"கூர பட்டு சேலை நீ வாங்கி வரும் வேல” இனியா பாடிய பாடலுக்கு, முகத்துக்கு நேராக கங்கை அமரன் சொன்ன வார்த்தை
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நடிகை தேவயானியின் மகள் இனியா பாடிய பாடலை கேட்டு இசை அமைப்பாளர் கங்கை அமரன் பாராட்டி இருக்கிறார். அதோடு பாடகர் மலேசியா வாசுதேவன் மகனான யுகேந்திரனும் இனியா பாடலை எழுந்து நின்று பாராட்டி இருக்கிறார்.
சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றுவிட்டாலே அதே போல மற்ற சேனல்களிலும் புது நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாடல் நிகழ்ச்சிகள் தற்போதைய இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதனாலயே ஒவ்வொரு சேனலிலும் ஒவ்வொரு பெயரிலும் பாடல் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

ஜீ தமிழில் சரிகமப என்ற பெயரில் சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பல போட்டியாளர்களுக்கு சினிமாவிலும் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சாமானிய மக்களின் திறமையால் அவர்களை சாதனையாளராக மாற்றுவதற்கு சரிகமப நிகழ்ச்சி முயற்சி எடுத்து வருகிறது.
சமீபத்தில் முடிவடைந்த சரிகமப ஜூனியர் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு இப்போது சினிமாவிலும் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதேபோல சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 28 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டாலும் இப்போது அதில் சில போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகை தேவயானியின் மகளும் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இது ஆரம்பத்தில் பலரையும் வியக்க வைத்தது. தேவயானியின் மகள் இனியா ஒவ்வொரு வாரமும் தன்னுடைய இனிமையான குரலால் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அம்மா மற்றும் அப்பா இருவருமே சினிமா பிரபலங்களாக இருந்தாலும் நான் என்னுடைய சொந்த முயற்சியால் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று இனியா எடுத்திருக்கும் முயற்சியை மக்களும் பிரபலங்களும் பாராட்டி இருக்கிறார்கள்.
இந்த வாரத்தில் கங்கை அமரன் ரவுண்டு நடைபெறுகிறது இதில் கங்கை அமரனின் ஹிட்டான பல பாடல்களை போட்டியாளர்கள் பாடுகிறார்கள். அந்த வரிசையில் தேவயானியின் மகளான இனியாவும் எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் இடம் பெற்ற "ஆசையில பாத்திகட்டி" என்ற பாடலை பாடியிருக்கிறார். அதில் "கூர பட்ட சேலை நீ வாங்கி வரும் வேல" என்ற வரிகளை பாடியதை கேட்டு அமரன் பாராட்டி இருக்கிறார். அதுபோல இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த பாடகரும் நடிகருமான யுகேந்திரன் எழுந்து நின்று இனியாவின் பாடலுக்கு பாராட்டி இருக்கிறார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications