எனக்கு ஒரு மகன் இருக்கான்.. கஷ்டங்களை தாண்டி வந்துட்டேன்! பாக்யராஜின் மகள் எமோஷனல்
சென்னை: நடிகர் பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா தம்பதியின் மூத்த மகளான சரண்யா பாக்கியராஜ் பேட்டி ஒன்றில் தன்னுடைய தற்போதைய நிலை மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் தனக்கு ஒரு மகன் இருக்கிறார், குழந்தை வளர்ப்பு எவ்வளவு கஷ்டம் என்பது பற்றி பல விஷயங்களை அதில் பகிர்ந்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில பிரபலங்கள் வீட்டில் எல்லோருமே நடிகர்களாக இருக்கிறார்கள். அதில் இயக்குனர் பாக்கியராஜ் குடும்பத்தையும் சொல்லலாம். பாக்கியராஜ் இயக்குனராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். பன்முகத் திறமை கொண்ட பாக்கியராஜ் பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே பாக்யராஜ்க்கு திருமணம் முடிந்திருந்தாலும் அவருடைய முதல் மனைவி மறைந்த பிறகு பூர்ணிமாவோடு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சரண்யா மற்றும் சாந்தனு என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அதில் சரண்யா பாரிஜாதம் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். ஒரு சில திரைப்படங்களில் அந்த நேரத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் பிறகு சினிமாவை விட்டு விலகிவிட்டார். ஆரம்ப காலகட்டத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் ஹிட் அடித்தது. ஆனால் சமீப காலமாக அவர் தன்னுடைய வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறார். இப்படி ஆன நிலையில் கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக அவள் விகடன் youtube சேனலுக்கு சரண்யா பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் நான் இத்தனை வருடங்களாக சினிமாவில் இல்லாமல் போன காரணம் என்ன என்பது பற்றியும் தன்னுடைய குடும்ப வாழ்க்கை பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

அதில் தான் 18 வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் போனதற்கு காரணம் நான் சினிமாவில் கதாநாயகியாக இல்லை என்றாலும் அப்பாவுக்கு உதவியாக சினிமாவில் பல்வேறு வேலைகளை பார்த்தேன். கேமராவுக்கு பின்னாடி இருந்து நான் வேலை பார்த்ததால் தான் மக்களுக்கு தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு சரண்யா தற்கொலை முயற்சி எடுத்து இருந்தார்.
அது அவருடைய குடும்பத்தினரால் கண்டு பிடிக்கப்பட்டு கடைசி நேரத்தில் அவர் காப்பாற்றப்பட்டார். அதற்கு பிறகு அவர் திருமணமே செய்யவில்லை என்று செய்திகள் பரவி வந்தது. ஆனால் தற்போது சரண்யா பேட்டியில் எனக்கு ஒரு மகன் இருக்கிறார் என்னுடைய குழந்தையை கவனித்துக் கொண்டு நான் இப்போது பிசினஸ் கவனித்து வருவது கஷ்டமான வேலையாக தான் இருக்கிறது. இப்போதுதான் அம்மாவுடைய கஷ்டம் எனக்கு புரிகிறது.
நாம் குழந்தைக்கு அம்மாவாகும் போதுதான் நம்முடைய அம்மாவும், அப்பாவும் இப்படித்தானே நம்மை கஷ்டப்பட்டு வளர்த்திருப்பார்கள் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. நானும் அம்மாவை போல தான் நடிகையாக மட்டும் இருந்தால் போதாது என்று எனக்கு பிடித்த ஃபேஷன் டிசைனிங் கவனம் செலுத்தி வருகிறேன். பலர் தங்கள் வீட்டு பங்க்ஷனுக்காக என்னிடம் டிரஸ் டிசைன் பண்ணுவதற்காக வருவார்கள்.

அந்த நேரத்தில் தான் என்னுடைய மகன் அழுது கொண்டு இருப்பான். அப்போது அவர்கள் தங்களுடைய ஃபங்ஷனுக்காக பல பிளான்களை என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பார்கள் அந்த நேரத்தில் நம்முடைய குழந்தை அழுகிறது என்று சொல்ல முடியாதே என்று நான் தவித்து இருக்கிறேன். ஆனால் நம்முடைய குழந்தையையும் பிசினஸ் செய்யும் ஒரே நேரத்தில் கவனித்து வருவது ரொம்பவும் சவாலான வேலை தான்.
நான் எந்த இடத்திற்கு போகும்போதும் அதிகமாக மேக்கப் போட்டது கிடையாது. இப்ப கூட என்னுடைய பேக்குக்குள ஒரே ஒரு லிப்பாம் சேர்ந்த லிப்ஸ்டிக் மட்டும்தான் இருக்கும். அதோடு டயபர் மற்றும் குழந்தைக்கு தேவையான பொருள்கள் தான் என்னுடைய பேக்குக்குள் இருக்கும். சினிமாவில் நீங்கள் ஏன் நடிக்காம போயிட்டீங்க என்று பலர் கேக்குறாங்க. நானாக சினிமாவை விட்டு விலகவில்லை.
எனக்கு இப்ப வாய்ப்பு வந்தால் கூட நான் நடிக்க ரெடி தான். எனக்கு சரியான வாய்ப்புகள் வராததால் தான் நான் அடுத்த வேலைகளில் கவனம் செலுத்து வருகிறேன். எனக்கு நடிப்பை தவற வேற எதுவும் தெரியாததால் அது சம்பந்தமான வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறேன் என்று அந்த பேட்டியில் சரண்யா பேசியிருக்கிறார்.
ஆனால் அவருடைய கணவர் யார்? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று எந்த தகவலையும் சரண்யா கூறவில்லை. சரண்யாவுக்கு சில வருடங்களுக்கு முன்பே திருமணம் நடந்து விட்டது. அவருடைய திருமண புகைப்படங்களை வெளியே விடாமல் ரகசியமாக பாக்கியராஜ் குடும்பத்தினர் வைத்திருந்தார்கள் என்று ஏற்கனவே செய்திகள் பரவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ சரண்யாவின் பர்சனல் வாழ்க்கை ஒரு பக்கம் இருந்தாலும் அவர் நடித்த பாரிஜாதம் திரைப்படத்தில் அவருடைய எதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்திருக்கும். அதிலும் "உன்னை கண்டேனே முதல் முறை" என்ற பாடல் இப்ப கூட பலருடைய ஃபேவரிட் ஆகத்தான் இருக்கும். அதனாலேயே சரண்யா தொடர்ந்து சினிமாவில் நடிக்க வரவேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications