சண்டை போட்டா, சண்டை போடுவேன்.. பிக்பாஸில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே முடிவு கட்டிய சஞ்சீவ்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் புது போட்டியாளராக களமிறங்கியிருக்கும் சஞ்சீவ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
Recommended Video
கேமரா முன்னாடி இதுவரைக்கும் பார்த்து ரசித்த ரசிகர்கள் இனி என்னுடைய உண்மையான கேரக்டர்களை பார்ப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.
இத்தனை வருடமாக என்னை ஏற்றுக் கொண்டவர்கள் என்னுடைய நிஜ கேரக்டரை எப்படியும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பிக்கையில் கூறியிருக்கிறார்.

எந்த சீசனிலும் இப்படி இல்லை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் பல மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. சீசன் ஆரம்பிக்கும் போதே அதிகபட்சமாக போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். 18 போட்டியாளர்கள் இதுவரைக்கும் எந்த சீசனிலும் கலந்து கொள்ளவில்லை. இதில் தான் கலந்து கொண்டனர். அதில் அதிகமான பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டதால் பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது என்டர்டைன்மெனட் கிடைத்திருக்கிறது.

மீண்டும் களமிறங்கும் புது போட்டியாளர்கள்
அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் அதிகமான புதுமுகங்கள் கலந்து கொண்டனர். இதனால் இவர்கள் யார் என்றே தெரியவில்லை என்று ரசிகர்கள் ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக கமெண்ட்களை போட்டுக் கொண்டிருந்தனர். தற்போது போட்டியாளர்கள் அனைவரும் ரசிகர்களின் மனதில் நன்றாக பதிந்து விட்டனர். 50 நாட்கள் கடந்த நிலையில் மீண்டும் புதுமுகமாக ஒரு சிலர் அறிமுகம் ஆகி வருகின்றனர். ஏற்கனவே இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகி அதில் ஏழு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது 3 போட்டியாளர்கள் மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர்.

மூன்றாவது வைல்ட் கார்ட் என்ட்ரி
முதல் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக அபிஷேக் வந்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில், அடுத்த வாரத்தில் டான்ஸ் மாஸ்டர் அமீர் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்திருக்கிறார். இவருடைய என்ட்ரிக்கு டான்ஸ் போட்டிகள் வைத்து சிறப்பாக வரவேற்பு கொடுத்திரந்த நிலையில் இவருடைய பெர்பாமன்ஸ் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் மூன்றாவது வைல்ட் கார்ட் என்ட்ரி இன்று இந்த நிகழ்ச்சியில் களமிறங்கியிருக்கிறார். சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் ரசிகர்கள் அனைவருக்கும் பரிச்சயமான சஞ்சீவ் தான் மூன்றாவது நபர்.
சண்டைக்கு சண்டைதானாம்
ஆரம்பத்திலிருந்தே சஞ்சீவ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று ரசிகர்கள் பலர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். தற்போது அது நடந்து விட்டது இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த வீடியோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் உள்ளே சென்ற பிறகு அங்கே இருப்பவர்கள் சண்டை போட்டால், நானும் போடுவேன். கொஞ்சினால், நானும் கொஞ்சுவேன் என்று கெத்தாக கூறியிருக்கிறார். இதனால் இவருடைய பர்பாமன்ஸ் எந்த மாதிரி இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications