இதைப் பார்த்து அப்பாவுடைய வேல்யூ தெரிஞ்சுக்கோங்க..கண்ணீர் விட்டு அழுத டி.ராஜேந்திரன்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமபா 3 நிகழ்ச்சியின் இந்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் டெடிகேஷன் ரவுண்ட் நடைபெற இருக்கிறது.
அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டி.ராஜேந்திரன் கண் கலங்கி பல அறிவுரைகளை கூறி இருக்கிறார்.

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பல பேருடைய திறமையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் விதமாக புதியதாக பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த மாதிரி தான் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியும் இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் டெடிகேஷன் ரவுண்ட் நடைபெற இருக்கிறது. அதில் சிறப்பு விருந்தினராக டி.ராஜேந்திரன் கலந்து கொண்டிருக்கிறார். டெடிகேஷன் ரவுண்டில், உள்ளங்களுக்கு உயிர் கொடுத்த நல் உள்ளங்களுக்கு ஆக பலரும் தங்களுடைய மனதில் இருக்கும் பாசத்தை பாடல்களாக வெளிப்பாட்டி வருகின்றனர்.
அதில் ரசிகர்களின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் மணிகண்டன் தன்னுடைய அம்மாவிற்காக "ஆராரிராரோ நான் இங்கு பாட" எனும் பாடலைப் பாட, அதற்கு டி.ராஜேந்திரன் இந்த பாடலில் உள்ள வரிகளை விட அந்தப் பையனின் வலி தான் அதில் அதிகமாக தெரிகிறது என்று பாராட்டுகிறார்.

அதைத்தொடர்ந்து நாகார்ஜுன், "தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை" எனும் பாட்டை பாட அதைக் கேட்டு கண் கலங்கி அழுத டி.ராஜேந்திரன் இந்த நிகழ்ச்சியை பார்த்தாவது அப்பாவுடைய வேல்யூ தெரிஞ்சுக்கோங்க டா... என்று பெரும் வருத்தத்தில் கூறியிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து அக்ஷயா," கந்தல் ஆனாலும் தாய்மடி போல்" எனும் பாடலை பாட தாய் மண்ணுக்காக பாடிய இந்தப் பாடலுக்காக என்னையே தந்துட்டேன் என்று எழுந்து நின்று பாராட்டி இந்த நிகழ்ச்சிக்கு இறைவன் என்னை வரவைத்து இருக்கிறான் என்றால் அந்த இறைவனை நான் பார்த்து விட்டேன் என்று அவர் உருக்கமாக பேசியிருக்கிறார். தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications