நச்சரிச்ச மொட்டை சுரேஷ்.. சனம் மட்டும் வாயைத் திறந்தா போச்சு..!
சென்னை: பிக்பாஸ் நாலு தொடங்கியதிலிருந்து வீட்டுக்குள் வாலுத்தனம் ஜாஸ்தியாவே போய்ட்டிருக்கு.
அடிக்கடி சண்டை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சியில் தற்போது தான் கேம் ஷோக்களில் களை கட்ட ஆரம்பித்து இருக்கிறது. இதுவரைக்கும் சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள் இன்று அவர்கள் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டி தீர்த்து இருக்கிறார்கள்.
விடுவார்களா நம்ம ரசிகர்கள். இதற்குத்தானே காத்திருந்தார்கள். இதைப் பற்றி ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.

அரச குடும்பம்
நேற்றைய எபிசோடில் அரக்கர் குடும்பத்திற்கும் மன்னர் குடும்பத்திற்கும் போட்டி என்று வைத்திருந்தார்கள். அதில் அரக்கன் குடும்பத்தின் தலைவராக சுரேஷ் சக்கரவர்த்தி இருந்தார். அரச குடும்பத்தின் மன்னராக வேல்முருகன், அவருடைய மனைவியாக நிஷாவும் இருந்தனர். அரச குடும்பத்தில் ரியோ, பாலாஜி சோமசேகர் ,ரம்யா, சனம் ஷெட்டி மற்றும் சம்யுக்தா இடம்பெற்றிருந்தனர்.

அரக்கி அனிதா
அரக்கர் குடும்பத்தில் ஆஜித் ,ஷிவானி, கேப்ரில்லா ,ஜித்தன் ரமேஷ், அனிதா மற்றும் அர்ச்சனா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அரக்கர்கள் குடும்பம் தொந்தரவு செய்ய வரும் போது அரச குடும்பத்திலிருந்து ஒருவர் சென்று சிலையாக இருக்க வேண்டும் . குறிப்பிட்ட நேரம் வரை தாக்குப் பிடித்தால் அவர்கள் வெற்றி பெற்றதாக அர்த்தம். இல்லை எனில் அரக்கர்கள் குடும்பத்தில் அடிமையாக இருக்க வேண்டும்.

சிலையாக மாறிய போட்டியாளர்கள்
இந்த டாஸ்க் கொஞ்சம் விரு விருப்பாக தான் இருந்தது. ஏனென்றால் அரக்கர்கள் குடும்பத்தின் கொலைவெறி தாக்குதலை சிரிக்காமல் அரச குடும்பத்தினர் சிலையாக இருந்து வந்தனர். அதில் பாலாஜியும், சோமசுந்தரமும் தோற்றுப்போய் அரக்கர்கள் குடும்பத்தில் அடிமைகளாக போய்விட்டனர் . ஆனால் சனாம் மற்றும் சம்யுக்தா, ரியோ 3 பேரும் வெற்றி பெற்று மீண்டும் அரசர்கள் குடும்பத்தில் வந்துவிட்டனர்.

சனத்தை வைத்து கும்மியடித்த சுரேஷ்
அதில் சனம் வரும்போது சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் அர்ச்சனா எல்லோரும் சேர்ந்து சனத்தை ஒருவழி படுத்தி விட்டார்கள். இதுவரையிலும் மனதில் இருந்ததை அப்படியே திட்டி தீர்த்தும் விட்டனர். எப்பவும் சண்டக்கோழி ஆக சீறிக் கொண்டிருக்கும் சனம் இதில் தலைவிரிகோலமாக குனிந்த தலை நிமிராமல் கீழே பார்த்தபடி அமைதியாக இருந்தார். இதில் முதல்முறையாக இவரை இப்படி பார்ப்பதால் ரசிகர்களும் விழுந்து விழுந்து சிரித்து இருக்கிறார்கள்.

அசைக்க முடியலையே
எவ்வளவோ இவரை கோபப்படுத்தி பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கோபத்தை எல்லாம் அப்படியே கண்ட்ரோல் பண்ணி இருந்து விட்டார். அவர் கோபத்தை கண்ட்ரோல் பன்னி அப்படியே இருந்ததை பார்த்து ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள். சக்கரவர்த்தி கிண்டல் பண்ணும் போது இன்னும் எவ்வளவு வேணாலும் பேசு நான் கேம் முடிந்ததும் உங்க கூட சண்டைக்கு வருகிறேன் என்று மீம்ஸ் போட்டிருக்கிறார்கள்.

சனம் திறந்தா போச்சு
சுரேஷ் சக்கரவர்த்தி சனத்தை பார்த்து எப்பவும் எந்தப் பிரச்சினைகளும் மூக்கை நுழைத்துக் கொண்டு வருவாயே இப்பொழுது பேசு பார்ப்போம் .இப்போது போது வாயை திறந்து பேசு என்றெல்லாம் இவரை கலாய்த்துக் கொண்டிருந்தார். அதற்கு யோ சும்மா இருய்யா மொட்ட அவ வாய திறந்தா கலகலப்பு 2 படத்தில் அஞ்சலி கத்தும் போது அனைவரும் பறப்பதுபோல பறந்து விடுவீர்கள் என்று மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications