சங்கீதா விஜய் முன்னாடி டக்னு சொல்லிட்டாரு.. அதுவிடுங்க, பெட்ரூமை ஏன் எட்டிப்பார்க்கறீங்க? நறுக் கமல்
Aagayam Cinemas என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, வேறு ஒரு நடிகையுடன் நடிகரை சம்பந்தப்படுத்தி பேசுவது, இன்னொரு நடிகையை நடிகர் 2வது திருமணம் செய்து கொள்ள போவதாக சொல்வது, என வதந்திகள் பரவுவது இயல்பாகும்.
அந்தக்கால தியாகராஜர் பாகவதர் காலத்திலிருந்தே இதுபோன்ற வதந்திகள் உண்டு.. அன்று சின்ன சின்ன பத்திரிகைகளில் வெளியான வதந்திகள், இன்று சோஷியல் மீடியாவில் பெரிதாக வருகிறது.. ஒரு குடும்பத்துக்குள் நுழைந்து எட்டிப்பார்த்து இல்லாததையும் பொல்லாததையும் சொல்லக்கூடாது. அதை அவர்களாகவே சொல்லணும்..

தனுஷ் - ஐஸ்வர்யா
தனுஷ்-ஐஸ்வர்யாவுக்குள் மனஸ்தாபம் வந்தபோது, அதனை அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருந்தனர். அப்போதுகூட அந்த விஷயத்திற்குள் நுழைந்து பேசுவது நாகரீகமாகாது.. 20 வருடங்களுக்கு முன்பு, நடிகையுடன் கமலுக்கு நெருக்கம் இருப்பதாக, பிரபல பத்திரிகையில் கிசுகிசு எழுதியிருந்தார்கள்..
உடனே கமல், என் வீட்டு பெட்ரூம் ஜன்னலை ஏன் எட்டிப்பார்க்கறீங்க? உங்களுக்கே அசிங்கமாக இல்லையா? என்று ஓபனாகவே கேட்டிருந்தார்.
அதுபோல சங்கீதா விஜய்யுடன் சேர்ந்திருக்கிறாரா? இல்லையா? என்பதையெல்லாம் கண்ணு, காது, மூக்கு வைத்து யூகத்தின் அடிப்படையில் சொல்லக்கூடாது.. இது ஒரு குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயம், ஒரு மாஸ் ஹீரோ சம்பந்தப்பட்ட விஷயம்.
விஜய் சூர்யா பிள்ளைகள்
நடிகர் சூர்யா தன்னுடைய குழந்தைகளை வெளியே காட்டக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பது தவறில்லை.. சூர்யா என்றில்லை, விஜய்யும் அன்று அப்படித்தான் இருந்தார்.. இன்றுதான் விஜய்யின் மகன், மகள் யாரென்று வெளியே தெரிகிறார்கள்.. அன்று அப்படியில்லை..
20 வருடங்களுக்கு முன்பு யூத் பட ஷூட்டிங் ஏவிஎம்மில் நடந்து கொண்டிருந்தது. அப்போது மகனை ஷூட்டிங் அழைத்து வந்திருந்தார் சங்கீதா.. அங்கிருந்தவர்களை பெயர் சொல்லி விஜய் மகன் அழைக்கவும், உடனே சங்கீதா அதை திருத்தினார்.. பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்கக்கூடாது, அங்கிள் என்று சொல்லணும் என்று சொல்லி தந்தார்..
செலிபிரிட்டிகள்
அப்போது ஒருவர் தன்னுடைய சின்ன கேமராவில் விஜய் மகனை போட்டோ எடுக்க முயன்றபோது, சங்கீதா வேண்டாம் ப்ளீஸ் என்று தடுத்துவிட்டார்..
செலிபிரிட்டிகள் இதையெல்லாம் விரும்ப மாட்டார்கள்.. தங்கள் குழந்தைகள் வளரும் காலகட்டம் வரை, அவர்களை மீடியா முன்பு காட்ட பிரியப்பட மாட்டார்கள்.. விஜய், சூர்யா என்றில்லை, பாலிவுட்டிலும் பல பிரபலங்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். இதெல்லாம் அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்தது.
நேருக்கு நேர் அஜீத்
நடிகர் சிவகுமார் தன்னுடைய மகனை ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க விடவில்லை.. நேருக்கு நேர் படத்தில் அஜித், விஜய் ,இருவரும் நடிப்பதாக இருந்தது.. ஆனால், விஜய்யைவிட தன்னுடைய கேரக்டர் சற்று குறைவாக இருப்பதாக அஜித் உணர்ந்தார்..
எனவே, படத்தில் இருவருக்குமே ஒரே மாதிரியான முக்கியத்துவம் வரும்படி மாற்றினால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர் வசந்திடம் சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டு வசந்த் டென்ஷனாகவும், அஜித் அந்த படத்திலிருந்து விலகினார்.. பிறகு புதுமுகத்தை வைத்து படம் எடுப்பதென முடிவானது..
அப்போதுதான் மணிபாரதி என்ற இயக்குனர், சிவகுமாரின் மூத்த மகன் சரவணன், அழகாக இருக்கிறார், அவரை நடிக்க வைக்க கேட்டு பார்க்கலாம் என்றார். உடனே எல்லாரும் சேர்ந்து சிவகுமார் வீட்டுக்கு சென்று அனுமதி கேட்டதற்கு, சிவகுமார் ஒப்புக் கொள்ளவில்லை..
நடிப்பெல்லாம் மிகப்பெரிய விஷயம், சரவணன் அம்பத்தூரில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறான், நடிப்பெல்லாம் செட் ஆகாது, எல்லாரும் கிளம்பி போங்க என்றாராம்.. பிறகுதான் வசந்த் தந்த நம்பிக்கை காரணமாக சிவக்குமார், சரவணனை நடிக்க அனுமதித்தார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications