சீரியலை விட்டு விலகியது இதனால்தான்.. நேரடியாக பலரிடம் நானே கேட்டிருக்கிறேன்! மைனா நந்தினி எமோஷனல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கேரக்டரில் நடித்து பிரபலமான நந்தினி இப்போது சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். தான் எதற்காக சின்னத்திரையை விட்டு விலகினேன் என்பது பற்றி சமீபத்தில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
சினிமாவில் ஒரு சில பிரபலங்கள் அறிமுகமாகும் திரைப்படத்தின் பெயரை அடைமொழியாக வைத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் சின்னத்திரையில் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கேரக்டரில் நடித்து அதே பெயரை தன்னுடைய அடை மொழியாக நந்தினி வைத்திருக்கிறார்.

ஆரம்ப காலம்
ஆரம்பத்தில் விஜேவாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய மைனா நந்தினிக்கு சரவணன் மீனாட்சி சீரியல் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதற்கு பிறகு ஒரு சில சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்தார். அதை தொடர்ந்து திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார். இப்போது சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தான் எதற்காக சீரியலில் இருந்து விலகினேன் என பேசி இருக்கிறார்.
வாய்ப்பு கேட்பு
அதில் அவர் பேசும்போது, நான் சீரியலை விட்டு விலக வேண்டும் என்று எப்போதுமே முடிவு எடுத்தது கிடையாது. ஆனால் சில வருடங்களாக எனக்கு சீரியல் கிடைக்கவில்லை. ஒரு சில சினிமா வாய்ப்பு கிடைத்ததுமே இனி இவங்க சினிமாவில் தான் நடிப்பாங்க என்று சிலர் நினைத்து விட்டாங்க போல. அதனால் எனக்குன்னு எந்த வாய்ப்பும் கிடைக்கல. நான் பார்க்கும் எல்லா இயக்குனரிடமும், தயாரிப்பாளரிடமும் ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டே தான் இருப்பேன்.
வாய்ப்பு மறுப்பு
நான் வேலை கேட்பதை அவமானமாக நினைக்க மாட்டேன். எனக்கு வேலை வேண்டும் அது என்னுடைய திறமைக்காக வேண்டும் என்பதுதான் குறிக்கோளாக இருக்கும். ஆனால் ஒரு சிலர் வெள்ளித்திரைக்கு போயிருக்க உனக்கு தகுந்த கேரக்டரில் இனி நீ சின்னத்திரையில் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லிவிட்டார்கள். இது அவர்கள் என்னை மோட்டிவேஷன் செய்வதற்காக சொன்னார்களா? அல்லது எனக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்களா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் பாசிட்டிவாக நினைத்துதான் அடுத்த கட்டத்தில் அடி எடுத்து வைத்து இப்போதும் ஐந்து, ஆறு படங்கள் கைவசம் இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
எல்லாவற்றிலும் முக்கியமான கேரக்டரில் தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். சீரியல் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக செய்வேன். நான் எப்போதுமே சீரியலில் நடிக்க கூடாது என்று ஒதுங்கியது கிடையாது. அங்கு சரியாக வாய்ப்பு வராததால் தான் நான் போகவில்லை என்று பேசியிருக்கிறார். அதேபோல பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முதல் பாகத்தில் தன்னுடைய கணவருடன் நடித்திருந்தார். அதற்கு பிறகு அவர் பெரிதாக இந்த சீரியலிலும் நடிக்கவில்லை.
தன்னம்பிக்கை வார்த்தை
இப்போது யூடியூப் சேனலில் தன்னுடைய கணவரோடு சேர்ந்து சில ஷார்ட் ஃபிலிம் எடுத்துக்கொண்டிருக்கிறார். தனக்கு இப்போது சினிமா வாய்ப்பு வந்து கொண்டிருப்பது சந்தோஷம்தான் ஆனால் நான் ஆரம்பத்தில் பட்ட கஷ்டத்தை இப்போதும் மறக்கவில்லை. அந்த கஷ்டங்களில் இருந்து பல பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். எல்லோருக்கும் கஷ்டம் வரும் அப்போது அதை நினைத்து உடைந்து போய்விடக்கூடாது நம்முடைய திறமையை நிரூபிக்கும் இடம் இது தான் என்று அந்த கஷ்டங்களை தாண்டி வர வேண்டும் என மைனா நந்தினி தன்னம்பிக்கையாக பேசியிருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications