SaReGaMaPa: சரிகமப வெற்றியை இழந்த இனியா.. டைட்டில் வின்னர் பற்றி உருக்கமான போஸ்ட்! தேவயானி மகள்னு நிரூபிச்சிட்டாங்க
சென்னை: ஜீ தமிழின் மிகப் பிரபலமான பாடல் போட்டியான சரிகமப சீனியர் சீசன் 5 மாபெரும் இறுதிச் சுற்றுடன் (ஃபினாலே) வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. இறுதிச் சுற்றில் சுஷாந்திகா டைட்டில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம்தான். இந்த நிகழ்ச்சிப் போட்டியாளர்களில் பலரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை தேவயானியின் மகளான இனியா.

சர்ச்சையில் இனியா
ஆரம்பத்தில் இருந்தே சரிகமப நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக இனியா தான் வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதே சமயம், அவருடைய குரலைவிட இன்னும் சில போட்டியாளர்களின் குரல் நன்றாக இருப்பதாகவும், இனியாவுக்கே வெற்றியைக் கொடுத்து அவரைப் பிரபலப்படுத்தத் தான் இந்த நிகழ்ச்சி மற்ற திறமையானவர்களை வெளியேற்றுகிறது என்றெல்லாம் சர்ச்சைகள் எழுந்து வந்தது.
பெற்றோரின் பாராட்டு
நடிகை தேவயானி மற்றும் இயக்குநர் ராஜகுமாரன் ஆகியோரின் மகளாக இருந்தாலும், இனியா தன்னுடைய திறமையின் மூலமாகவே வெற்றிபெற முயற்சிக்கிறார் என்ற பாராட்டு இருந்தது. தன்னுடைய மகளின் வெற்றிக்காக தேவயானி ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகவும் பலர் பாராட்டி வந்தனர்.

இளையராஜா மகள் குரல்
இனியாவின் பாடல் ஆரம்பத்தில் அதிகமாகப் பாராட்டும் வாங்கி வந்தது. குறிப்பாக, அவர் பாடிய 'மயில் போல பொண்ணு ஒன்னு' என்ற பாடல் பெரிய அளவில் பெயர் வாங்கியது. அவருடைய குரல் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரணி குரலை போலவே இனிமையாக இருக்கிறது என்றெல்லாம் பலரும் பாராட்டினர்.
உருகிய இனியா
இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், கடைசியில் இறுதி சுற்றுக்குத் தேர்வு ஆன போட்டியாளர்களில் இனியா தேர்வு ஆகாவிட்டாலும், மக்கள் அவருக்கு கொடுத்த அன்புக்காக உருகி பேசியிருந்தார்.
"நான் டைட்டில் வெற்றிபெறவில்லை என்றாலும் மக்கள் எனக்குக் கொடுக்கும் அன்பு அதிகமாக இருக்கிறது. இதைப் பார்க்கும்போது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. இந்த அளவுக்கு மக்கள் கொண்டாடும் அளவுக்கு நான் தகுதியுள்ளவளா என்பது எனக்கு ஆச்சரியமாகவும் இருக்கிறது"என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியிருந்தார்.

வெற்றியாளருக்கு வாழ்த்து
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மாபெரும் இறுதி சுற்றில் வெற்றிபெற்ற எல்லா போட்டியாளர்களுக்கும் இனியா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். குறிப்பாக, டைட்டில் வெற்றிபெற்ற சுஷாந்திகாவிற்கு அவர் வாழ்த்துத் தெரிவித்து போட்ட பதிவு (போஸ்ட்) இணையத்தில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த பதிவில் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சுஷாந்திகா இந்த வெற்றிக்கு நீங்கள் முழுமையாக தகுதியானவர் எப்போதும் போல நீங்கள் ஆடிக்கொண்டே இருங்கள் என்று எலயா சொல்லி இருக்கிறார்.
சர்ச்சைகள் பல இருந்தாலும், வெற்றியாளரை மனதாரப் பாராட்டிய இனியாவின் இந்தச் செயல், ரசிகர்கள் மத்தியில் அவருக்கு மேலும் நல்ல பெயரை வாங்கித் தந்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications