லோகேஷ் கனகராஜ் மீது எனக்கு கோபம் இருக்கு! லியோ படத்துல இப்படி செஞ்சிருக்க கூடாது! நடிகர் சஞ்சய் தத் ஆதங்கம்
சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது கடும் கோபத்தில் இருப்பதாக நடிகர் சஞ்சய் தத் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. லியோ திரைப்படத்தில் தன்னை சரியாக பயன்படுத்தவில்லை என்று சஞ்சய் தத் ஆதங்கம் தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் விஜய் மற்றும் திரிஷா உட்பட பலர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் அந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்த சஞ்சய் தத் நேற்று ஒரு திரைப்பட டீஸர் வெளியீட்டு விழாவில் லியோ திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து பேசி இருக்கிறார்.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் லோகேஷ் கனகராஜ் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறினார். அதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், சஞ்சய் தத்,ஆக்சன் கிங் அர்ஜுன், மடோனா சபாஷ் உட்பட பலர் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக சஞ்சய் தத் நடித்திருந்தார் அப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்தது தனக்கு வருத்தம் அளித்ததாக கூறியிருக்கிறார்.
இது குறித்து சஞ்சய் தத் கேடி தி டெவில் படத்தின் டீசல் வெளியீட்டு விழாவில் பேசும்போது நான் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்தேன் அது எனக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது. ஆனால் லோகேஷ் கனகராஜ் மீது கடும் கோபம் ஏனென்றால் லியோ படத்தில் பெரிய ரோல் கொடுக்கவில்லை. அவர் என்னை சரியாக பயன்படுத்தாமல் வேஸ்ட் செய்துள்ளார். அஜித் சாரையும் ரொம்பவும் பிடிக்கும். நான் அவருக்கு ரொம்ப பிடிச்ச பிரண்டு.
நான் ரஜினி சார் படம் பார்த்திருக்கிறேன். இப்போது கூலி படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார். ரஜினிகாந்த் நடித்த கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அதோடு அந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர்கான், பூஜா கெட்டே உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் சஞ்சய் தத் யோகேஷ் கனகராஜ் பற்றி பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது சஞ்சய் தத் இப்போது இயக்குனர் பிரேம் இயக்கத்தில் கேவிஎன் புரொடக்ஷன் தயாரிப்பில் துருவ் ஜார்ஜா, ரீஷ்மா நாராயணா, ரமேஷ் அரவிந்த், ஷில்பா ஷெட்டி, சஞ்சய் தத் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் 31 கோடியில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு கேடி தி டெவில் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் வரும் 2026 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தான் சஞ்சய் தத் லோகேஷ் கனகராஜ் பற்றி பேசி இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications