சரிகமப 5 டைட்டில் வாய்ப்பை இழந்த தேவயானி மகள் இனியா! மேடையில் கண்கலங்க சொன்ன வார்த்தை! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல இசை நிகழ்ச்சியான 'சரிகமப சீனியர் சீசன் 5 தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பம் முதலே ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளான போட்டியாளர்களில், நடிகை தேவயானியின் மகள் இனியாவும் ஒருவர். ஆனால், பலரின் எதிர்பார்ப்பையும் மீறி, இனியா இறுதிப் போட்டியாளர்கள் வரிசையில் தேர்வாகவில்லை.
சரிகமப நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே இனியா மீது சில சலசலப்புகள் இருந்து வந்தன. "இனியாவின் பாடல் பெரிய அளவில் சுவாரஸ்யமாக இல்லை, ஆனால் ஜீ தமிழ் எப்படியாவது அவருக்கு டைட்டில் கொடுத்து, அவரைப் பிரபலமாக்கி விடுவார்கள்" என்றும், "இந்த நிகழ்ச்சியில் உண்மையான திறமை இருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் வெளியேற்றப்படுவார்கள்" என்றும் சிலர் விமர்சித்து வந்தனர்.

ஆனால், இந்த விமர்சனங்கள் அனைத்தையும் பொய்யாக்கும் வகையில், கடைசி இறுதிப் போட்டியாளரைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில், இனியா வெளியேற்றப்பட்டார். இதன் மூலம், "உண்மையான திறமைக்குத் தான் மரியாதை" என்று நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து, இந்தத் தேர்வைப் பாராட்டி வருகின்றனர்.
இறுதிப்போட்டியாளர்கள்
இறுதிக்கட்டமாக ஆறு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஆறாவது போட்டியாளரைத் தேர்வு செய்யும் போட்டி கடந்த வாரம் நடந்தது. அப்போது இனியா அருமையாகப் பாடியிருந்தாலும், கடைசியில் பவித்ரா ஆறாவது போட்டியாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இனியாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இனியாவும் அவருடன் மீதமிருந்த போட்டியாளர்களும் பவித்ரா தேர்வானதைச் சந்தோஷமாகக் கொண்டாடி, முதிர்ச்சியுடன் நடந்து கொண்டது ரசிகர்களின் மனதை வென்றது.
சோகத்திலிருந்து மீண்ட பவித்ரா
இறுதிப் போட்டிக்கு தேர்வான பவித்ராவின் வெற்றி மிகவும் உணர்வுப்பூர்வமானதாக இருந்தது. அவரது கணவர் சில மாதங்களுக்கு முன்புதான் விபத்தில் இறந்துவிட்டார். தனியாகப் பெண் குழந்தையைக் கவனித்து வரும் பவித்ரா, கணவர் இறந்த சோகத்தில் இருந்து வெளியே வருவதற்காகவும், பாடகியாக வேண்டும் என்ற அவரது கணவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
தேர்வானதும் பவித்ரா கண்கலங்கி, "எனக்கு வாழ்க்கையில் பல ஏமாற்றங்களும், அதிர்ச்சிகளும் கிடைத்திருந்தாலும், இந்த மேடை என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தைக் கொடுத்திருக்கிறது" என்று உருக்கத்துடன் பேசினார்.

டைட்டில் தேவையில்லை
இனியா இறுதிப் போட்டிக்குத் தேர்வாகாதது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தாலும், இனியா இதைச் சாதகமாகவே எடுத்துக்கொண்டார். "எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இந்த மேடை எனக்குன்னு ஒரு அங்கீகாரத்தையும், மக்கள் மத்தியில் ஒரு பிரபலத்தையும் கொடுத்திருக்கிறது, என்னுடைய பெற்றோர், என்னுடைய சந்தோஷத்திற்காக என்ன வேணாலும் செஞ்சுக்கோ என்று சொல்லிட்டாங்க. அதனால நான், மக்கள் முன்பு என்னுடைய திறமையால் பிரபலம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன், அது இப்போ நடந்துடுச்சு. எனக்கு இதுவே போதும்" என்று சந்தோஷமாகச் சொல்லி இருந்தார்.

தேவயானியின் பெருமிதம்
தனது மகளுக்காக ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியில் வந்து கலந்துகொண்ட நடிகை தேவயானியும், "என்னுடைய மகளுக்கு டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. என்னுடைய மகளின் திறமை இந்த அளவிற்கு வந்ததே எங்களுக்குப் பெருசு" என்று பாராட்டி, தனது மகளின் வளர்ச்சி குறித்துப் பெருமை தெரிவித்திருந்தார்.
இனியாவின் ஹிட்டான பாடல்கள் பலவும் இந்த சீசனில் பாராட்டுகளைப் பெற்றன. குறிப்பாக அவர் பாடிய மெலடி பாடல்களும், பாரம்பரியப் பாடல்களும் யூ டியூப்பில் அதிக வீசுகளை பெற்றன. இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தேவயானியின் மகளுக்கு விரைவில் நல்ல சினிமா வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று பலரும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications