Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீரியல் நடிகைகளை திருமணம் செய்யக்கூடாது..பகீர் கிளம்பும் செந்தில்..இவருக்கும் பிரச்சனையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலம் அடைந்த செந்தில் தற்போது சீரியல் நடிகைகளை திருமணம் செய்யக்கூடாது என்று பகீர் கிளப்பி இருக்கிறார்.

ஏற்கனவே காதலித்து திருமணம் செய்து கொண்ட சின்னத்திரை பிரபலங்கள் பலர் சமூக வலைத்தளத்தில் குடும்ப சண்டைகளை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செந்தில் பல தகவல்களையும், அறிவுரைகளையும் கூறியிருக்கிறார்.

Saravanan Meenakshi serial Senthil has now said that he should not marry serial actresses

சின்ன திரையை பாலோ செய்து இணையத்தை பயன்படுத்தும் பலருக்கும் இப்போது தெரிந்திருக்கும் சீரியல் தம்பதிகள் இணையத்தில் தங்களுடைய அந்தரங்க பிரச்சனைகளையும் அசராமல் கூறி சண்டையிட்டு கொண்டிருப்பது பற்றி. இந்த நிலையில் இதற்கு பதில் கூறும் விதமாக சீரியல் நடிகர் செந்தில் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான "மதுர" சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான செந்தில் அதைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியலில், "ஏல ஏலேலோ சாங்" போட்டு பல சீரியல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல இளம் ரசிகர்களையும் கவர்ந்திருந்தார். சீரியல்கள் பார்க்காத ரசிகர்கள் கூட இந்த சரவணன் மீனாட்சி சீரியலை தொடர்ந்து பார்த்து வந்தனர். அந்த அளவிற்கு காதல் மோதல் காட்சிகளால் ரசிகர்களின் மனதை கவர்ந்த செந்தில் அந்த சீரியலில் அவரோடு நடித்த ஸ்ரீஜாவை திருமணமும் செய்து இருந்தார்.

சீரியலில் ஒன்றாக நடித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிய விஷயமாக இல்லாமல் இருந்தாலும் இவர்களுடைய திருமணம் பல வருடங்களைக் கடந்து மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் சீரியல் நடிகர்கள் ஆன திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்ணவ் பிரச்சனை, அதுபோல சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் பிரச்சனை போன்றவை சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் செந்தில் சீரியல் நடிகைகளை கல்யாணம் செய்யக்கூடாது என்று கூறியிருக்கிறார்.

அதற்குக் காரணத்தையும் அவரே கூறியிருக்கிறார். அது என்னன்னா, பொதுவா சீரியல்ல நடிக்கும் போது எல்லாரும் நினைக்கிறது இந்த கதாபாத்திரத்தில் போலத்தான் இவங்களுடைய நிஜ கேரக்டரும் இருக்கும்னு ரசிகர்கள் மட்டுமல்லாமல் கூட நடிக்கிறவங்களும் அதேதான் நினைக்கிறாங்க. சீரியல்ல நல்லவங்களா நடிக்கிறதால நிஜத்திலும் அப்படியே இருப்பாங்கன்னு நம்பி தான் அவங்க மேல காதல் வருகிறது.

Saravanan Meenakshi serial Senthil has now said that he should not marry serial actresses

அந்த காதல் திருமணத்தில் முடிஞ்ச பிறகு ஒரு சில நாட்களிலே அவங்களோட சுயரூபம் வெளியே வந்துடும். அதற்கு பிறகு தான் நாம் தப்பு செஞ்சிட்டோம்னு அவங்க நினைக்கிறாங்க. இதனால தான் பல சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் டைவர்ஸ் செய்றாங்க. எதிர்பார்ப்பு ஒன்றாக இருக்கும் போது அது பொய்யாகும்போது வரும் கோபம் தான் இப்போ சமூக வலைத்தளத்தில் வெடிச்சுக்கிட்டு இருக்கிறது கூட.

நானும் கூட அப்படித்தான் சரவணன் மீனாட்சி சீரியல் ஸ்ரீஜாவையும் மீனாட்சியாகவே பார்த்துட்டேன். அந்த சீரியலில் எதிர்த்து பேசாம, அமைதியாக, கோபப்படாமல், மாமியார் சொல்வதையெல்லாம் அப்படியே கேட்டு நடப்பாரு என்று நினைத்து தான் நானும் திருமணம் செஞ்சேன். ஆனா அது எல்லாம் மீனாட்சி என்ற கதாபாத்திற்குரிய கேரக்டர் தான் என்பது எனக்கு பிறகு தான் புரிந்தது.

நான் மீனாட்சியை கல்யாணம் பண்ணல. ஸ்ரீஜாவை தான் கல்யாணம் பண்ணி இருக்கேன்னு பிறகு தெளிவா புரிஞ்சுடுச்சு. சரவணன் மீனாட்சி சீரியலில் ஸ்ரீஜா வேறு, மீனாட்சி வேறு தான். ஸ்ரீஜா கேரக்டர் நான் எது சொன்னாலும் நீ என்ன எனக்கு சொல்வது? என்று பிடிவாதம் பிடிக்கக் கூடியவர் அதுபோல ஸ்ரீஜா எந்த முடிவு எடுத்தாலும் அதுல ஆணித்தரமா இருப்பாங்க, யாருக்காவும் அதை மாற்றிக் கொள்ள மாட்டாங்க, அதற்காக ஒரு நல்ல பாயிண்டையும் வச்சிருப்பாங்க.

நம்ம விட ரொம்பவே புத்திசாலியா யோசித்து செயல்படுவாங்க. ஆனால் சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சிஅப்படி கிடையாது. நான் அந்த மீனாட்சியை தான் விரும்பினேன். ஆனால் திருமணத்துக்கு பிறகு வேறு விதமாக அமைந்தது. இருந்தாலும் காதலில் மகத்துவம் தெரிந்தவர்களுக்கு சகிப்புத்தன்மை இருக்க வேண்டும் என்று ரொம்ப பாதிக்கப்பட்டவர் போல அலுத்தபடியே மிர்ச்சி செந்தில் பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+