Sarathkumar: எனக்கும் ராதிகாவுக்கும் சண்டை? வீடு பற்றிய பேச்சு! இதுவரை நடக்காத அதிசயம்! நெகிழ்ந்த சரத்குமார்
சென்னை: சில நாட்களாக சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்ட விஷயங்களில் சரத்குமார் (Sarathkumar) மற்றும் ராதிகா சரத்குமார் வாழும் அந்த பிரமாண்ட வீடு பற்றிய தகவலும் இருந்தது. 14 ஆயிரம் சதுர அடியில் அமைந்த அந்த பங்களா, 500 கோடி மதிப்பு, 7 கதவு, 15 வேலைக்காரர்கள்... இப்படி கதைக்கு கதை சேர்த்து பேசப்பட்டதால் ரசிகர்களே குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டனர்.
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது புதிய படம் 'ஆழி' தொடர்பான பேட்டியில் சரத்குமார் வழக்கமான சீரியஸ் டோனில் இல்லாமல், முழுக்க ஜாலியான பாணியில் பதில் சொல்லியிருக்கிறார்.

சரத்குமார் பேட்டி
"நான் கட்டியது பெரிய வீடு தான்... அதில் சந்தேகமே இல்லை. குடும்பம் பெரியது... எல்லாரும் சேர்ந்து இருக்கணும் என்ற ஆசையில்தான் கட்டினேன். ஆனா அது 500 கோடி என்று சொன்னது எங்கிருந்து வந்த கணக்கு?" என்று சிரித்தபடி கேட்டார்.
அதோடு நின்றுவிடாமல், "என்னிடம் உண்மையிலேயே 500 கோடி இருந்திருந்தால் நான் இன்னும் சினிமாவில் கஷ்டப்பட்டு வேலை பார்த்திருப்பேனா? அந்த பணத்தை வங்கியில் போட்டுட்டு வட்டி வாங்கி ரிலாக்ஸாக இருந்திருப்பேன்" என்று அவர் சொன்னபோது பேட்டி itself ஒரு காமெடி டிராக்காக மாறிவிட்டது.
வீட்டை பராமரிக்க முடியாமல் வாடகை வீட்டுக்கு மாறிவிட்டார்களாம் என்ற பேச்சு பற்றியும் அவர் மிக லைட்டாகவே எடுத்துக்கொண்டார். பெரிய வீடு இருந்தால் பராமரிப்பு இருக்கும்; அதற்காக கதவுகளை எண்ணி கதைகள் உருவாக்க வேண்டாம் என்பதுதான் அவரது கருத்து.
இந்த பேட்டியில் சரத்குமார் பேசும் போது தெரிந்த முக்கிய விஷயம் - அவர் இந்த ருமர்களை கோபமாக அல்ல, காமெடியாக பார்க்கிறார் என்பதுதான். அதே நேரத்தில் பற்றிய வதந்திகளுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார்.
மேலும் படங்களைப் பற்றியும் அவர் பேசினார். சினிமாவில் ஹீரோவாக மாஸ் காட்டிய காலத்திலிருந்து இன்று குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து பிஸியாக இருப்பது வரை அவரது பயணம் இன்னும் ஸ்ட்ராங் ஆகவே இருக்கிறது. 70 வயதை கடந்த பிறகும் ஜிம் போய் வொர்க்அவுட் செய்வது, தொடர்ந்து புதிய படங்களில் நடிப்பது - இவை எல்லாம் இளம் தலைமுறைக்கு அவர் ஒரு ரோல்மாடல் ஆக இருப்பதற்கான காரணங்களாகவே பார்க்கப்படுகிறது.
ஒரே நாளில் தனது படமும், ராதிகாவின் படமும் வெளியாகிறது என்ற கேள்விக்கும் அவர் சிரித்தபடியே ரியாக்ட் செய்தார். "வீட்டில் போட்டி இல்ல...ஆனால் தியேட்டரில் எங்க ரெண்டு பேருடைய படமும் ஒரே நாளில் வருவது போட்டியாக தான் பார்க்கப்படுகிறது " ஒரு சிலர் ராதிகாவிற்கும் சரத்குமாருக்கும் போட்டி என்று கூட பேச தொடங்கி விட்டார்கள் .
ஆனால் நான் கேள்விப்பட்ட வரைக்கும் சினிமாவில் இப்படி கணவன் மனைவி இருவரும் ஹீரோவாக நடித்திருக்கும் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனதாக சரித்திரம் இல்லை, இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன் என்றும் சரத்குமார் பெருமைப்பட்டு இருக்கிறார்.
ஒருகாலத்தில் வில்லனாக அறிமுகமாகி, பிறகு ஹீரோவாக உயர்ந்து, இன்று கதாபாத்திர நடிகராகவும் அரசியல்வாதியாகவும், தயாரிப்பாளராகவும் பல முகங்களுடன் இன்னும் அதே எர்னஜியோடு ஓடிக்கொண்டிருக்கும் சரத்குமார் - அவரைப் பற்றி வரும் ருமர்களையும் அதே ஸ்டைலில் ஹாண்டில் செய்வது தான் அவரின் தனித்துவம்.
-
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!











Click it and Unblock the Notifications