சரத்குமார் காலில் விழுந்த மணிமேகலை.. மருமகன் சொன்ன அந்த வார்த்தை.. வரலட்சுமி ரியாக்ஷன், அதிர்ச்சியில் அர்ச்சனா
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மகா சங்கமத்தில் சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் கலந்து கொண்டார். அப்போது தொகுப்பாளினியாக இருக்கும் மணிமேகலை சரத்குமாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார். அதே நேரத்தில் சரத்குமாரின் மருமகன் நிகோலாய் சொன்ன வார்த்தையை கேட்டு மொத்த அரங்கத்தினரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
நடிகர் சரத்குமாருக்கு அறிமுகம் தேவை இல்லை. 80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் இப்போதுள்ள 2கே கிட்ஸ்களுக்கும் பரீட்சயமானவர் தான். சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் முக்கிய பிரபலமாக இருந்து வருகிறார். நடிப்பு, இயக்குனர், தயாரிப்பாளர் என்று பல திறமைகளை கொண்ட சரத் குமாருக்கு பெரிய அளவில் பிரபலம் கொடுத்தது நடிப்புதான்.

விவாகரத்து
ஆரம்பத்தில் துணை கதாபாத்திரத்தில் சினிமாவில் என்ட்ரியான சரத்குமாருக்கு பிறகு கதாநாயகனாகவும் தனக்கு கிடைத்த வாய்ப்பை வைத்து இப்ப வரைக்கும் தமிழ் சினிமாவில் முக்கிய நபராக வலம்வந்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் சரத்குமார் சாயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ஆனால் சாயாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சரத்குமார் அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.
சரத்குமார் குழந்தைகள்
ராதிகா மற்றும் சரத்குமார் தம்பதிக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார். சமீபத்தில் தான் நடிகை வரலட்சுமிக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு மற்ற மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் வரலட்சுமி சின்னத்திரையில் நடுவராக அறிமுகமாக இருக்கிறார். அதுவும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி சீசன் 2 நிகழ்ச்சியில் இவரும் நடுவராக இருக்கிறார்.

மகா சங்கமம்
இந்த நிலையில் ஜீ தமிழில் இந்த வாரம் டான்ஸ் ஜோடி டான்ஸ் மற்றும் சரிகமபா நிகழ்ச்சியில் மகா சங்கமும் நடைபெறுகிறது. இது நடிகர் சரத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார். அவரோடு வரலட்சுமியின் கணவரும் சரத்குமாரின் மருமகனுமான நிக்கோலாய் கலந்து கொண்டு இருக்கிறார்.
காலில் விழுந்த மணிமேகலை
மேடையில் சரத்குமார் நிற்கும் போது விஜே மணிமேகலை தன்னுடைய கையில் இருக்கும் மோதிரத்தை கீழே விழுவது போல வைத்து அதை எடுப்பது போல சரத்குமாரின் காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார். சரத்குமார் நடிப்பில் வெளியான சூரிய வம்சம் திரைப்படம் தான் தன்னுடைய ரோல் மாடல் என பல இடங்களில் பேசி இருக்கும் மணிமேகலையை ரியல் சூரிய வம்சம் தம்பதி என்று ரசிகர்கள் பாராட்டப்படுகிறார்.

ரியல் சூர்யவம்சம் ஜோடி
இந்த நிலையில் சூரியவம்சம் திரைப்படத்தில் தேவயானி சாந்தகுமார் காட்சியை கிரியேட் செய்த மணிமேகலையை பார்த்து அரங்கத்தில் இருந்த எல்லோரும் சிரித்திருக்கிறார்கள். அதேபோல வரலட்சுமியின் கணவரிடம் அவருடைய பெயர் என்ன என்று விஜே அர்ச்சனா கேட்டிருக்கிறார். அதற்கு நிக்கோலாய் வரலட்சுமி சரத்குமார் என்று அவர் சொல்லியிருக்கிறார். பொதுவாக திருமணத்திற்கு பிறகு மனைவி தான் கணவர் பெயரை பெயருக்கு பின்னாடி இணைத்து சொல்வார்கள். ஆனால் நிக்கோலாய் தன்னுடைய பெயருக்கு பின்னாடி வரலட்சுமி மற்றும் அவருடைய அப்பா சரத்குமார் பெயரையும் இணைத்து இருக்கிறார். இதை அர்ச்சனா பாராட்டி இருக்கிறார். அதுபோல ரசிகர்கள் பலரும் இதை பாராட்டி வருகிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications