எங்க வீட்டில் விசேஷம்.. சரவணன் மீனாட்சி சீரியல் செந்தில்- ஸ்ரீஜா வெளியிட்ட போஸ்ட்.. குவியுது வாழ்த்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் ஜோடியாக நடித்து சின்னத்திரை மட்டுமல்ல வாழ்க்கையிலும் தம்பதிகளாக மாறிய செந்தில் மற்றும் ஸ்ரீஜா தம்பதி நேற்று தங்களுடைய பதினோராவது திருமண நாளை கொண்டாடி இருக்கின்றனர். அப்போது எடுத்த புகைப்படங்களை இருவரும் பகிர்ந்திருக்கும் நிலையில் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
90s காலகட்டத்தில் உள்ள சீரியல்களில் ஒரு சில சீரியல் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்ததாக இருந்தது. அந்த வரிசையில் ஒன்றுதான் சரவணன் மீனாட்சி சீரியல். இந்த சீரியலில் முதல் பாகத்திற்க்கு கிடைத்த வெற்றியின் காரணமாகவே தொடர்ந்து பல சீசன்கள் உருவானது. முதல் சீசனில் ஜோடியாக நடித்து ரியல் லைப்பில் செட்டிலான நடிகர் செந்தில் மற்றும் ஸ்ரீஜா தம்பதி தங்களுடைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் நடிகை ஸ்ரீஜா
இந்த தம்பதிக்கு சில வருடங்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்தது. ஸ்ரீஜா கேரளாவை சார்ந்த நடிகையாக இருந்தாலும் தமிழில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் அதிகமான ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. சரவணன் மீனாட்சி சீரியல் வந்த "ஏ..லே..ஏஏ....லோ" பாடல் இப்போதும் பலருடைய செல்போன் காலர் டியூனில் இடம் பிடித்திருக்கிறது.
சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு இருவரும் இணைந்து மாப்பிள்ளை என்று சீரியலில் நடித்திருந்தனர். ஆனால் அந்த சீரியல் திடீரென முடிவுக்கு வந்துவிட்டது. அதற்கு பிறகு ஸ்ரீஜா எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. செந்தில் மட்டும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடித்துக் கொண்டிருந்தார். அந்த சீரியல் முடிவடைந்ததும் ஜீ தமிழில் அண்ணா சீரியல் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை
அதுபோல பார்க்கும் நடிகர்கள் நடிகைகள் எல்லோருமே உன்னுடைய மனைவியை நீங்க தான் நடிக்க விடலையா? என்று கேட்கிறார்கள். ஆனால் அவர் தொடர்ந்து நடிக்கணும் என்பதுதான் என்னுடைய ஆசை, அவருக்கு கல்யாணம் முடிந்த பிறகு வீட்டில் இருக்கணும், குழந்தைகளை பார்க்க வேண்டும் என்பதுதான் ஆசை. அவரிடம் நடிக்க சொன்னாலே கோபப்படுகிறார். அதனால் நானும் அதை விட்டு விடுகிறேன்.
அதுபோல சோசியல் மீடியாவையும் அவர் பயன்படுத்த மாட்டார். அதில் அவருக்கு இன்ட்ரஸ்ட் கிடையாது என்று சொல்லி விடுவார். அதனால் தான் அவர் புகைப்படங்களையும் வெளியிட மாட்டார். திருமண நாள் மற்றும் குழந்தையின் பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளில் கூட நான் தான் போட்டோஸ் எடுத்து பதிவிட வேண்டும். அவர் அதை கூட விரும்ப மாட்டார் என்று செந்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

செந்தில்- ஸ்ரீஜா தம்பதி புகைப்படம்
சினிமாவில் மட்டுமல்ல சீரியலிலும் ஒன்றாக நடிக்கும் பலர் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஒரு சில வருடங்களிலேயே நீ யாரோ நான் யாரோ என்று கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விடுகிறார்கள். ஆனால் இந்த தம்பதி 11 வருடங்களாக மகிழ்ச்சியாக தங்களுடைய திருமண வாழ்க்கையை கடந்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் தான் செந்தில் மற்றும் ஸ்ரீஜா தம்பதி புதியதாக ரெஸ்டாரண்ட் ஒன்றை தொடங்கியிருந்தனர். அதை ஸ்ரீஜா தான் கவனித்து வருகிறார். இந்த தம்பதி தங்களுடைய திருமணதன்று எடுத்த புகைப்படங்களையும் தற்போது தன்னுடைய மகனோடு 11 வது திருமண நாளை கொண்டாடும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கின்றனர். இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications