எனக்கு தமிழ் பிடிக்காது, தெலுங்கு தான் பிடிக்கும்.. அந்த மாதிரி பேசுவாங்க.. சங்கீதா கிருஷ் ஓபன்
சென்னை: நடிகையாகவும் தொகுப்பாளராகவும் பலருக்கும் பரீட்சையமான சங்கீதா க்ரிஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு தமிழ் சினிமா பிடிக்காது, தெலுங்கு தான் பிடிக்கும். இதை கேட்டு தமிழ் ரசிகர்கள் என்னை திட்டினாலும் எனக்கு பரவாயில்லை. அதற்கு காரணம் இதுதான் என்று சில விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
நடிகை சங்கீதா கிரிஷ் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் தொகுப்பாளராகவும், ரியாலிட்டி நிகழ்ச்சி நடுவராகவும் இருந்து வருகிறார். அதிலும் அவர் நடித்த பிதாமகன், உயிர்,தனம் போன்ற பல திரைப்படங்கள் இவருடைய நடிப்புக்கு தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்திருந்தது. ஆனால் சமீபத்தில் அவர் தமிழில் அதிகமான திரைப்படங்களில் நடிக்கவில்லை.

சில வருடங்களுக்கு முன்பு வெளியான நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் ஸ்ரீகாந்த்தின் மனைவியாக நடித்திருந்தார். அதோடு பின்னணி பாடகரான கிருஷை 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் அவர் நான் தமிழ், கனடா, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்திருக்கிறேன்.
ஆனால் எனக்கு தமிழை விட தெலுங்கில் நடிப்பதுதான் பிடிக்கும். அதற்கு காரணம் எனக்கு ரெஸ்பெக்ட் எங்கு கிடைக்கிறதோ அதுதான்.. நான் தமிழை பிடிக்காது என்று பேசுவதை கேட்டு தமிழ் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டாலும் எனக்கு பரவாயில்லை. ஆனால் உண்மையை நான் சொல்லி தான் ஆக வேண்டும். தமிழில் நடிக்கும் போது அங்கு சரியாக ரெஸ்பெக்ட் கிடையாது. உண்மையை சொல்லனும்னா நான் தமிழில் யாரிடமும் வாய்ப்பு கேட்பது கிடையாது.
ஏன்னா எனக்கு தெலுங்கில் பெட்டர் ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது, சம்பளம் கிடைக்கிறது. அங்கு நிறைய வாய்ப்புகளும் கிடைக்கிறது. ஆனால் தமிழில் இருந்து சிலர் எனக்கு வாய்ப்பு கேட்டு போன் பண்றாங்கன்னு வச்சுக்கோங்க அவங்க ஒரு மரியாதையே இல்லாம பேசுவாங்க. இரண்டாவது ஒரு விஷயம் சொல்லணும்னா ஏதோ அவங்களே எனக்கு வாழ்க்கை தர மாதிரி பேசுவாங்க. நான் என்னமோ இங்க ரொம்ப கஷ்டப்பட்டு கரண்ட் பில் கூட கட்டுவதற்கு வழி இல்லாமல் இருக்கிறேன் என்கிற மாதிரியே பீல் பண்ணி பேசுவாங்க.
உங்களுக்கு இவ்வளவு தான் சம்பளம் ஃபிக்ஸ் பண்ணியிருக்கோம்... நீங்க வந்து நடித்துக் கொடுத்துட்டு போங்க என்று சொல்லுவாங்க. அதற்கு நான்தான் இவங்க கிட்ட கால் பண்ணி கேட்கவே இல்லையே அவங்க தானே எனக்கு போன் பண்ணி கேக்குறாங்க.. அப்போ நான் தானே இவங்க கிட்ட என்னோட ஒர்த் பற்றி பேசணும் என்று சொன்னால் அவங்க இல்லம்மா சரியா இருக்கும் என்று பேசுவாங்க. எனக்கு இந்த மாதிரி பேசுறதெல்லாம் பிடிக்காது.
எனக்கு ரெஸ்பெக்ட் அவங்க கொடுக்கணும்.... ஆனா அவங்க கொடுக்கிறது இல்ல அதனால தான் நான் தமிழில் அதிகமாக நடிக்கிறது கிடையாது என்று பேசி இருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. இதற்கு அதிகமான ரசிகர்கள் நீங்கள் செய்யும் தொழிலை மட்டும் குறை சொல்ல வேண்டும் உங்களை யார் தமிழில் அப்படி மரியாதை குறைவாக அழைத்தார்களோ அவர்களை மட்டும் குறை சொல்லுங்க.
ஒட்டுமொத்தமாக எனக்கு தமிழை பிடிக்காது என்று குறை சொல்லாதீர்கள் என்று ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் சங்கீதா பேசியது சரி என்றும் செய்யும் வேலைக்கு அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சங்கீதாவின் பேச்சு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க உங்க கருத்தை கமெண்டில் தெரிவியுங்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications