Sangavi : விஜய், அஜித் பட நடிகை சங்கவியை நினைவிருக்கா? இப்போ சீரியலில் அறிமுகமாகிறார்!
சென்னை: 90-கள்ல தமிழ் சினிமா ரசிகர்களைக் கேட்டா, உடனே நினைவுக்கு வர்ற முகங்களில் சங்கவி பெயர் கண்டிப்பா இருக்கும். அமராவதி படத்துல அஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான அந்த சங்கவி, அப்புறம் ஒரு சில வருஷங்களிலேயே முன்னணி நடிகைகளின் லிஸ்ட்ல தன்னோட இடத்தை பிடித்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டு விலகி இருந்த சன் டிவி இப்போது மீண்டும் சின்னத்துறையில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
விஜய், சரத்குமார், பிரபு மாதிரி ஹீரோக்களோட தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்தது எல்லாம் இப்பவும் ரசிகர்கள் மறக்கல. ரசிகன், நாட்டாமை, கோயம்புத்தூர் மாப்பிள்ளை மாதிரி படங்கள் வந்த காலத்துல, 'இந்த பொண்ணு இருந்தா படம் ஹிட்'ன்னு ஒரு நம்பிக்கை இருந்தது. தமிழ் மட்டுமில்லாம தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல பிஸியான நடிகையா வலம் வந்தார் சங்கவி.

ஆனா, 2016க்குப் பிறகு திடீர்னு அவர் திரையுலகத்துல காணாம போயிட்டார். அப்போ தான் தெரிய வந்தது-வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு, குடும்ப வாழ்க்கையில முழுக்க கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டார்னு. ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாகி, 'இப்போ என் உலகமே என் குடும்பம் தான்'ன்னு அமைதியா இருந்தார்.
இந்த இடைவெளியில பல ரசிகர்கள் மனசுக்குள்ள ஒரு கேள்வி இருந்துகிட்டே இருந்தத'சங்கவி மீண்டும் நடிக்க வருவாரா?'ன்னு. அந்த கேள்விக்கான பதில் தான் இப்போ கிடைச்சிருக்குது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சங்கவி மீண்டும் கேமரா முன் வர முடிவு எடுத்திருக்கார். அதுவும் பெரிய திரை இல்ல... நேரா சின்னத்திரை. ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள பாளையத்து அம்மன் என்ற பக்தித் தொடரில், அவர் நாயகியாக நடித்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குகிறார்.
இந்த தொடர் முழுக்க பக்தி, குடும்ப உணர்வு, நம்பிக்கை இவையெல்லாம் கலந்த கதையா உருவாக்கப்பட்டிருக்குது. அதுல சங்கவி, பாளையத்து அம்மன் என்ற முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே சில நிகழ்ச்சிகளில் நடுவராக வந்திருந்தாலும், ஒரு முழு நீள சீரியலில் நாயகியாக அவர் களமிறங்குவது இதுவே முதல் முறை என்பதால், சின்னத்திரை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்குது.

'திருமணத்துக்கு பிறகு பல நடிகைகள் சின்னத்திரை பக்கம் வர்றாங்க... ஆனா சங்கவி வருவார்'ன்னு யாரும் எதிர்பார்க்கல. அதனால தான், இந்த ரீ-என்ட்ரி ரசிகர்களுக்கு கொஞ்சம் ஸ்பெஷலா உணரப்படுகிறது. குறிப்பாக 90-களில் சங்கவியின் படங்களை பார்த்து வளர்ந்த ரசிகர்கள், "நம்ம காலத்து ஹீரோயின் மீண்டும் நடிக்க வர்றாங்க"ன்னு மகிழ்ச்சியோட பேச ஆரம்பிச்சுட்டாங்க.
மொத்தத்துல, ஒரு காலகட்டத்துல தமிழ் சினிமாவை ஆட்சி செய்த சங்கவி, இப்போ சின்னத்திரை மூலம் ரசிகர்களை மீண்டும் சந்திக்க தயாராகியிருக்கார். இந்த பாளையத்து அம்மன் தொடர், அவருக்கான இரண்டாவது இன்னிங்ஸ்ல எப்படியொரு திருப்பத்தை கொடுக்கப்போறதுன்னு பார்க்க ரசிகர்கள் ஆவலோட காத்திருக்காங்க.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications