ஜீ தமிழில் என்ட்ரியான பாக்கியராஜின் மகள் சரண்யா! குடும்ப வாழ்க்கை பற்றி ஓபனா பேசிட்டாங்களே! வதந்திக்கு பதிலடி
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு எனப் பல துறைகளிலும் கலக்கி, ஒரு தனி ராஜாங்கத்தையே நடத்தியவர் நடிகர் கே.பாக்யராஜ். அவருடைய மனைவி பூர்ணிமா மற்றும் மகள் சரண்யாவும் நடிகைகள்தான். இப்போ, இந்த இருவரும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சமையல் எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ரசிகர்களைக் கலகலப்பாக்கி இருக்கின்றனர்.

யார் இந்த சரண்யா
இயக்குநர் பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமாவின் மகள்தான் சரண்யா. இவருக்கு சாந்தனு என்ற தம்பியும் இருக்கிறார். அவரும் ஒரு நடிகர்தான் என்பது நமக்குத் தெரியும். சரண்யா தன்னுடைய அப்பாவின் இயக்கத்தில் 2006-ல் வெளியான 'பாரிஜாதம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். அந்தப் படத்தில் அவருடைய துறுதுறு நடிப்பும், க்யூட்டான முகமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
அதன் பிறகு, சில படங்களில் நடித்த சரண்யா, 2013-ல் விகாஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு அவர் நடிப்பிலிருந்து விலகி, தன் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.
பாக்யராஜ் - பூர்ணிமாவின் காதல் கதை
அண்ணன் சாந்தனுவும், தங்கை சரண்யாவும் சினிமாவுக்குள் வந்துவிட்டாலும், இவர்களின் அப்பா பாக்யராஜ் மற்றும் அம்மா பூர்ணிமாவின் வாழ்க்கை கதை, பலருக்கும் ஒரு ஆச்சரியமான விஷயம்தான். இவர்கள் இருவரும் டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற சூப்பர் ஹிட் படத்தில் ஒன்றாக நடித்தனர். அப்போதுதான் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. ஆனால், பூர்ணிமா நிகழ்ச்சியில் சொன்னது போல, இவர்களுக்கு நடந்தது ஒரு அரேஞ்ச் மேரேஜ்தான். சினிமாத் துறையில் நிறைய பேர் இதை காதல் திருமணம்னு சொல்றாங்க.
திருமணத்திற்குப் பிறகு, கணவன்-மனைவியாக, தங்கள் வாழ்க்கையைத் தொடங்கிய இருவரும், சுமார் ஏழு வருடங்கள் கழித்துதான் ஹனிமூன் போனார்களாம்.
சமையல் நிகழ்ச்சியில் வெடித்த ரகசியம்
'சமையல் எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியில் நடிகை சுஜிதா மற்றும் ஷோனா இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். பூர்ணிமா மற்றும் சரண்யா சமையல் செய்துகொண்டிருக்கும்போது, ஷோயா கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, பூர்ணிமாவிடம், "உங்களுக்கு காதல் திருமணமா, அரேஞ்ச் மேரேஜா?" எனக் கேட்டார். அதற்கு பூர்ணிமா, "எனக்கு அரேஞ்ச் மேரேஜ்தான். ஆனாலும், திருமணத்திற்குப் பிறகு ஏழு வருஷம் கழிச்சுதான் நாங்க ஹனிமூன் போனோம்" என்று சொன்னார்.
உடனே சுதாரித்துக்கொண்ட ஷோயா, சிரித்துக்கொண்டே, "அப்போ, அந்த ஹனிமூனுக்கு அப்புறம் பிறந்தவங்கதான் சரண்யாவா?" என்று ஒரு குசும்புத்தனமான கேள்வியைக் கேட்டார். இந்தக் கேள்வியைக் கேட்டதும், பூர்ணிமாவும், சரண்யாவும் வெட்கப்பட்டு சிரித்தார்கள்.

பொதுவாக, பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பேசாத இந்த குடும்பத்தினரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி, இந்த நிகழ்ச்சியில் வெளியான தகவல், ரசிகர்களுக்கு ஒரு கலகலப்பான பொழுதுபோக்கைக் கொடுத்திருக்கிறது. இந்த விஷயம் சமூக வலைத்தளங்களிலும் பரவி, பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சரண்யா பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த நிலையில் மீண்டும் இப்போது சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் முன்பு வந்திருக்கிறார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications