காதலுடன் சமைச்சதை கண்ணா பின்னான்னு சாப்பிடறாங்களே...என்னாச்சு இவங்களுக்கு!
சென்னை: சன் டிவியின் சுமங்கலி சீரியலில் சந்தோஷ் முதலில் நித்யா மேல சபல புத்தில இருக்க.. அதை மாத்திக்க வேற வழி தெரியாம ஆசையை மாத்திக்க அவ மேல எரிஞ்சு விழுந்துகிட்டு இருந்தான்.
இப்போ எல்லாம் சரியாய் போச்சு.. நித்யா சந்தோஷ் மேல ரொம்ப மதிப்பு வச்சிருக்கா.. தனக்கு புருஷனா வர்றவன் சந்தோஷ் மாதிரி இருக்கணும்னு வெளிப்படையவே பேச ஆரம்பிக்கறா.

நித்யாவுக்கும் அவ அம்மாவுக்கும் அடைக்கலம் குடுத்து, தங்களது வீட்டிலேயே அனுவும் சந்தோஷும் தங்க வைக்கறாங்க. இவங்க கால் டாக்சி பிசினெஸ்ஸை நித்யாவும் கவனிச்சுக்கறா.

இப்போ, சந்தோஷ் மனைவி அனு மேல உயிரையே வச்சிருக்கான். மேலும் மேலும் லவ் பண்றான். அனுவின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போக, அவங்க வீட்டுல வந்து தங்கி இருக்கா அனு. மனைவியை பிரிஞ்சு இருக்க முடியாத சந்தோஷ், அனுவைப் பார்க்க மாமியார் வீட்டுக்கு வர்றான்.

அனு சமைக்கப் போக, நான் சமைக்கறேன் அனு.. நீ ரெசிபி மட்டும் சொல்லுன்னு சொல்றான். அவ காய்கறிகளை கட் செய்து கொடுத்து, ஒண்ணு ஒண்ணா சொல்ல, இவன் அத்தனையையும் ஒரே பாத்திரத்துல கொட்டிடறான். பார்வை தன் மனைவியை ரசிப்பதிலேயே இருக்கு.
மாமாவும், தம்பியும் சாப்பிட வர்றாங்க.. தள்ளுங்க.. சாம்பார், ரசம், பொரியல், கூட்டு எல்லாம் எப்படி செஞ்சிருக்கீங்கன்னு டேஸ்ட் பார்க்கலாம்னு சொல்றா. பார்த்தவள் அதிர்ந்து போறா... எல்லாமே ஒரே பாத்திரத்துல கொதிச்சு கெடக்கு.

மாமாவும், தம்பியும் சாப்பாட்டில் உட்கார்ந்துட, வேற வழியில்லாம பரிமாற ஆரம்பிக்கறா. என்ன ஒரே பாத்திரம்தான் இருக்குன்னு தம்பி கேட்க, இதுதாண்டா.. இனிமே எதுவும் உள்ள இல்லைன்னு அனு சொல்றா..
சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் இதெல்லாம்னு தம்பி கேட்க.. எல்லாமே இதுலதான் இருக்குன்னு சொல்றா.. உங்க மாமாதான் சமைச்சார் நெட்டை பார்த்துன்னு சொல்றா.. இது பேரு என்ன மாமான்னு அவன் கேட்க, இனிமேதாண்டா பேர் வைக்கணும்னு சொல்றா.
ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு ஆஹா ஓஹோன்னு புகழறாங்க. அனு மேலதானே காதலோடு சமைச்சேன். அது இவங்களுக்கு எப்படி ருசிக்குதுன்னு யோசிக்கறான் சந்தோஷ்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications