போய்ட்டு வந்ததும்.. சம்யுக்தாவுக்கு அடிச்ச பம்பர்.. செம குஷி மேட்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி பலரது வாழ்க்கையை மாற்றி அமைத்தாலும் சிலரது வாழ்க்கையை டோட்டலாக குளோஸ் பண்ணியும் விடுகிறது.

ஆனாலும் யாருக்கு எப்படி அமைந்ததோ இல்லையோ சம்யுக்தாவுக்கு நல்லதையே செஞ்சுருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்வதற்கு முன்பு யாரென்றே தெரியாமல் இருந்த இவருக்கு தற்போது பெரிய பம்பர் பரிசு விழுந்திருக்கிறது.

சம்யுக்தா விளம்பர மாடலாக நடித்துக் கொண்டிருந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பான ராதிகாவின் சீரியலில் முதன்முதலில் அறிமுகம் ஆகியிருந்தார். ஆனாலும் இந்த சீரியல் சீக்கிரத்திலேயே முடிவடைந்ததால் அதற்குப் பிறகு அடுத்த கட்டமாக மீண்டும் மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்தார்.

 பிக் பாஸ் சம்யுக்தா

பிக் பாஸ் சம்யுக்தா

அந்த நிலையில் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது .பலருக்கு பிக்பாஸ் ஒரு நல்ல பிளாட்பாரமாக அமைந்திருக்கிறது .தற்போது இவருக்கும் இது ஒரு நல்ல ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர் 50-ஆவது நாளில் வெளியே எறிய வழங்கினாலும் வெளியே வந்த பிறகு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் கூட எதிர்பார்க்கவில்ல� �.

 விஜய் சேதுபதி படத்தில்

விஜய் சேதுபதி படத்தில்

தற்போது இவர் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து துக்ளக் தர்பார் என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தெரிவித்திருக்கிறார். இது அவருடைய ரசிகர்களுக்கு சந்தோஷமான ஒரு நிகழ்ச்சியாக தான் இருக்கிறது. இதை பார்த்து பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

 அப்பாயின்ட்மென்ட்

அப்பாயின்ட்மென்ட்

வடிவேலு ஒரு படத்தில் நான் அடித்த மணி கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ அரசுக்கு கேட்டிருக்கு. அடிச்சான் பாரு எனக்கு ஒரு அப்பாயின்மென்ட் ஆர்டர் என்று சொல்வது போல தற்போது இவரது பட வாய்ப்பை பற்றியும் மீன்ஸ்களாக போட்டு கலாய்த்து வருகிறார்கள்.

 அழகுத் தமிழும்

அழகுத் தமிழும்

சம்யுக்தா பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது இவர் அணியும் ஆடைகளில் அழகைப்பார்த்து அதுமட்டுமல்லாமல் தமிழ் உச்சரிக்கும் அழகைப்பார்த்து இவருக்கு பல ரசிகர்கள் கூடியிருந்தனர். அது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் இவர் நன்றாகவே தனது திறமைகளை நிரூபித்து விளையாடிக் கொண்டிருந்தார் .ஆனால் இவரால் 50 நாட்கள் வரை இந்த வீட்டிற்குள் தாக்குப் பிடிக்க முடிந்தது.

பாப்புலர்

பாப்புலர்


வெளியே வந்த பிறகும் இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதுவரைக்கும் யார் இவர் என்றே தெரியாமல் இருந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட பிறகு சம்யுக்தா என்று சொன்னதும் பலருக்கும் தெரியும் அளவிற்கு பாப்புலராகி விட்டார் .இந்த நிலையில் மேலும் ஒரு படி மேலே சென்று இந்த படத்திற்கு வாய்ப்பு கிடைத்தது.

 ரசிகர்கள் ஹேப்பிதான்

ரசிகர்கள் ஹேப்பிதான்

இவருக்கு மட்டுமல்லாமல் இவருடைய ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்திதான். இந்த திரைப்படத்தில் முதலில் கதாநாயகியாக அதிதி ராவ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பின்பு அவர் அந்த திரைப்படத்தில் இருந்து விலகியதும் ராசி கண்ணா கதாநாயகியாக ஒப்பந்தமாகி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இவரும் இந்த திரைப்படத்தில் இணைந்து இருக்கிறார்.

 செம சான்ஸ்

செம சான்ஸ்

பிக் பாஸ் வீட்டிற்குள் கடைசி வரைக்கும் இருக்க முடியாமல் பாதியிலேயே வெளியே வந்தாலும் அவர்களுக்கு திறமை இருந்தால் உடனே மேலே வந்து விடுகிறார்கள். திரைப்படம் முடிந்து படத்தை பார்க்கும் போதுதான் தெரியும் இவரது திறமைக்கு கிடைத்த அங்கீகாரமா அல்லது ஒப்புக்கு சப்பாக துணை கதாநாயகியாக என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+