ஒன் சைட் காதலனிடம் செல்போன் வாங்கிய சம்யுக்தா..ரகசியத்தை உடைத்த விஷ்ணுகாந்த்..வெளிவந்த உண்மை
சென்னை: சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் அவருடைய மனைவி சம்யுக்தா பற்றிய இரண்டாவது ஆடியோ ஒன்றை ரிலீஸ் செய்திருக்கிறார்.
அதில் சம்யுக்தாவை ஒன்சைடாக காதலித்த நபரிடமிருந்து சம்யுக்தா செல்போன் வாங்கி இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் அந்த ஆடியோ குறித்தும் செல்போன் வாங்கியது குறித்தும் சம்யுக்தா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த சிற்பிக்குள் முத்து சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவருக்கும் சில மாதங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவர் மீது ஒருவர் குற்றசாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் சம்யுக்தா தன்னை காதலித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு நபரோடு பேசி இருக்கிறார் என்றும் அதற்கு முன்பு சம்யுக்தாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனக்கு ஆடியோ அனுப்பி இருக்கிறார்கள் என்று அந்த ஆதாரத்தை விஷ்ணுகாந்த் வெளியிட்டு இருக்கிறார். அந்த வகையில் முதலில் வெளியிட்ட ஆடியோவில் சம்யுக்தா மற்றும் அவர் அண்ணன் என்று ஒரு நபரிடம் தன்னுடைய முன்னாள் காதல் பற்றி பேசி இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து அதே அண்ணனிடம் சமித்தாவின் அம்மாவும் சம்யுக்தா பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். தற்போது அதையும் விஷ்ணுகாந்த் வெளியிட்டு இருக்கிறார். அந்த வகையில் சம்யுக்தா அண்ணன் என்று கூறப்பட்ட நபர் சம்யுக்தாவின் அம்மாவிடம் சம்யுக்தா இதற்கு விஷ்ணுகாந்த்க்கு முன்பு யாரையாவது காதலித்திருக்கிறாரா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஏற்கனவே சம்யுக்தாவோடு நிறைமாத நிலவே என்ற சீரிஸில் நடித்த ரவியோடு காதல் பிரச்சனை இருந்தது.
அதுமட்டுமல்லாமல் அதற்கு முன்பாக சம்யுக்தா காலேஜ் படித்துக் கொண்டிருக்கும்போது அவளுடைய சீனியர் ஒரு பையன் சம்யுக்தாவை ஒருதலையாக காதலித்தான். அவன் ரொம்பவே நல்ல பையன் தான். ஆனால் முதலில் சம்யுக்தாவோடு பிரண்டாக தான் பழகிக் கொண்டிருந்தான். பிறகு காதலிக்கிறேன் என்று சொன்னான். அப்போது ஒரு போன் வாங்கிக் கொடுத்திருந்தான்.
முதலில் போன் வேண்டாம் என்று சொன்ன சம்யுக்தா பிறகு அவன் வற்புறுத்தியதினால் வாங்கிக் கொண்டாள். அதற்குப் பிறகு அவளுடைய காதலை அவன் சொன்னதால் வீட்டில் வந்து பேசும்படி சொல்லி இருக்கிறார். எங்க அம்மா அப்பாட்ட பேசுங்க என்று சம்யுக்தா சொல்லி இருக்கிறார். அதற்குப் பிறகு சம்யுக்தா நடிக்க வந்த பிறகு அந்த பையனோடு பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டார்.

பிறகு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் ரவியோடு காதலித்துக் கொண்டிருந்தார். அதனால் அந்த பையன் ரவியின் பிறந்த நாளில் ரவியிடம் சம்யுக்தாவை நான் காதலித்தேன். நான் வாங்கிக் கொடுத்த போனை அவள் வைத்திருக்கிறாள். அந்த போனை எனக்கு வாங்கிக் கொடுங்க என்று கேட்டிருக்கிறார். அந்த போனை சம்யுக்தா கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டாள்.
அதற்கு நாங்கள் அப்போதே 25000 பணம் கொடுத்து விட்டோம். மீதம் பணத்தையும் கொடுத்து விடுகிறோம் என்று கூறி இருக்கிறோம். அதற்குப் பிறகு அவன் பிரச்சனை இல்லை என்று அந்த ஆடியோவில் பேசியிருக்கிறார்.. இதுகுறித்து விஷ்ணுகாந்த் ரசிகர்கள் சிலர் ஒரு பையன் ஒன்சைடாக காதலிக்கும் போது அவனிடம் எதற்காக போனை வாங்க வேண்டும் என்று சம்யுக்தாவிடம் கேள்வி கேட்க அதற்கு சம்யுக்தா பதில் கொடுத்திருக்கிறார்.
முதலில் அவன் என்னுடைய நல்ல நண்பன். யாரா இருந்தாலும் முதல்ல வேண்டாம் என்று தான் சொல்லுவாங்க. நானும் அப்படித்தான் சொன்னேன். ஆனால் கம்ப்பல் பண்ணி எனக்கு கொடுத்தான். சோ நான் வாங்கிட்டேன். அடுத்து அதுக்கு அப்புறம் அவன் மொபைல திருப்பி கேட்டான். அப்பவே அவனுக்கு 25 ஆயிரம் அனுப்பியாச்சு.
பேலன்ஸ் 20,000 கொஞ்சம் கொஞ்சமா கொடுக்கிறேன் என்று சொல்லியாச்சு. இப்போ டோட்டலா பணம் கொடுத்தாச்சு. உங்களுக்கு என்ன பிராப்ளம் அதுல? அடுத்தவங்க பிரச்சனைக்கு பஞ்சாயத்து பேச வந்துட்டீங்க. போய் உங்க வேலைய பாருங்க என்று பதில் கொடுத்து அதை தன்னுடைய instagram ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications