்தான் இப்படி எல்லாம் ஒரு விளம்பரம் செஞ்சுகிட்டு இருக்காங்க. சரி இப்படியாவது பொழச்சிட்டு போகட்டும் என்று நக்கலாக சம்யுக்தா பதில் கொடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரிலும் பகிர்ந்து இருக்கிறார்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications