SaReGaMaPa: கணவர் கல்லறையில் சரிகமப வெற்றியை சமர்ப்பித்த பவித்ரா! ஊரே சேர்ந்து செய்த செயல்! நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை: சின்னவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் நிகழ்ச்சிகளில் 'சரிகமப' நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் தற்போது சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பல சுற்றுக்களை வெற்றிகரமாகக் கடந்து தற்போது இறுதிக்கட்டத்தையும் வெற்றிகரமாகக் கடந்து வந்திருக்கிறது இந்நிகழ்ச்சி.

ஆறு போட்டியாளர்கள் தேர்வு
தற்போது இந்த நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கு மொத்தம் ஆறு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் ஆறாவதாகத் தேர்வானவர் தான் போட்டியாளர் பவித்ரா. சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் பவித்ராவுக்குத் தனிச் சிறப்புண்டு. அவர் தனது கடந்தகால வாழ்க்கை பற்றிப் பேசியது ரசிகர்களின் மனதைப் பிழிந்தது.
பவித்ராவுக்குத் திருமணமாகி கொஞ்ச நாளே ஆன நிலையில், அவருடைய கணவர் ஒரு ஆக்சிடெண்டில் இறந்து விட்டார். அதுவும் தன்னுடைய குழந்தையின் பிறந்தநாளுக்கு டிரஸ் வாங்கிக் கொண்டு வரும்போது தான் ஆக்சிடெண்டில் இறந்து இருக்கிறார். உன் புருஷனுக்கு ஆக்சிடென்ட் ஆகிட்டு ஓடி வான்னு பக்கத்துல இருந்தவர்கள் எல்லாம் சொல்ல, இவரும் ஹாஸ்பிடல் போவதற்கு வீட்டில் பணத்தை தேடும் போது வீட்டில் 100 ரூபாய் தான் இருந்ததாம். அதை தூக்கிக்கொண்டு தான் இவர் ஹாஸ்பிடலுக்கு ஓடி இருக்கிறார். ஆனால் அங்கு அவருடைய கணவர் அதற்குள் இறந்து போய்விட்டாராம்.
கணவரின் நினைவுகளுடன் தனது வாழ்க்கையைப் பயணித்துக்கொண்டிருக்கும் அவர், தன்னுடைய சோகங்களை மறக்க இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தித் திறமையை வெளிப்படுத்தினார். தான் பாட வரும்போதெல்லாம் தன்னுடைய கணவர் தனக்கு உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்தியதை நிகழ்ச்சியில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியது அனைவரின் கண்களையும் கலங்கச் செய்தது.
கணவர் கல்லறையில் கிரீடம் வைத்து அஞ்சலி
இப்போது பவித்ரா இறுதி சுற்றுக்கு தேர்வு ஆனதும், தன் ஊருக்குச் சென்றிருந்தார். அங்கே அவரது ஊர் மக்கள், அவரைத் திருவிழா போல நிகழ்ச்சிகள் நடத்தி மனம் மகிழ வைத்து வரவேற்றிருந்தனர். இதன் பின்னர் பவித்ரா தன் கணவர் கல்லறைக்குச் சென்று, அங்கே தனக்கு ஆறாவது இறுதிச் சுற்றுப் போட்டியாளருக்கு அணிவித்த கிரீடத்தைக் கல்லறையில் வைத்து கணவரை வணங்கினார். இந்தத் தருணம் பார்ப்பதற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. உண்மையில் அவரது இந்தச் செயல் அவரது கணவர் மீதுள்ள அன்பையும், நிகழ்ச்சிக்கு வரும்படி ஊக்கப்படுத்தியதற்காக அவர் காட்டும் நன்றியையும் வெளிப்படுத்துவதாக இருந்தது.
சரிகமப கிராண்ட் பினாலே
சரிகமப நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசனின் இறுதியை எட்டியுள்ளது. இறுதிச் சுற்றுக்குத் தேர்வான ஆறு போட்டியாளர்களில் யார் வெற்றிபெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த கிராண்ட் பினாலே நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications