ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதல்.. சரிகமபா பாடகருக்கு நடந்த கொடுமை.. சாதிவெறிக்கு தந்தையும் பலி
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி ஷோவான சரிகமபா சீசன் இரண்டில் பங்கேற்ற பிரபல பாடகரான பிரகாஷ் கடந்த நவம்பர் 12. ஆம் தேதி தீபாவளி அன்று சிலரால் பயங்கரமாக தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்.
26 வயதான சரிகமபா பாடகர் பிரகாஷ் தன்னுடைய உறவினரோடு தீபாவளிக்கு பட்டாசு வாங்குவதற்காக வெளியே சென்று இருந்த நேரத்தில் பக்கத்து ஊரை சார்ந்த மாற்று சமூகத்தினர் வழிமறித்து பிரகாஷை தாக்கியதாக கூறப்படுகிறது.

பிரகாஷை வழிமறித்த சிலர் சாதிய தீண்டாமை வார்த்தைகளில் பேசி பீர் பாட்டிலால் தலையில் 15 முறை கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்திருந்ததாக பிரகாஷ் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். மேலும் பிரகாஷ் பற்றிய சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி போன்ற சேனல்களில் பல ரியாலிட்டி ஷோக்கள் புதிது புதிதாக தொடங்கப்பட்டு வருகிறது இதில் கலந்துகொள்ளும் நபர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து விடுகிறார்கள் அந்த வகையில் தான் இப்போது ஜீ தமிழில் பல ரியாலிட்டி ஷோக்களும் ஒளிபரப்பாகி வருகிறது.
அதில் பலருடைய மனங்கவர்ந்த நிகழ்ச்சியாக சரிகமபா நிகழ்ச்சி இருந்து வருகிறது. இதில் தன்னுடைய பாடல் திறமையை வெளி உலகத்திற்கு காட்டி பலர் வெள்ளி திரைகளிலும் ஜொலித்து வருகின்றனர். அந்த வரிசையில் பல போராட்டங்களுக்குப் பிறகு சரிகமபா சீசன் இரண்டில் கலந்து கொண்டவர்தான் பிரகாஷ். பிரகாஷின் சொந்த ஊரு புதுக்கோட்டை மாவட்டம் ஆயிப்பட்டி. இந்த கிராமத்தில் அண்ணா நகரை சேர்ந்தவர் தானாம்.
பிரகாஷின் தந்தை பிரகாஷ் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு முறை வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது மாற்று சமூகத்தினர் கல் எடுத்து எரிந்ததில் மரணம் அடைந்து விட்டார் என்று பேட்டி ஒன்றில் பிரகாஷ் கூறி இருக்கிறார் அதற்கு பிறகு தன்னுடைய தாய்தான் தன்னை வளர்த்து வந்தார் என்று அந்த பேட்டியில் பிரகாஷ் கூறியிருக்கிறார்.
அதற்குப் பிறகு ஒரு சில வருடங்களிலே தன்னுடைய அம்மாவிற்கு ஒரு விபத்தில் கைகால் செயலிழந்து போய்விட்டதாம். அதற்குப் பிறகு தன்னுடைய அம்மாவின் அப்பா மற்றும் அம்மா தான் தன்னை பார்த்து வருவதாக பிரகாஷ் கூறியிருக்கிறார். விவசாய குடும்பத்தை சார்ந்த பிரகாஷ் தன்னுடைய பாட்டு திறமையின் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு பாடகராக மாறி இருக்கிறார்.
அதற்கு பிறகு 2019 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமபா ஷோவில் சீசன் இரண்டில் ஒரு போட்டியாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார். இதில் இவர் பாடிய பாடலை கேட்டு ஒரு முறை யுவன் இவரை மேடையில் கட்டித்தழுவி இவரை பாராட்டி இருப்பார். அந்த வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் பருத்திவீரன் திரைப்படத்தில் இடம் பெற்ற சண்டாளி உன் பாசத்தால எனும் பாடலை தத்ரூபமாக தன்னுடைய குரலால் பாடி இருந்த பிரகாஷை யுவன் மேடையில் பாராட்டி இருப்பார். இப்படிப்பட்ட நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது நவம்பர் 12ஆம் தேதி அன்று பிரகாஷ் தன்னுடைய உறவினர் கபிலன் உடன் தீபாவளிக்கு காய்கறிகள் மற்றும் பட்டாசு வாங்குவதற்காக பைக்கில் வரப்பூர் என்ற ஊருக்கு சென்றிருந்தாராம்.
பிறகு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்களை பக்கத்து ஊரை சார்ந்த இரண்டு நபர்கள் பின்தொடர்ந்து இருக்கின்றனர். அதைத்தொடர்ந்து மேலுடையான் பட்டி நாலு மூலை ரோடு என்ற இடத்தில் பிரகாஷை பின் தொடர்ந்த இரண்டு நபர்கள் பிரகாஷ் உடைய சாதியை சொல்லி திட்டினார்களாம்.
அப்போது பிரகாஷூம், கபிலனும் அவர்களை புறக்கணித்துவிட்டு மேலும் பைக்கில் செல்ல முயன்ற போது பிரகாஷை பின்தொடர்ந்த நபர்கள் மேலும் ஒரு சிலரை சேர்த்துக் கொண்டு பிரகாஷ் மற்றும் கபிலன் மீது கற்களை வீசி தாக்கியதாகவும் பீர் பாட்டில்களால் தாக்கியதாகவும் பிரகாஷ் கடுமையான காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து நவம்பர் 14ஆம் தேதி அன்று பிரகாஷ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்த நிலையில் பிரகாஷ் உடைய வீடியோஸ் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications